ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி – நாதக உள்பட எதிர்க்கட்சிகள் டெபாசிட் காலி

ஈரோடு:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது வெற்றியை முதலமைச்சருக்கு சமர்பிப்பதாக  தெரிவித்து உள்ளார். திமுக வேட்பளாரை எதிர்த்து போராட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட அனைத்து  45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். திமுக வேட்பாளர் சந்திரகுமார் 90,629 வாக்குகள் பெற்றுஅமோக  வெற்றி பெற்றுள்ளார்.  நாதக வேட்பாளர், சீதாலட்சுமி டெபாசிட் இழக்காமல் இருக்க 25776 வாக்குகள் பெற வேண்டும். ஆனால் 23,872 வாக்குகளே பெற்றுள்ளார். அதனால் சீதாலட்சுமி … Read more

`இதுக்காக டுக்காட்டி காரை வித்துட்டேன்' – ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கிய கோவை ஸ்டார்ட் அப்!

கோவையை தலைமையிடமாகக் கொண்ட கோவை.கோ என்ற ஏ.ஐ ஸ்டார்ட் அப் ஒன்று தங்களின் நிறுவன ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கியிருக்கிறது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தில் மொத்தமாக 140 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். `Together we grow’ என்ற திட்டத்தின்படி 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்பு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த அனைத்து ஊழியர்களின் மூன்றாண்டு சேவை முடிந்ததும் அவர்களின் மொத்த ஆண்டு … Read more

நடிகர் விஜய் உடன் கூட்டணி அமைக்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திட்டமா?

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸில் வலுவான நிலையில் இருந்து, படிப்படியாய் உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்த என்.ரங்கசாமி, ஒரு கட்டத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் தனித்து இயங்க விரும்பினார். கடந்த 2011-ம் ஆண்டு ‘என்.ஆர்.காங்கிரஸ்’ என்று புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே மீண்டும் ஆட்சி யைப் பிடித்தார். அதன்பின் 2016 சட்டப்பேரவைத் தேர்த லில் என்.ஆர்.காங்கிரஸ் தோல்வியைத் தழுவ எதிர்க்கட்சித்தலைவரானார் ரங்கசாமி . 2021-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி யில் … Read more

“டெல்லி மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்” – கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் மாலை 4.40 மணி நிலவரப்படி 40 தொகுதிகளில் வெற்றி, 8 தொகுதிகளில் முன்னிலை என பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் பாஜக உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி 18 தொகுதிகளில் வெற்றி, 4 தொகுதிகளில் முன்னிலை என 22 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி … Read more

"அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை" தோல்வி குறித்து உருக்கமாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்!

மக்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வந்தோம் என்றும் அதிகாரத்திற்காக வரவில்லை என்றும் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

Virat Kholi | ஒரே போட்டியில் பல சாதனைகளை படைக்கப்போகும் விராட் கோலி..!

Virat Kholi Record | இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கட்டாக் மைதானத்தில் பிப்ரவரி 3ம் தேதி நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி பல சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே செய்த சாதனைப் பட்டியலில் விராட் கோலி பெயரும் இடம் பெறப்போகிறது. இந்த உலக சாதனையை நிகழ்த்த விராட் கோலிக்கு இன்னும் 94 ரன்கள் மட்டுமே தேவை. அதேநேரத்தில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி … Read more

11ந்தேதி பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் விவரம்….

சென்னை: பிப்ரவரி 11ந்தேதி பவுர்ணமி தினம்  முன்னிட்டு,   திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன என்பதை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வபரர் கோவில் நிர்வாகம்  வெளியிட்டு உள்ளது. தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரின் அருள் பெற்று வருகின்றனர். அருணாச்சலேஸ்வரர் வீற்றிரும்,  மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் … Read more

Delhi : 'மோடியின் தொலைநோக்குப் பார்வையை டெல்லிக்கு கொண்டு வருவோம்'- பர்வேஷ் வர்மா கூறியதென்ன?

புதுடெல்லி தொகுதியில் 3 முறை வென்ற முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவரை தோற்கடித்து புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றிருக்கிறார். டெல்லியை கடந்த மூன்று வருடங்களாக ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி டெல்லியில்  70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இதில் அதிக கவனம் பெற்ற தொகுதி … Read more

“ஈரோடு கிழக்கில் நிராகரிக்கப்பட்ட நாதகவின் வெறுப்பு அரசியல்” – முத்தரசன் கருத்து

சென்னை: “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு, அடுத்து வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறும் என்பதற்கான முன்னறிவிப்பைத் தந்துள்ளது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆதரவுடன் களம் இறங்கிய திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொகுதி வாக்காளர்களின் ஒருமுகமான ஆதரவைப் பெற்று, மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2021 … Read more

“டெல்லியில் பாஜகவுக்கு கிட்டியது வளர்ச்சி, நல்லாட்சிக்கான வெற்றி!'' – பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இது வளர்ச்சிக்கு, நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் மாலை 4 மணி நிலவரப்படி 35 தொகுதிகளில் வெற்றி, 13 தொகுதிகளில் முன்னிலை என பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் பாஜக உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி 16 தொகுதிகளில் வெற்றி 6 தொகுதிகளில் முன்னிலை … Read more