நீதித்துறை அதிகாரிகள் இந்தியாவில் மேற்கொள்ள இருந்த பயிற்சியை ரத்து செய்தது வங்கதேசம்

டாக்கா: இரு நாட்டு ஒப்பந்தப்படி வங்கதேச நீதித்துறை அதிகாரிகள் இந்தியாவில் மேற்கொள்ள இருந்த பயிற்சியை அந்நாட்டு ரத்து செய்துள்ளது. வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தபோது, அந்நாட்டின் நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. பயிற்சித் திட்டங்களுக்கான அனைத்துச் செலவையும் இந்திய அரசே ஏற்க ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமி மற்றும் மாநில நீதித்துறை அகாடமியில் பயிற்சி … Read more

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்: கார்த்திக் vs சாமுண்டீஸ்வரி.. சந்திராகலாவுக்கு சிக்கல்

Karthigai Deepam Today Episode: கலசத்துடன் வந்த கார்த்திக், கம்பீரமாய் நின்ற சாமுண்டீஸ்வரி.. சந்திரா கலாவுக்கு சிக்கல் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

ஓய்வூதியர் அடையாள அட்டை புதிய அப்டேட் தொடர்பாக தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

Pensioners Identity Cards New Update: தமிழகத்தை சேர்ந்த அரசு ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை குறித்து முக்கியமான புதிய தகவல் வந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி 14,104 சிறப்பு பேருந்துகள்! அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும்  14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது   பொங்கல்பண்டிகையையொட்டி, தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை உள்ளதால்,  நகர்ப்புறங்களில் வசிக்கும் பல லட்சம்பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக  சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதுபோல தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை … Read more

இளம்பெண்ணை கடத்த முயன்ற ஆட்டோ டிரைவர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு தனிச்சந்திராவை சேர்ந்தவர் அசார் கான். இவரது மனைவி கடந்த வியாழக்கிழமை இரவு ‘நம்ம யாத்ரி’ செயலி மூலம் உரமாவில் இருந்து தனிச்சந்திரா செல்ல ஒரு ஆட்டோவை முன்பதிவு செய்து பயணித்தார். ஆனால் ஆட்டோ டிரைவர் தனிச்சந்திரா செல்லாமல் வேறு பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. உடனே சுதாரித்து கொண்ட அந்த பெண், ஆட்டோவை நிறுத்தும்படி கூறினார். ஆனால் டிரைவர் கேட்கவில்லை. மாறாக ஆபாச சைகை காண்பித்தப்படி ஆட்டோவை ஒட்டினார். அப்போது தான், டிரைவர் … Read more

பும்ரா – கான்ஸ்டாஸ் மோதல் விவகாரம்: ஆஸி.பயிற்சியாளர் கருத்துக்கு கம்பீர் பதிலடி

சிட்னி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை இந்திய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அவர் ஒரு பந்தை வீசுவதற்கு சில அடி ஓடி வந்தபோது, பேட்ஸ்மேன் கவாஜா இன்னும் தயாராகவில்லை என நடுவர் சிக்னல் … Read more

உக்ரைன் மீது கடந்த வாரத்தில் 600 ஆளில்லா விமான தாக்குதல்கள்: ஜெலன்ஸ்கி

கீவ், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஏறக்குறைய போரானது 3-ம் ஆண்டை நெருங்கி வருகிறது. கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை … Read more

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் நுட்பங்கள் மற்றும் வசதிகளின் விபரம் வெளியானது

வரும் ஜனவரி 17 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள முக்கிய வசதிகள் மற்றும் பவர் தொடர்பான விபரங்கள் என அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, க்ரெட்டா எலெக்ட்ரிக் அறிமுகம் செய்யப்பட்டு பேட்டரி தொடர்பான விபரங்கள் மற்றும் புக்கிங் நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. க்ரெட்டா பவர் விபரம் 473 கிமீ ரேஞ்ச் வழங்கும் 51.4 kWh பேட்டரி கொண்ட டாப் … Read more

திருப்பத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்து; சுட்டிக்காட்டிய விகடன்- நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் அருகே, நான்குவழிச் சாலை அமைத்துக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், சென்னை செல்ல வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் நிலையில், விபத்துகள் தொடர்ந்து நேர்ந்து வருகிறது. முக்கியமாக வாகனங்கள் செல்லும் இடத்தில் இரண்டு பக்கமும் ரெட்டியூர், சின்னகம்மியம்பட்டு, குன்டிமாரியம்மன் வட்டம், காந்தி நகர் போன்ற வெவ்வேறு ஊர்கள் அமைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் வாகன ஓட்டிகளைத் தாண்டி பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் … Read more

சட்டப்பேரவையில் நடந்தது என்ன? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்

சென்னை: “சட்டப்பேரவைக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கைகளில் பதாகைகளை வைத்திருந்தனர். அண்ணா பல்கலை. விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று கேட்டனர். அண்ணா பல்கலை. வேந்தராக ஆளுநர் இருப்பதால், அவருக்கு எதிராக இந்த போராட்டம் செய்தார்களா? என்று எனக்கு தெரியவில்லை. அதுகுறித்து அவர்கள் யாரும் என்னிடம் சொல்லவும் இல்லை” என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (ஜன.6) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது … Read more