டெல்லியில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? வெளியானது கருத்து கணிப்புகள்!

Delhi Exit Poll 2025 Latest Updates: இன்று டெல்லி சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சென்னையில் தான் எனது வாழ்க்கை தொடங்கியது – நடிகர் நாக சைதன்யா!

Actor Naga Chaitanya: கார் பந்தயம் என்பது பொழுதுபோக்கு தானே தவிர, அதில் முறையாக பயிற்சி எடுக்கவில்லை என்று நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம்? அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு.

Government Employees Latest News: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு. ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட குழு அமைப்பு

Vishal: “வெளிவராமல் இருக்கும் பல படங்களுக்கு `மதகஜராஜா' முன்மாதிரி!'' – நெகிழும் விஷால்

படமெடுக்கப்பட்டு 12 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தாண்டு திரையரங்குகளில் வெளியானது விஷாலின் `மதகஜராஜா’. பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியும் திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கிறது. தமிழில் கிடைத்த ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த வாரம் `மதகஜராஜா’ திரைப்படத்தை தெலுங்கிலும் வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது `மதகஜராஜா’ திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து நெகிழ்ச்சி பொங்க ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் விஷால். அந்த அறிக்கையில், “2025ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா திருநாளில் “மதகஜராஜா” திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் … Read more

AI கருவிகளை பயன்படுத்த வேண்டாம்… நிதி அமைச்சகம் உத்தரவு

AI என்னும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மற்றும் AI இயங்குதளங்கள் பயன்பாடு குறித்து அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், சில ஊழியர்கள் அலுவலக கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் AI செயலிகளை (சாட்ஜிபிடி, டீப்சீக் போன்றவை) பயன்படுத்துகின்றனர். இது இந்திய அரசின் ரகசிய ஆவணங்கள் மற்றும் தரவுகள் கசியும் ஆபத்தினை ஏற்படுத்தக் கூடும் என்று அரசு ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சுற்றறிக்கை அரசு கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் சாதனங்களில் AI … Read more

தமிழக பட்ஜெட் புதிய அறிவிப்புகளுடன் தயாரிபு

சென்னை தமிழக அரசு புதிய அறிவிப்புகளுடன் பட்ஜெட்ட்டை தயாரித்து வருகிறது. தமிழக சட்டசபை கூஉட்டம், 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இம்மாதம் 3-வது வாரம் மீண்டும் கூட உள்ளது.  கூட்ட முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் ஆகிறது. அதன்படி பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்ய உள்ளனர். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் … Read more

ஹோண்டா உடன் இணைப்பு முயற்சியை நிசான் கைவிட்டதா..?

அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்க நிசான் நிறுவனத்தை ஹோண்டா உடன் இணைத்து உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக உருவாக இருந்த திட்டத்தை நிசான் ரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. செய்திகள் வெளியானதை தொடர்ந்து டோக்கியோ பங்கு சந்தையில் நிசான் பங்குகள் 4% சரிவை சந்தித்துள்ள நிலையில் ஹோண்டா பங்குகள் விலை 8% வரை உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்த ஹோண்டா, நிசான் மற்றும் மிட்சுபிஷி இடையில் நடந்த நிலையில் … Read more

பணியிடத்தில் பாலியல் தொல்லை; மாடியில் இருந்து குதித்த இளம்பெண்… முதலாளி உள்பட மூவர் தலைமறைவு

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் பகுதியில் பிரபல தனியார் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் பல பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த ஓட்டலில் வேலை செய்யும் பெண்கள் பக்கத்தில் உள்ள மற்றொரு கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த ஓட்டலில் சுமார் 3 மாதங்களுக்கு முன் ஒரு இளம் பெண் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதற்கிடையே கடந்த சனிக்கிழமை இளம் பெண்ணுடன் தங்கியிருந்த சக பெண் ஊழியர்கள் விடுப்பில் ஊருக்குச் சென்றுள்ளனர். ஓட்டல் “கிளாம்பாக்கத்தில் 18 வயது பெண்ணுக்கு … Read more

தமிழகத்தில் 10 லட்சம்+ மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: தமிழகத்தில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னைத் தாண்டியது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2002-2003 கொள்முதல் பருவத்திலிருந்து அக்.1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்வரின் சீரிய முயற்சியின் காரணமாக செப்.1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் விவசாயிகள் கோரிக்கை ஏதும் … Read more

நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்கியது அமெரிக்க விமானம்

புதுடெல்லி: சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் 104 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம் இன்று (ஜன.5) பிற்பகல் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானம் பிற்பகல் 1.55 மணிக்கு தரையிறங்கியது. இந்த 104 இந்தியர்களில் 30 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், தலா 33 பேர் ஹரியானா மற்றும் குஜராத் மாநிலத்தையும், தலா மூன்று பேர் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தையும், இரண்டு … Read more