மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; ஜானிக் சினெர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜானிக் சினெர் (இத்தாலி), சக நாட்டவரான லோரென்சோ சோங்கோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய சினெர் 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லோரென்சோ சோங்கோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags … Read more

முன்னாள் காதலியை கத்தியால் குத்திய இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை – இங்கிலாந்து கோர்ட்டு அதிரடி

லண்டன், கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் சோனா (வயது 23). இவர் 2017ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள கல்லூரியில் கல்வி பயின்றார். அப்போது அதே கல்லூரியில் படித்த ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீராம் அம்பர்லாவும் (வயது 23) சோனாவும் காதலித்து வந்தனர். பின்னர், இருவரும் மேல்படிப்பிற்காக கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து சென்றனர். கிழக்கு லண்டனில் உள்ள கல்லூரியில் இருவரும் மேற்படிப்பு படித்தனர். பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே சோனா கிழக்கு லண்டனில் உள்ள ஐதராபாத் வாலா என்ற உணவகத்தில் பகுதிநேரமாக … Read more

“தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை” – இபிஎஸ் விமர்சனம்

மேட்டூர்: “தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) காலை திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழகத்தில் இதற்கு முன்பாக பலபுயல்கள் … Read more

உத்தராகண்ட்: நைனிடால் நகரை நெருங்கிய காட்டுத் தீ; களமிறங்கிய ராணுவம்

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த, இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தை அம்மாநில அரசு நாடியுள்ளது. மேலும் காட்டுத் தீ விபத்து குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலம், ஹல்த்வானி மாவட்டத்தில் நைனிடால் மலைப் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளதால், காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. நைனிடால் வனத்துறையினர், 36 மணி நேரத்துக்கும் மேலாக … Read more

சிவசக்தியாக உருமாறிய தமன்னா

தெலுங்கில் கடந்த 2022ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ஒடேலா ரயில்வே ஸ்டேஷன். இந்த படத்தில் இரண்டாம் பாகமாக தற்போது 'ஒடேலா 2' என்கிற படம் தயாராகிறது. . இந்த படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். முதல் பாகத்தில் பூஜிதா பொன்னாடா, ஹெபா படேல் என பெரிய அளவில் பிரபலம் இல்லாத கதாநாயகிகள் நடித்திருந்த நிலையில் இந்த படம் எதிராபாராத விதமாக வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு இன்னும் பெரிய ரீச் கிடைக்கும் விதமாக தமன்னாவை ஒப்பந்தம் … Read more

அந்த எச்ச தனத்தை.. நான் செய்ய மாட்டேன்.. அதிரடியாக பதிலளித்த சித்தார்த்!

சென்னை: நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழி ரசிகர்களிடமும் பிரபலமான நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்து அவரை திக்குமுக்காட வைத்துள்ளார். நடிகர் சித்தார்த்

கர்நாடகத்தில் ஒரு வாக்குச்சாவடியில் 29-ந்தேதி மறுவாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று(26-ந்தேதி) நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட வாக்குப்பதிவு வரும் மே 7-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று கர்நாடகாவின் சம்ராஜ்நகர் தொகுதிக்கு உட்பட்ட ஹானூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவின்போது இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது. முன்னதாக அங்குள்ள இண்டிகானத்தா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் கிராமத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் … Read more

மிடில் ஓவர்களில் நாங்கள் இன்னும் நிறைய முயற்சி செய்திருக்க வேண்டும் – ஹர்திக் பாண்ட்யா

டெல்லி, ஐ.பி.எல் தொடரில் நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய – டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 257 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர் மெக்கர்க் 27 பந்தில் 84 ரன்கள் அடித்தார். இதையடுத்து 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற … Read more

செங்கடலில் பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் – அமெரிக்கா தகவல்

வாஷிங்டன், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். அதன் எதிரொலியாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்றைய தினம் செங்கடல் வழியாக சென்ற ‘ஆண்ட்ரோமேடா ஸ்டார்’ என்ற பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா சரேயா அறிவித்தார். இந்த … Read more

22 மாவட்டங்களுக்கு ரூ.150 கோடியில் குடிநீர் விநியோகம்: முதல்வர் ஸ்டாலின் @ கோடை கால நடவடிக்கை

சென்னை: “தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (27.4.2024) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு … Read more