1984 சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 88 பேருக்கு வேலைவாய்ப்பில் சலுகை

புதுடெல்லி: கடந்த 1984-ல் நடந்த சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 88 பேருக்கு வேலைவாய்ப்பில் சலுகை தர டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்படி, கல்வித் தகுதி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல வயது வரம்பு 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் பணியில் பல்நோக்கு திறன் ஊழியர் (எம்டிஎஸ்) பணிக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக, கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி மத்திய உள் துறை அமைச்சகம் … Read more

விஜய் படத்தில் நடித்து மன அழுத்தம்தான் மிச்சம்! மீனாட்சி சௌத்ரி பகீர் பேச்சு..

Meenakshi Chaudhary About The GOAT Movie : தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மீனாட்சி செளத்ரி. இவர் விஜய்யுடன் தி கோட் படத்தில் நடித்தது குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   

மாணவி வன்கொடுமை வழக்கு: "பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்கணும்…" – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

‘அமரன்’ பட ஹிட்டிற்கு பிறகுச் சிவகார்த்திகேயன், சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் சிவகார்த்திகேயனின் 25-வது படம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100வது படம். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவிருக்கிறது. இதற்கிடையில் சின்ன ஓய்வுக் கிடைத்துள்ளதால் முருகனின் அறுபடை வீட்டிற்கும் ஆன்மீகப் பயணம் செல்லவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இன்று (ஜனவரி 6) திருச்செந்தூர் முருகன் கோவிலிருந்து ஆரம்பித்து திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, பழனி, சுவாமிமலை, திருத்தணி என அடுத்தடுத்துச் செல்லவிருக்கிறார். சிவகார்த்திகேயன் அவ்வகையில், இன்று திருச்செந்தூரில் சாமி … Read more

6,36,12,950 வாக்காளர்கள்: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாநிலம்  முழுவதும், மொத்தம்  6,36,12,950 (ஆறு கோடியே, 36லட்சத்து, 12ஆயிரத்து 950 பேர்) வாக்காளர்கள் உள்ளனர்.  சென்னையில் மட்டும், 40,15,878  (40லட்சத்துக்கு 15ஆயிரத்து 878 பேர்) உள்ளனர். தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டிய பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அதன்படி,   தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலை … Read more

அடர் பனி மூட்டம்: டெல்லியில் விமான சேவை கடும் பாதிப்பு

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் அங்கு விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடர் பனி காரணமாக டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. அடர் பனி மூட்டம் போர்வை போல இருந்ததால் டெல்லி விமான நிலையத்தில் பார்க்கும் திறன் மிகவும் குறைவாக இருந்ததாகவும், இதனால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தினத்தந்தி Related … Read more

ஓய்வுக்கு பிறகு ரோகித் ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம் – ஆஸி.முன்னாள் வீரர் கிண்டல்

சிட்னி, இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதன் கடைசி போட்டியில் மோசமான பார்ம் காரணமாக ரோகித் விலகிய நிலையில், பும்ரா கேப்டனாக செயல்பட்டார். மோசமான பார்ம் காரணமாக ரோகித் தாமாக முன்வந்து இந்த போட்டியிலிருந்து ஓய்வு எடுத்ததாக கூறப்பட்டது. முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் தலைமையில் … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 6.30 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 170 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35.81 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.81 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் சேதம் குறித்தும் இதுவரை … Read more

நாற்பது ஆண்டுகால முதலிடத்தை டாடா பஞ்ச் காரிடம் இழந்த மாருதி சுசூகி..!

டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பஞ்ச் சிறிய ரக எஸ்யூவி மூலம் முதன்முறையாக இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் டாடா முதலிடத்தை 2024 ஆம் ஆண்டு விற்பனையில் எட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை விற்பனை செய்யப்பட்ட கார்களில் டாடா பஞ்ச் விற்பனை எண்ணிக்கை 2,02,030 ஆக பதிவு செய்துள்ளது. நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகியின் வேகன் ஆர் இரண்டமிடத்தில் 1,90,855 ஆக எண்ணிக்கையுடன், 190,091 … Read more

TN Assembly: 2022 முதல் இப்போது வரை… தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை சர்ச்சையும் காரணமும்!

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழ்நாடு சட்டசபையில் ‘ஆளுநர் உரை’ என்றாலே சர்ச்சையாகத் தான் உள்ளது. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என் ரவி. அப்போதிருந்து இன்று வரையான ஆளுநர் உரை வரலாற்றை சற்று பார்ப்போம்… 2022-ம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்ட முழு ஆளுநர் உரையையும் எந்த மாறுதலும் இல்லாமல், எந்த கருத்து வேறுபாடு காட்டாமல் முழுவதுமாக படித்தார். இது மட்டும் தான், அவர் கருத்து வேறுபாடில்லாமல் படித்த முதலும், கடைசியுமான உரை. … Read more

‘தேசிய கீதத்துக்கு அவமதிப்பு’ – சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் ஆளுநர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் இன்று (ஜனவரி 6) ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் … Read more