சென்னை: இயக்குநர் மற்றும் நடிகர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார் கௌதம் மேனன். இவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் பல்வேறு காரணங்கள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக ரிலீசாவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதை நினைத்து முடங்கிப் போகாமல் தொடர்ந்து இந்தப் படத்தை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் கௌதம்