காதுல பூ.. நாக்க நீட்டி க்யூட் அள்ளுது.. ஷிவானி நாராயணன் சும்மா ஏஞ்சல் போல இருக்காரே!

சென்னை: சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான ஷிவானி நாராயணன் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். அப்போதே 2 மில்லியன் ரசிகர்களை கொண்டிருந்த ஷிவானி நாராயணன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களையும் நடனமாடும் வீடியோக்களையும் வெளியிட்டு தற்போது 4 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றியுள்ளார். கமல்ஹாசன்

மஹிந்திராவின் 5 டோர் தார் ராக்ஸ் மைலேஜ் எவ்வளவு தெரியுமா..!

மஹிந்திரா நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற தார் ராக்ஸ் ஐந்து டோர் கொண்ட லைஃப் ஸ்டைல் ஆஃப் ரோடு மாடலின் மைலேஜ் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் TGDi மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் என இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்கள் பெற்றுள்ளன. RWD மட்டும் பெற்று வந்துள்ள 175 bhp பவர் மற்றும் 380 NM டார்க் வெளிப்படுத்துகின்ற 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் ஆறு வேக மேனுவல் மற்றும் … Read more

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 552 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் நெடுந்தீவின் உறிமுனாய், வெள்ளியல் மற்றும் சிலாவத்துறை கொண்டச்சிக்குடா கரையோரங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் 552 கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் 2024 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கல்பிட்டி உச்சமுனை கடற்கரையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் … Read more

8-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை; கேந்திரிய வித்யாலயா பள்ளி ஓவிய ஆசிரியர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கோணம் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பெரும்பாலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ராணுவத்தில் பணியாற்றுவோரின் குழந்தைகள் அதிகமாக படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமச்சந்திர சோனி என்பவர் பணிபுரிந்துவந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திர சோனி கடந்த சில  தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில்  எட்டாம் வகுப்பு … Read more

சென்னை மாநகராட்சி பணிகளில் தனியார்மயத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்: கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 300 பேர் கைது

சென்னை: சென்னை மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரிப்பன் மாளிகை முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சியில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணிகள் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியில் உள்ள பல்வேறு துறை பணிகளும் தனியார் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தற்போது ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களிலும் தூய்மைப் பணிகளை தனியாரிடம் வழங்க மாநகராட்சி … Read more

‘பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் தூக்கு; அடுத்த வாரம் சட்டம்’ – மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் அடுத்த வாரம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால், தங்கள் அரசு நிறைவேற்றி அனுப்பும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி தர மாட்டார் என்பது தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி நிறுவன தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க … Read more

நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய அப்டேட்: மதுவுக்கு காத்திருந்த ஏமாற்றம்.. வார்த்தையால் வந்த சோகம்..

Nenjathai Killathe Today (28.08.2024) Episode: இன்றைய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் – ரூ. 89.19 கோடி சொத்துகளும் அமலாக்கத்துறை முடக்கம்

Jagathrakshakan ED Case: சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதாக அமலாக்கத்துறை இன்று அறிவித்துள்ளது.

நீண்ட நாட்களாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரம் நீண்ட நாட்களாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து மாநகராட்சி எக்ஸ் தளத்திலும், 1913 என்ற புகார் எண்ணிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரங்களில் பழுதடைந்த இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள். திருடுடு வாகனங்கள் போன்றவை நிறுத்தி வைப்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது.  இதனால் அந்த பகுதிகள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. இதுபோன்ற வாகனங்களை அகற்ற வேண்டும் என … Read more

இந்திய மாணவர்களுக்கு செக் வைத்த ஆஸ்திரேலியா, கனடா.. பின்னணியில் இவ்வளவு அரசியல் இருக்கா

கேன்பெரா: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து சராசரியாக 10 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அமெரிக்கா, யூகே, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள கல்லூரிகளுக்கு உயர்கல்வி படிக்க செல்கிறார்கள். இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா,தென்கொரியா, சவுதி அரேபியா நாடுகளில் இருந்தும் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க செல்கிறார்கள். இந்நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை சில நாடுகள் தடை Source Link