சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.90-க்கும், டீசல் 92.49ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 90.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினத்தந்தி Related Tags : சென்னை  பெட்ரோல் … Read more

அமெரிக்கா: வீட்டில் நடந்த இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டல் நகரின் டகோமா பகுதியில் உள்ள வீட்டில் இன்று இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கேளிக்கை நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், இரவு 12 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்தவர்கள் மீது சிறுவன் துப்பாக்கி சூடு நடத்தினான். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு … Read more

"19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கு பதில் என்ன?" – தனுஷ் டு தர்ஷினி நீட் மரணங்கள் – இபிஸ் கேள்வி!

நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துகொண்ட தேவதர்ஷினி குறித்து தனது எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருக்கிறார். அதில், “நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், “ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற … Read more

தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை (மார்ச் 31) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்.1ம் … Read more

ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயில் 104 டிகிரியை எட்டியதால் மக்கள் அவதி

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. கத்திரி வெயில் தொடங்கும் முன்பே ஆந்திராவின் 150 மண்டலங்களில் நேற்று வெயில் 104 டிகிரியை கடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் பகல் நேரங்களில் வெப்பக்காற்றும், அனல் காற்றும் வீசி வருவதால் சுமார் 150 மண்டலங்களில் நேற்று 104 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. குறிப்பாக ராயலசீமா, கடலோர ஆந்திர மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பகலில் காலை 8 மணி முதலே … Read more

மியான்மர் பூகம்பம்: 10,000 பேர் இறந்ததாக அச்சம் வலுப்பது ஏன்?

நேப்பிடா: மியான்மர் பூகம்பத்தில் இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 3,400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அச்சம் எழுப்பப்பட்டுள்ளது. மியான்மர் ராணுவ நிர்வாகத்தின் சமீபத்திய செய்திக் குறிப்பில், ‘நிலநடுக்கத்தால் இதுவரை 1,644 பேர் உயிரிழந்துள்ளனர். 3,400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகள், மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 139 பேரை இதுவரை காணவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, … Read more

ராம் கோபால் வர்மா திரைக்கதையில் உருவாகியுள்ள சாரி! ரிலீஸ் தேதி இதுதான்!

Saaree Movie: இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’ படம் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகிறது.

பாகிஸ்தான்: ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 11 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் மீது பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேவேளை, அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் பயணிகள் ரெயிலை பலூசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடத்தினர். இதையடுத்து, விரைந்து செயல்பட்ட பாதுகாப்புப்படையினர், கிளர்ச்சியாளர்களை சுட்டு வீழ்த்தி ரெயிலில் பணய கைதிகளாக இருந்த பயணிகளை மீட்டனர். மேலும், பலூசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சிப்படையினருக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதேவேளை, பாகிஸ்தானில் தலிபான்களின் … Read more

வீட்டில் ஸ்டூடியோ; மாடல்களுக்கு லட்சத்தில் சம்பளம்; ஆபாச வீடியோ நெட்வொர்க்கை இயக்கிய நொய்டா தம்பதி!

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிடப்படுவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நொய்டாவில் உள்ள உஜ்வால் என்பவரது வீட்டில் ரெய்டு நடத்தினர். இதில் உஜ்வாலும், அவரது மனைவி நீலுவும் சேர்ந்து சைப்ரஸ் நாட்டை சேர்ந்த டெக்னிஸ் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து ஆபாச வீடியோ இணைய தளங்களை நடத்தி வந்தது தெரிய வந்தது. இதற்காக சட்டவிரோதமாக 15.66 கோடி வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆபாச வீடியோ மற்றும் … Read more

“அக்காவிடம் 1000 ரூபாயைக் கொடுத்துவிட்டு டாஸ்மாக்கில் அண்ணனிடம் அதை பறித்து விடுகிறார்கள்!” – தடதடக்கும் தமிழிசை நேர்காணல்

பழனிசாமி – அமித் ஷா சந்திப்பு, 2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என்ற அமித் ஷாவின் பதிவு, பிரதமர் மோடி மீது தவெக தலைவர் விஜய் விமர்சனம் என பாஜக-வை சுற்றி தமிழக அரசியல் களம் சுறுசுறுப்பாகி வரும் நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். ஆளுநர்கள் அரசியல்வாதிகள் போல் செயல்படுவதால் தான் மாநில அரசுடன் மோதல் ஏற்படுகிறதா? – அரசி​யல் ரீதி​யாக செயல்​படு​வது … Read more