பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று? – கர்நாடக சுகாதார துறை விளக்கம்

பெங்களூரு: பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அது தொடர்பாக கர்நாடக சுகாதார துறை விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (எச்எம்பிவி) வேகமாக பரவி வருகிறது. இதனை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், இப்போதைக்கு இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் 8 மாத கைக்குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாநில சுகாதாரத் துறை வட்டாரம், … Read more

பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

உள்நாட்டு அரசியல் சிக்கல்களால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்றைக்கு தனது பதவி விலகலை அறிவிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு அக்டோபரில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகுவார் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கேற்ப அவர் இன்றைக்கோ அல்லது இந்த வாரத்திலோ தனது பதவி விலகலை அறிவிக்கக் கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதரவு வாபஸ்: அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), … Read more

சீனாவை மிரட்டும் HMPV வைரஸ்… இப்போது இந்தியாவில்… அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?

HMPV Virus: பெங்களூருவில் எட்டு மாதக் குழந்தைக்கு HMPV வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றின் அறிகுறிகள் மற்றும் இதனை தடுப்பதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம்.

விஷாலுக்கு என்ன ஆச்சு? கை நடுக்கம், குரலில் தடுமாற்றம்..இதுதான் காரணம்!

Vishal In Madha Gaja Raja Press Meet : நடிகர் விஷால் நடிப்பில் உருவான மத கஜ ராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைப்பெற்றது.   

BGT தொடரில் தோல்வி! சாம்பியன்ஸ் டிராபியில் பிசிசிஐ அதிரடி மாற்றம்!

பிப்ரவரியில் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியை பிசிசிஐ இந்த வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்திய அணி மொத்தமாக 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. 50 ஓவர் வடிவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட உள்ளது. சமீபத்தில் நடந்து … Read more

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக  செயல்படுகிறார் ஆளுநர் – தமிழ்நாடு சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை:  தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்ற ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றம்! தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டது என அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்க வந்த ஆளுநருக்கு எதிரான அவையில் கோஷம் எழுப்பியதுடன், தேசிய கீதம் பாடவில்லை என கூறி,   கவர்னர் ரவி, … Read more

தேர்தலுக்கு முன் திட்டங்கள்… அடுத்த 5 ஆண்டுகளுக்கு எதுவும் செய்யாது; பா.ஜ.க.வை சாடிய சஞ்சய் ராவத்

புனே, சிவசேனா (உத்தவ் பால் தாக்கரே) கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் இன்று கூறும்போது, தேர்தலுக்கு முன் கோடிக்கணக்கான மதிப்பிலான திட்டங்களை அறிவிப்பது பா.ஜ.க. வழக்கம்போல் மேற்கொள்ளும் தந்திரங்களில் ஒன்றாகும் என கூறியுள்ளார். டெல்லி மக்கள் கெஜ்ரிவாலுக்கு விசுவாசத்துடன் இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்த ராவத், பா.ஜ.க.வின் கடைசி நேர முயற்சிகள் பொதுமக்களிடம் பெரிய தாக்கம் ஏற்படுத்த போவதில்லை என்றார். மராட்டிய தேர்தலின்போதும் இப்படி செய்யப்பட்டது. 5 ஆண்டுகளாக அவர்கள் எதுவும் செய்யவில்லை. தேர்தல் தேதி … Read more

2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள் – Honda SP160 on-road price, specs and features

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் புதிய எஸ்பி 160 பைக் மாடலின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். புதிய SP160 பைக்கினை பொறுத்தவரை முன்பாக விற்பனையில் உள்ள எஸ்பி 125 பைக்கின் வடிவமைப்பினை பயன்படுத்திக் கொண்டு யூனிகார்ன் 160 பைக்கின் என்ஜின் மற்றும் ஃபிரேம் உள்ளிட்ட அம்சங்களை பகிர்ந்து கொண்டாலும் ஸ்போர்ட்டிவான தோற்ற வடிவமைப்பினை கொண்டு புதிய எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் என அனைத்தும் சிறிய மாற்றங்களுடன், … Read more

`தமிழக சட்டசபையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவும் நீக்கமும்

2025 -ன் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. தேசிய கீதம் முதலில் பாடவில்லை என்பதை கண்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் சட்டசபையைவிட்டு வெளியேறினார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ “தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். இது மாண்புமிகு ஜனாதிபதியின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாராளுமன்றத்தில் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. … Read more

சட்டப்பேரவைக்கு ‘யார் அந்த சார்?’ வாசகம் கொண்ட பேட்ஜ் அணிந்துவந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜை அணிந்து வந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்பட 66 எம் எல் ஏ.க்களும் யார் அந்த சார்? என்ற பேட்ஜ் பொருந்திய சட்டையை அணிந்து வந்துள்ளனர். பேரவைக்குள் சென்றதும் அவர்கள் அந்த பேட்ஜை அணிந்து கொண்டனர். மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. … Read more