`ஹேண்ட் பிரேக் போடவில்லை..!’ – ஓட்டுநர் இல்லாமலே 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற சரக்கு ரயில்

திரைப்படங்களில் தான் ரயில்கள் ஓட்டுநர் இல்லாமல் ஓடுவதை சில நேரம் பார்த்து இருப்போம். ஆனால் பஞ்சாப்பில் அது போன்ற ஒரு உண்மை சம்பவம் நடந்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து காஷ்மீருக்கு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் பதன்கோட் ரயில் நிலையத்திற்கு வந்தது. ரயில் கல் பாரம் ஏற்றி வந்தது. ரயில் நிலையத்தில் நின்றதும் டிரைவர் வண்டியில் இருந்து இறங்கி சென்றார். அந்நேரம் அவர் ரயிலினை ஹேண்ட் பிரேக் போட்டு நிரந்தரமாக நிறுத்தி வைக்காமல் இறங்கிச்சென்றிருக்கிறார். ரயில் சற்று இறக்கமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் டிரைவர் சென்றவுடன் ரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. ரயில் அப்படியே படிப்படியாக வேகம் எடுத்துக்கொண்டது. ரயில் ஒரு கட்டத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. உடனே ரயில் செல்லும் வழித்தடத்தில் இருந்த அனைத்து ரயில் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டது.

ரயிலில் 53 பெட்டிகள் இருந்தது. தண்டவாளத்தை யாரும் கடக்காத வண்ணம் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர். ரயில் 5 ரயில் நிலையங்களை கடந்து சென்றது. இறுதியில் ரயில் தண்டவாளத்தில் மரத்தடுப்புகளை அமைத்து அதிகாரிகள் ரயிலை நிறுத்தினர். இச்சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கடும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. சரக்கு ரயில் டிரைவர் இல்லாமல் ஓடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் டிரைவர் இல்லாமல் சென்ற சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.