ம.பி.யின் போபாலில் யாசகம் எடுக்கவும், யாசகம் அளிக்கவும் தடை – காரணம் என்ன?

போபால்: மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலில் யாசகம் எடுப்பதை அதிகாரிகள் தடை செய்துள்ளனர். மேலும், யாராவது யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு யாசகம் வழங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம் – போபாலில் உள்ள சாலைகள், போக்குவரத்து சிக்னல்கள் உள்பட பொது இடங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்துவோர் அதிகளவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் போதைப்பொருள் புழக்கத்துக்கு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போபால் மாவட்ட ஆட்சியர் கௌஷ்லேந்திர விக்ரம் சிங், … Read more

நாளை பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்

பிரயாக் ராஜ் நாளை திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராட உள்ளார். கடந்த 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டிக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி, 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், … Read more

USA: சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பும் அமெரிக்கா… இந்தியாவின் முடிவு என்ன?

தேர்தல் பிரச்சாரத்தின் போது, “வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது” என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதன்படி இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற கையோடு பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார், அவர். இதன்படி பிறநாடுகளிலிருந்து வந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் மக்கள் சொந்த நாடுகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். முதலில் இவ்வாறு குடியேறிய கொலம்பியர்கள்தான் இரண்டு விமானங்களில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆனால், “கொலம்பியா நாட்டவர்களை … Read more

பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரி குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம் – தமிழக விவசாயிகள் கண்டனம்

குமுளி: பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரி குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக விவசாயிகள் வரும் 8-ம் தேதி குமுளியில் நாங்களும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கப்பட்டு வந்த நிலையில் 1979-ம் ஆண்டு அணை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக கேரளாவில் வதந்தி பரவியது. அதனைத் தொடர்ந்து அணையின் உச்ச அளவு நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. அன்று முதல் … Read more

“தமிழகத்தின் தேவையை மத்திய அரசு மறுக்கிறது” – மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

புதுடெல்லி: தமிழகத்தின் தேவையை மத்திய அரசு மறுப்பதாக, மக்களவையில் எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்து பேசியுள்ளார். மக்களவையில் இன்று குடியரசு தலைவர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தில் எம்.பி. சு.வெங்கடேசன் பேசியது: “உலக மக்கள் தொகையில் 20 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா உலக வர்த்தகத்தில் 2 சதவீதத்தை மட்டுமே தன் பங்காகக் கொண்டிருக்கிறது. சேவைத்துறையில் 4.6 சதவீதமும் , உலக சுற்றுலாத்துறையில் 1.5 சதவீதமும் மட்டுமே நம்முடைய பங்காக இருக்கிறது. நம்முடைய இந்த பின்தங்கிய … Read more

ஸ்வீடன் பள்ளியில் பயங்கர துப்பாக்கிச் சூடு: 10 பேர் உயிரிழப்பு

ஸ்வீடனில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்வீடனில், ஸ்டாக்ஹோமில் இருந்து சுமார் 200 கி.மீ தொலையில் உள்ள ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம் உள்ளது. பள்ளிக் கல்வியை முறையாக முடிக்காத மாணவர்களை உயர்கல்விக்கு தயார்படுத்துகிறது இப்பள்ளி. இந்த பள்ளியில் செவ்வாய்க்கிழமை நுழைந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்திய நபரும் … Read more

விவோ வி50: 6,000mAh பேட்டரி பிரிவில் இந்தியாவின் ஸ்லிம்மான ஸ்மார்ட்போன்!

சென்னை: இந்தியாவில் விரைவில் விவோ நிறுவனத்தின் வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இந்த போன் 6,000mAh பேட்டரி பிரிவில் இந்தியாவின் ஸ்லிம்மான ஸ்மார்ட்போனாக அறியப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் … Read more

நயன்தாரா உண்மையில் எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? இயக்குநர் விஷ்ணுவர்தன் சொன்ன செய்தி..

Director Vishnu Vardhan Talks About Actress Nayanthara : நடிகை நயன்தாரா குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் பேசியிருக்கும் விஷயங்கள் தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மிகைப்படுத்தப்படும் கும்பமேளா நெரிசல் : ஹேமமாலினி ஆதங்கம்’

டெல்லி ஹேமமாலினி கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம் மிகைப்படுத்தப்படுவதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார். தற்போது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கடந்த மாதம் 29 ஆம் தேதி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டதில் 30 பேர் உயிரிழந்து 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று மகா கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசப்பட்டதுது. இந்தநிலையில் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரிய சம்பவம் அல்ல, … Read more

இந்தியாவில் 10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த யமஹா R15 V4 சூப்பர் ஸ்போர்ட் பைக்..!

கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் 150cc பிரிவில் வெளியான முதல் லிக்யூடூ கூல்டூ எஞ்சின் பெற்ற யமஹா R15 மாடல் தொடர்ந்து ஃபேரிங் ஸ்டைல் பெற்ற ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் மிக முக்கியமான மாடலாக விளங்குகிறது. சர்ஜாப்பூர் ஆலையில் தயாரிக்கப்டுகின்ற யமஹாவின் ஆர்15 பைக்கின் உற்பத்தி இலக்கு 10 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 90 % ஆர்15 பைக்குகள் இந்தியாவிலே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பேசிய இந்தியா … Read more