தமிழகம் முழுவதும் இந்திய கம்யூ. பிப்.8-ல் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

சென்னை: “எல்லா வழிகளிலும் தமிழகத்தை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் முறையில் பிப்.8-ம் தேதி, சனிக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் மக்கள் விரோத பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிப்.1ம் தேதி, மத்திய அரசின் நிதியமைச்சர் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இந்த … Read more

“பிரதமர் முயற்சித்த ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தோல்வி”- மக்களவையில் ராகுல் காந்தி தாக்கு

புதுடெல்லி: “பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை முயற்சி செய்தார். ஆனால் அதில் தோல்வியைத் தழுவினார். ‘மேக் இன் இந்தியா’ தோல்வியால் சீனா இந்தியாவுக்குள் நுழைந்தது” என்று ராகுல் காந்தி மக்களவையில் தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மனத்தில் கலந்து கொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “குடியரசுத் தலைவர் உரையில் புதிதாக என்ன சொல்லப்படுகிறது என்பதை கவனிக்க முடியாமல் நான் தவித்தேன். ஏனெனில் … Read more

'நாம் சீனாவிற்கு தான் வரி கட்டுகிறோம்' – மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி!

Rahul Gandhi Speech: இந்தியாவில் தயாரிக்கிறோம் என்று நாம் சொன்னாலும், அது உண்மை அல்ல என்றும் நாம் சீனாவிற்கு தான் வரி செலுத்துகிறோம் என்றும் ராகுல் காந்தி மக்களவையில் பேசி உள்ளார்.

மதகதராஜா போல் அந்த படமும் வெளிவர வேண்டும் – பேபி & பேபி விழாவில் பேசிய சத்யராஜ்!

சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடித்துள்ள பேபி & பேபி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ஏமாற்றி வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை.. சுனில் கவாஸ்கர் சாடல்.. தொடரும் கன்கஷன் சர்ச்சை!

இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்ற டி20 தொடர் நேற்று முடிவடைந்தது. இதில் இந்திய அணி 4 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. முன்னதாக இத்தொடரின் நான்காவது போட்டியில் ஒரு சர்ச்சை வெடித்தது. அந்த போட்டியில் சிவம் துபேவுக்கு தலையில் பந்து தாக்கியதால் போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா விளையாடினார். இது தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.  ஒரு வீரருக்கு தலையில் பந்து தாக்கி அவரால் விளையாட முடியவில்லை … Read more

Baby & Baby: "சீக்கிரம் கமிட் ஆகுங்க சார்…" – மேடையில் வைத்து ஜெய்யைக் கலாய்த்த யோகி பாபு!

யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் பேபி & பேபி. அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். பிப்ரவரி 14-ம் தேதி ரீலீஸ் ஆகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் யோகிபாபு, “இந்தப் படத்தின் இயக்குநர் பிரதாப் என்னுடைய நண்பர்தான். நாங்க ஏற்கெனவே 18 வருசத்துக்கு முன்னாடி ஒன்னா … Read more

வரும் 8 ஆம் தேதி திமுக கண்டன பொதுக்கூட்டம்

சென்னை திமுக சார்பில் வரும் 8 ஆம் தேதி எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இன்று தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழகத்தின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழக முதல்வர் அவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8, சனிக்கிழமை, மாலை … Read more

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிம்னி எஸ்யூவிக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு.!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் 5 டோர் ஜிம்னி எஸ்யூவி (Jimny Nomade) காருக்கு சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பு உள்ள நிலையில் ஜப்பானில் சமீபத்தில் அறிமுகம் செய்ய உள்ளதை தொடர்ந்து முன்பதிவு துவங்கப்பட்ட சில நாட்களிலேயே 50 ஆயிரத்திற்கும் கூடுதலான முன்பதிவு நடைபெற்றுள்ளதால் தற்பொழுது இந்த காருக்கான முன்பதிவு ஜப்பானின் நிறுத்தப்பட்டு இருக்கின்றது. ஜிம்னியின் ஐந்து கதவுகளை கொண்ட வேரியண்ட் ஹரியானாவில் உள்ள மாருதி சுசூகியின் ஆலையில் மட்டும் தயாரிக்கப்படுகின்ற நிலையில், இந்த மாடல் … Read more

சுற்றுலாத்துறையுடன் இணைந்து இலங்கை தபால் துறையை வலுவூட்டும் திட்டங்கள்

இலங்கையின் முதல் ஐந்து தபால் நிலையங்களில் ஒன்றான காலி கோட்டை தபால் நிலைய வளாகத்தை புதுப்பித்து, அதை பயனுள்ள ரீதியாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் அங்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

TVK: “2026 -ல் பண்ணையார் மனநிலையை தவெக அப்புறப்படுத்தும்!'' -ஆதவ் அர்ஜூனா

முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தவெக கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ‘1967 -ல் அண்ணா பண்ணையார்களின் ஆதிக்கத்தை ஒழித்ததை போல 2026 -ல் தவெக பண்ணையார் மனநிலையை ஒழிக்கும்.’ எனக் கூறியிருக்கிறார். ஆதவ் அர்ஜூனா TVK: `போர் யானைகள் பலத்தோடு!’-தொண்டர்களுக்கு விஜய் கடிதம் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையாவது, ‘இந்தியாவில் தேசியக் கட்சி ஒற்றை ஆதிக்கத்தை எதிர்த்து நின்று வெற்றிகண்டவர். இளைஞர் படையின் துணையோடு முதன்முதலாக … Read more