ஸ்வீடன்: பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு – 10 பேர் பலி

ஸ்டாக்ஹோம், ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்வீடன். இந்நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரிபுரொ நகரில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளிக்கூடத்தில் இன்று துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பொலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே … Read more

மும்பை: "கடன திரும்ப தா இல்ல என்ன கல்யாணம் பண்ணு" – மிரட்டிய காதலியைக் குத்திக் கொன்ற காதலன்

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டு சித்ரவதை செய்த காதலியைக் காதலன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அம்பர்நாத்தில் வசித்து வந்தவர் சீமா காம்ப்ளே (42). இப்பெண் அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார். சீமா தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். தனக்கு இருக்கும் நிதி நெருக்கடியைப் பயன்படுத்தி தனக்குக் கடன் கொடுக்கும்படி சீமாவிடம் ராகுல் கேட்டுள்ளார். சீமாவும் ரூ.2.5 லட்சம் கடனாகக் கொடுத்தார். … Read more

ஓடும் அரசு பேருந்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்த ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

சென்னை: ஓடும் பேருந்தில் ரீல்ஸ் செய்த ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோயம்பேடு – கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் 70வி தடம் எண் கொண்ட பேருந்தில், ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன், நடத்துநர் சிவசங்கர் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது, நடத்துநர் ரீல்ஸ் செய்தபடி ஓட்டுநர் அருகே வந்துள்ளார். இதைப் பார்த்த ஓட்டுநரும் அவருடன் ரீல்ஸ் செய்தவாறே பேருந்தை ஓட்டியுள்ளார். இந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பொதுமக்கள், … Read more

காது குத்த மயக்க ஊசி செலுத்தியதால் 6 மாத குழந்தை பரிதாப உயிரிழப்பு

கர்நாடகாவில் 6 மாத குழந்தைக்கு காது குத்துவதற்காக மயக்க ஊசி செலுத்தியதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்தது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டுலுபேட்டையை அடுத்துள்ள ஷெட்டிஹள்ளியை சேர்ந்தவர் ஆனந்த் (32). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நேற்று முன் தினம் காது குத்தும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். காது குத்தும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஊசி செலுத்த‌ பொம்மல்லாப்புரா அரசு மருத்துவமனைக்கு … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 46 வேட்பாளர்கள், 237 வாக்குச்சாவடிகள்… இன்று வாக்குப்பதிவு

Erode East Assembly By-Election 2025: தமிழகமே உற்று நோக்கும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இந்த ஆட்சிக்காலத்தில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் இன்று (பிப். 5) நடைபெறுகிறது.

டெல்லியில் வாக்குப்பதிவு தொடங்கியது

டெல்லி இன்று காலை 7 மணிக்கு டெல்லி  சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. ருகிற 23-ந்தேதியுடன் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வ நிறைவு பெறுகிறதால் கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ள இத்தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. டெல்லி முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதல்வர் … Read more

அரசு அலுவலகங்களில் மராத்தி மொழியில்தான் பேச வேண்டும் – மராட்டியத்தில் அதிரடி

மும்பை, மராட்டியத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு கழகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்களில் மராத்தியை கட்டாயமாக்கி மாநில அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. அதில் அரசு ஊழியர்கள், அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் மராத்தியில் தான் கட்டாயம் பேசவேண்டும் என கூறப்பட்டுள்ளது. வெளிமாநிலம், வெளிநாட்டினரிடம் மட்டும் மராத்தியை தவிர்த்து வேறு மொழியில் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அரசு அலுவலகங்களில் உள்ள கணினிகளில் மராத்தி தட்டச்சு செய்யும் வகையில் வசதி செய்து இருக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில மராத்தி … Read more

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி

புதுடெல்லி, இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் முறையே நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்புவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு … Read more

டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்த சீனா: நிலக்கரி, எரிவாயுவுக்கு 15 சதவீத வரி

பீஜிங்: அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பொருளாதார கொள்கைகள், வெளிநாடுகள் மீதான வரி விதிப்பு ஆகியவை சர்வதேச வர்த்தக போரை தூண்டும் வகையில் அமைந்துள்ளன. அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடுகளான கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதித்தார். அமெரிக்க ஜனாதிபதியின் இந்த உத்தரவால் உலக அளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள் கடும் … Read more

தமிழக மீனவர்களுக்கு இலங்கை சுதந்திரம்: தேமுதிக கோரிக்கை

இலங்கை சுதந்திர பெற்ற நாளை முன்னிட்டு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை தேடித்தான் மீன் பிடிக்க வருகின்றனர். அவர்களை அத்துமீறி கைது செய்து, அவர்களது உடைமைக்கும், உயிருக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் மீது … Read more