விஷால், லைகா நிறுவனத்தின் வரவு செலவு ஆராய ஆடிட்டர் நியமனம்

விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையை விஷால் நடித்து, தயாரித்து வெளிவரும் படங்களின் மூலம் திருப்பித் தர வேண்டும் என்பது ஒப்பந்தமாகும். ஆனால் ஒப்பந்தப்படி விஷால் திருப்பிக் கொடுக்காததால் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த … Read more

Big budget 2024: 2024ம் ஆண்டில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்தியா படங்கள்.. லிஸ்ட் இதோ!

சென்னை: சினிமாவில் பிரம்மாண்டங்களை நம்பி படம் எடுப்பவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். ஷங்கர், ராஜமௌலி என இந்தப் பட்டியலின் நீளம் அதிகம். ராஜமௌலி துவங்கிவைத்த ட்ரெண்ட், தற்போது ஏராளமான இயக்குநர்கள் பிரம்மாண்டத்தின் பக்கம் சாய்ந்து வருகின்றனர். பாகுபலி படத்தை துவங்கி தற்போது அதிகமான வரலாற்று படங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழிலேயே அடுத்தடுத்த வரலாற்று கதைக்களங்களில்

உலக வங்கியின் விவசாயத்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விவசாயத்துறை நவீனமயமாக்கல் வேலைத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (02) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு, மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விவசாயத்துறை நவீனமயமாக்கல் நிகழ்ச்சித் திட்டம் மற்றும் அதன் நிலைப்பாடு குறித்து மாகாண பிரதித் திட்டப் பணிப்பாளர் ஆர். ஞானச்செல்வம் … Read more

“நான் என் அம்மாவைக் கொன்றுவிட்டேன்!" – போலீஸில் சரணடைந்த 17 வயது சிறுவன் சொன்ன அதிர்ச்சிக் காரணம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 17 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய அம்மாவைக் கொன்றுவிட்டதாக போலீஸில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட சிறுவன் முதலில் நேற்றைய தினம் காலை ஒன்பது மணியளவில், கே.ஆர்.புரம் காவல் நிலையத்துக்குள் நுழைந்து, `இன்ஸ்பெக்டர் இருக்கிறாரா?’ என்று அங்கிருந்த மற்ற அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, `இன்ஸ்பெக்டர் இன்னும் வரவில்லை, 10 மணிக்குதான் வருவார்’ என்று சிறுவனிடம் கூறிய போலீஸ் அதிகாரியொருவர், `எதற்காக இங்கு வந்தாய்?’ எனக் கேட்டிருக்கிறார். கொலை அதற்குப் … Read more

“புயல் வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காமல் ஓரவஞ்சனை” – திமுக எம்.பி.க்கள் வரும் 8 ஆம் தேதி கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம்

சென்னை: மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ளநிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஓரவஞ்சனையைக் கண்டித்து எதிர் வரும் பிப்ரவரி 8 அன்று காலை 10.00 மணிக்கு திமுக மற்றும் தோழமைக் எம்.பி.க்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற குழுத் தலைவரான … Read more

எம்எல்ஏ.,க்களிடம் பாஜக பேரம் பேசியதாக குற்றஞ்சாட்டிய விவகாரம்: கேஜ்ரிவாலுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி நோட்டீஸ் வழங்க டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் குழு கேஜ்ரிவாலின்அதிகாரபூர்வ இல்லத்துக்கு சென்றுள்ளது. குற்றப்பிரிவு போலீஸாரின் நோட்டீஸினை ஏற்று அதற்கு பதில் அளிக்கத் தயாராக இருப்பதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் போலீஸார் எந்த நோட்டீஸையும் வழங்கவில்லை என்றும் அவர்கள் வரும் போதே ஊடகத்தினரை அழைத்து வந்தனர். காவல்துறை அவதூறு … Read more

மானிய விலையில் பாரத் அரிசி… கிலோ ₹29 மட்டுமே… அடுத்த வாரம் முதல் விற்பனை!

பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையிலும், மத்திய அரசு பாரத் அரிசி என்னும் திட்டத்தை தொடக்கியுள்ளது.

Animal: "அனிமல் படம் பார்த்துட்டு தூங்கினா கேவலமான கனவா வருது!" – லட்சுமி ராமகிருஷ்ணன்

ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படம் ஆணாதிக்க சிந்தனையோடு இருப்பதாக கடுமையான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. திரை பிரபலங்களே நேரடியாகவும் மறைமுகமாகவும் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனும் தனது எக்ஸ் பக்கத்தில் ‘படம் நல்லாருக்கு… ஆனா, ரொம்ப வக்கிரமா இருக்கு’ என்று கிண்டலாக விமர்சித்துள்ளார். அவரைத் லட்சுமி ராமகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம்… ”அனிமல் படத்தைப் பார்த்தேன். வக்கிரத்தின் உச்சம்னுதான் சொல்லணும். சமூகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தினந்தினம் … Read more

கருப்பு, மஞ்சள், வெள்ளை.. ஒவ்வொரு நம்பர் பிளேடுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா?

Vehicle Number Plate Color: உலக அளவில் இந்தியா மிகப்பெரிய கார் விற்பனை சந்தையாக உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 41 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் விற்பனை ஆகி உள்ளது.  இவ்வளவு கார்கள் விற்பனை ஆகி இருப்பதை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட வேலையில் இருப்பவர்கள் அல்லது ஒரு துறையை சார்ந்தவர்கள் மட்டும் கார்களை வாங்கி இருக்க மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அனைத்து துறைகளில் வேலை செய்பவர்களும், சொந்த தொழிலில் ஈடுபடுபவர்களும் தங்களது … Read more