அடுத்த பட்டியல் ரெடி: மேலும் 487 இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா! 

கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் உள்ளனர். இதில் முதல் கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு ராணுவ விமானத்தில், கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் … Read more

ஆட்சியரின் திடீர் சோதனை : தேனியில் 6 கடைகளுக்கு அபராதம்  

தேனி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை நடத்தி 6 கடைகளுக்கு  அபராதம் விதித்துள்ளார்.   தொடர்ந்து பலமுறை  தேனி பஸ் நிலையத்தில் தொடர்ந்து உணவுப்பொருட்கள் காலாவதியானதை விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர்க்கு தகவல்கள் வந்ததால் இன்று மாவட்ட ஆட்சியர் திடீரென தேனி பேருந்து நிலையத்தில் இருந்த கடைகளில் சோதனை நடத்தினார். ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அங்குள்ள பேக்கரி கடை, டீ கடை, இறைச்சி கடை மற்றும் உணவு கடை … Read more

Illegal Immigrants: 2009 முதல் எத்தனை இந்தியர்களை US வெளியேற்றியிருக்கிறது? அமைச்சர் வெளியிட்ட தரவு

டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற நாள்முதல், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்களை தங்கள் நாட்டின் ராணுவ விமானங்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பியனுப்பிவருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்கள் என 104 பேரை அமெரிக்க ராணுவம் இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தியாவுக்கு நாடு கடத்தியது. ட்ரம்ப் அதிபரான பிறகு… அதேசமயம், இந்த நடவடிக்கை எதோ ட்ரம்ப் பதவியேற்ற பிறகு நடக்கும் விஷயம் அல்ல. கடந்த பைடன் ஆட்சி, அதற்கு முந்தைய ட்ரம்ப் ஆட்சி அதற்கும் முந்தைய அதிபர்களின் … Read more

பாஜக அரசுக்கு எதிராக கை, கால்களில் விலங்கிட்டு தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை: அமெரிக்காவில் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தவறியதாக கூறி, மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கை, கால்களில் விலங்கிட்டு சென்னையில் இன்று (பிப்.7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் உரிய அனுமதியின்றி வசித்து வந்த 104 இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு பாதுகாக்க தவறிவிட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவை மத்திய அரசு கண்டிக்கவில்லை எனக் கூறி, மத்திய பாஜக … Read more

பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற ஜீத் அதானி – திவா ஷா திருமணம்: படங்களை பகிர்ந்த கவுதம் அதானி

அகமதாபாத்: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அதானி குழும தலைவர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி, பாரம்பரிய முறைப்படி சூரத் வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகன் திவா ஷாவை மணந்தார். இந்த திருமணம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தனிப்பட்ட நிகழ்வாக இன்று (பிப்.7) நடைபெற்றது. இந்நிலையில், திருமணத்தின் படங்களை கவுதம் அதானி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “இறைவனின் ஆசீர்வாதத்துடன், ஜீத்தும் திவாவும் இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர். இன்று அகமதாபாத்தில் பாரம்பரிய முறைப்படி … Read more

வாக்கு எண்ணிக்கை | டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025 எப்போது? ​​எங்கு? பார்க்கலாம்

When And Where To Watch Delhi Election Results 2025: நாளை வாக்கு எண்ணிக்கை. டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025  நேரடியாக எங்கு எப்படி பார்ப்பது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். 

நாளை தமிழகத்தில் மத்திய அரசு பட்ஜெட் நகர் எரிப்பு போராட்டம் : கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

சென்னை நாளை தமிழகம் முழுவதும் மத்திய அர்சு பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என இந்திய கமூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், ”மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இம்மாதம் முதல் தேதி (01.02.2025) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025 – 26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு … Read more

கள்ளக்குறிச்சி: `தனியார் பள்ளி கலவர வழக்கில் மாணவின் தாய் குற்றவாளி’ – குற்றப்பத்திரிகை தாக்கல்

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதையடுத்து அது தற்கொலை வழக்காக பதிவுசெய்யப்பட்டது. ஆனால் மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்றும், மாணவி கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்றும் கூறி, அந்த தனியார் பள்ளியை சூறையாடினர் பொதுமக்கள். அந்த கலவரத்தில் பள்ளி வளாகத்திற்குள் இருந்த வாகனங்கள் தீ வைக்கப்பட்டு, வகுப்பறைகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரம் | தனியார் … Read more

ஒய்வூதிய திட்ட ஆய்வுக்கான குழுவை வாபஸ் பெற முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்

சென்னை: ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை வாபஸ் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஒன்றிய மாநில தலைவர் த.அமிர்தகுமார் வெளியிட்டுளள அறிக்கை: கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை இம்முறை கட்டாயம் அமல்படுத்துவோம் என கூறியதை ஏற்று முழுமையாக கடந்த காலங்களில் … Read more

‘கைவிலங்கு’ விவகாரம்: அமெரிக்காவிடம் கவலை தெரிவித்த இந்தியா!

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், மோசமாக நடத்தப்பட்டது குறித்து இந்தியா தனது கவலையை அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளது என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அமெரிக்க அதிபரின் அழைப்பின் பேரில் பிப்ரவரி 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி அங்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. ட்ரம்பின் இரண்டாவது பதவிக் காலம் சில … Read more