டெல்லி புதிய எம் பிக்களில் 27 பேர் தண்டனை பெற்று 251 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய பகுப்பாய்வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 மக்களவை உறுப்பினர்களில் 251 (46 சதவீதம்) பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 27 பேர் தண்டனை பெற்றுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இதுவே கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது முதல் முறையாகும். […]