மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் மசூதியில் குண்டு வெடிப்பு

மும்பை: மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று குண்டு வெடித்தது. இதில் யாரும் காயம் அடையவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ளது ஜியோராய் பகுதி. இங்குள்ள அர்தா மஸ்லா கிராமத்தின் மசூதி ஒன்றில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் குண்டு வெடித்தது. இதுகுறித்து கிராமத் தலைவர் தலவாடா போலீஸாருக்கு தகவல் அளித்தார். பீட் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நவ்நீத் கன்வத் தலைமையிலான போலீஸார் மசூதிக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். கல்குவாரிகளில் … Read more

அஸ்வின் தேவையே இல்லை… இந்த வீரர் வந்தால் சிஎஸ்கேவின் பிரச்னைகள் தீரும்!

CSK Playing XI Changes: சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளது. சொந்த மண்ணில் மும்பை அணிக்கு எதிராக வென்றிருந்தாலும் அடுத்த ஆர்சிபியிடம் படுதோல்வியை சந்தித்தது. மேலும், தற்போது கௌகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் கடைசிவரை போராடி தோற்றது. Chennai Super Kings: சிஎஸ்கேவின் அடுத்த 3 போட்டிகள்  அடுத்து, ஏப். 5ஆம் தேதி டெல்லி அணியையும், ஏப். 8ஆம் தேதி பஞ்சாப் அணியையும், ஏப். 11ஆம் தேதி … Read more

ஏப்ரல் 6ந்தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர்மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! செல்வபெருந்தகை அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் 6ந்தேதி பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்க தமிழ்நாடு வருகை தரும்,  பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அன்றைய தினம்  கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ரூ. 550 கோடி மதிப்பீட்டில்  புதிய தொழில்நுட்பத்தில் ராமேஸ்வரம் கடலில்  புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வந்த பாம்பன்  புதிய பாலம் அத்துடன் செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு வந்த பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டங்களுக்கும் … Read more

"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" – பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர். “தொட்டால் பூ மலரும்”. எப்போ மனசு மலரும்? நம்முடைய அன்றாடம், பல கலவையான உணர்வுகளால் கட்டமைக்கப்படுகிறது. சந்தோஷம், அமைதி, ஆனந்தம், புன்சிரிப்பு, சிரிப்பு, கசப்பு, கண்ணீர், சோகம், கோபம், ஆதங்கம் இப்படிப் பல உணர்வுகளைத் தினசரி எதிர்கொண்டு கடந்து வருகிறோம். சில சமயம் மிகவும் … Read more

“தவெக, திமுக  இடையேதான் போட்டி என விஜய் கூறியது கேலிக்கூத்து” – ஜான்பாண்டியன்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையேதான் தேர்தல் போட்டி என விஜய் கூறியது கேலிக்கூத்தாக உள்ளது என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார். தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தலைமை வகித்தார். பின்னர் அவர் கூறியதாவது: ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் யாருடனும் சேரலாம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமி … Read more

பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் – ராப்ரி தேவி ஆட்சி காட்டாட்சியைத்தான் நினைவுபடுத்துகிறது: அமித் ஷா விமர்சனம்

புதுடெல்லி: பிஹாரில் லாலு – ராப்ரி தேவி ஆட்சி என்றாலே காட்டாட்சிதான் நினைவுக்கு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். பிஹார் மாநிலத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு ரூ.800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ரூ.181 கோடி மதிப்பில் காவல்துறை கட்டிடங்கள், ரூ.109 கோடி மதிப்பில் 3 போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை … Read more

பாண்டிங் vs பண்ட்… குரு – சிஷ்யன் மோதலில் வெல்லப்போவது யாரு…?

ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை தொடரின் 13வது லீக் ஆட்டம் லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.  லக்னோ அணி தொடரின் ஆரம்பத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்த நிலையில், ஹைதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் அனைவரின் விமர்சனங்களுக்கும் முற்றிப்புள்ளி வைத்தனர். அவர்கள் தங்களது வெற்றிப்பாதையை தொடரை நாளை … Read more

1700 பேர் பலி : மியான்மரில் ஒரு வாரம் துக்கம்… நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க வாய்ப்பு குறைவு…

மியன்மார் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) ரிக்டரில் 7.7 அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் அந்நாட்டில் இதுவரை 1700 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 300 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மியான்மரை ஆளும் ராணுவக் குழு ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று இன்று (மார்ச் 31) அறிவித்துள்ளது. ஏப்ரல் 6 வரை தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவித்துள்ள ஆட்சியாளர்கள், நிலநடுக்க … Read more

MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத் தொடங்கிய மும்பை

ஐபிஎல் 18-வது சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் மும்பை (MI) அணியும், கடந்த போட்டியின் வெற்றியை இந்தப் போட்டியிலும் தொடர வேண்டும் என்ற நோக்கில் கொல்கத்தாவும் (KKR) வான்கடே மைதானத்தில் இன்று களமிறங்கின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கைத் தேர்வு செய்தார். அதோடு, கடந்த போட்டியில் டிராப் செய்யப்பட்ட விக்னேஷ் புத்தூரும், அறிமுக வீரராக அஸ்வனி குமாரும் பிளெயிங் லெவனில் இடம்பெறுவார்கள் என்று பாண்டியா தெரிவித்தார். ஆனால், மும்பை … Read more

அறக்கட்டளையின் 4 ஏக்கர் நில விவகாரத்தில் அதிகாரிகள் குளறுபடி: திருப்பூர் டிஆர்ஓ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் தனியார் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் தவறுதலாக வேறு நபர்களின் பெயர்களுக்கு பட்டா வழங்கி விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக டிஆர்ஓ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள குடிமங்கலத்தில் தர்ம தண்ணீர் பந்தல் அறக்கட்டளைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை 1917-ல் சுப்பா நாயக்கர் என்பவர் தானமாக வழங்கினார்.கோடிக்கணக்கான மதிப்புள்ள இந்த நிலத்தை வேறு நபர்களின் பெயர்களுக்கு … Read more