Sabdham: 'தொழில்நுட்ப அறிவும், கதை நகரும் விதமும் சிறப்பு'- சப்தம் படத்தைப் பாராட்டிய ஷங்கர்

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் – நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் மார்ச் 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.

சப்தம்

இந்நிலையில் இப்படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டியிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பக்கத்தில், ” ஒலி தொடர்பான பேய் படத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு புதிய அணுகுமுறை. இயக்குநர் அறிவழகனின் தொழில்நுட்ப அறிவும், கதை நகரும் விதமும் சிறப்பாக உள்ளது. இடைவேளைக்கு முந்தைய காட்சியும், ஒலியும் எதிர்பாராத ஒன்று. ஆதியின் நடிப்பும், தமனின் இசையும் அற்புதமாக உள்ளது. படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.