ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை – வேல்முருகன் கண்டனம்

சென்னை: “தமிழகத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதை கலாச்சாரமும், ஆபாச இணையதளங்களும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளன. எனவே, சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்பதோடு, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பெண்கள், … Read more

“என் கையெழுத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் நிறைய முயன்றார்கள்; ஆனால்…” – நினைவுகளை மாணவர்களுடன் பகிர்ந்த பிரதமர்

புதுடெல்லி: தனது கையெழுத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் நிறைய முயன்றதாகவும், ஆனாலும் தனது கையெழுத்து சிறப்பானதாக மாறவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்வு காலம் நெருங்கி வருவதால் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியின் சுந்தர் நர்சரியில், மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களுக்கு தானே இனிப்புகளை வழங்கிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து அவர்களுடன் மிகவும் நெருக்கமான முறையில் உரையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் பகிர்ந்து கொண்ட ஒரு காணொளிக் காட்சியில், … Read more

“இதழியலுக்கு ஏஐ துணை புரியலாம், ஆனால்…” – பீட்டர் லிம்போர்க் கருத்து

சென்னை: “இதழியலுக்கு செயற்கை நுண்ணறிவு துணை புரியலாம். ஆனால், என்றும் அவை பத்திரிகையாளர்களின் செய்தியளிக்கும் ஆற்றலுக்கு மாற்றாக வரமுடியாது” என்றார் Deutsche Welle நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் லிம்போர்க். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து மாணவர்களிடையே ஜெர்மனி அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான DW-இன் இயக்குநர் பீட்டர் லிம்போர்க் உரையாற்றினார். ‘மேற்கத்திய ஊடகங்களுக்கு சவாலாக விளங்கும் உலக சூழ்நிலைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில், பேசிய அவர், சர்வதேச ஊடகங்களின் பொறுப்பு மற்றும் … Read more

“என் மனைவிக்கு அதை ஒருபோதும் பண்ணக் கூடாதுன்னு நினைப்பேன்!'' – நடிகர் பொன்வண்ணனுடன் ஒரு சிட் சாட்!

சின்னத்திரையிலும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் பொன்வண்ணன். சமீபத்தில் `உப்பு புளி காரம்’ வெப் சீரிஸ் மூலம் பல குடும்பங்களுக்கும் ஃபேவரைட்டானவர் தற்போது புதியதாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `கெட்டி மேளம்’ தொடரில் நடித்து வருகிறார். அவருடன் ஒரு சிட் – சாட் போட்டோம். சினிமா, சின்னத்திரை, பர்சனல் என வாழ்க்கையின் பல பக்கங்களைப் புரட்டியது இந்த உரையாடல். உப்பு புளி காரம் நம்மிடையே பேசிய பொன்வண்ணன், “ உப்பு புளி காரம் வெப் சீரிஸ் முடிஞ்சதும் … Read more

திருநெல்வேலி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள்! நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்…

நெல்லை: கள ஆய்வுக்காக நெல்லை மாவட்டம்  சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் , அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 1304.66 கோடி ரூபாய் செலவில் 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 309.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி … Read more

ஓலா S1 X, S1 X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Ola S1 x, s1 x plus e scooter on-Road price and Specs

ரூ. 94,000 முதல் ஓலா S1 X, S1 X பிளஸ் பேட்டரி ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை துவங்குகின்றது.

'பனாமா கால்வாய்க்கு குறிவைக்கும் ட்ரம்ப்' – சர்வதேச அரசியலில் என்ன நடக்கிறது?

ட்ரம்பின் பனாமா டார்கெட் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கும் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக சமீபத்தில், “பனாமா கால்வாய் வழியாகச் பயணிக்கும் அமெரிக்க சரக்கு கப்பல்களுக்கு அந்தநாடு அதிக கட்டணங்களை வசூலித்து வருகிறது. இது முற்றிலும் தன்னிச்சையாகவும், நியாயமற்ற முறையிலும் எடுக்கப்பட்ட முடிவு. தற்போது அதை உடனடியாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே கட்டணத்தை குறைக்க வேண்டும் அல்லது அதன் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார், ட்ரம்ப். … Read more

500-க்கும் மேற்பட்ட திட்டங்களுடன் ‘கிரெடாய்’ சார்பில் சென்னையில் வீட்டுவசதி கண்காட்சி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னையில் “கிரெடய்” சார்பில் 3 நாட்கள் நடைபெறும் ‘பேர்புரோ 2025’ வீட்டு வசதிக் கண்காட்சியை வரும் 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடய்) சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய புதிய கட்டிடத்தில் ‘பேர்புரோ 2025’ எனும் வீட்டு வசதிக் கண்காட்சி வரும் 14-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இக்கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இக்கண்காட்சியில், 500-க்கும் … Read more

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வரக் கோரி தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கை வசம் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, “இலங்கை கடற்படையினர் … Read more

அதிபர் ட்ரம்புக்கு ‘கோல்டன் பேஜர்’ பரிசளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

நியூயார்க்: அமெரிக்காவுக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு ‘கோல்டன் பேஜர்’ ஒன்றை பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட பேஜர் தாக்குதலை சுட்டும் வகையில் அமைந்துள்ளது. வெட்டப்பட்ட மரத்தில் ட்ரம்புக்கு பரிசளித்த பேஜர் வைக்கப்பட்டுள்ளது. அதில் ‘பிரஸ் வித் போத் ஹேண்ட்ஸ்’ என்ற மெசேஜ் இருக்கிறது. அதன் கீழே ‘எங்களின் தலைசிறந்த நண்பர் மற்றும் சிறந்த கூட்டாளியுமான … Read more