Hyundai CRETA gets new features – 2025 க்ரெட்டா காரில் முக்கிய மாற்றங்களை தந்த ஹூண்டாய்.!

2025 ஆம் ஆண்டிற்கான ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான க்ரெட்டா எஸ்யூவி காரில் கூடுதலாக SX Premium மற்றும் EX(O) என இரு வேரியண்டுகள், மற்ற சில வேரியண்டுகளில் கூடுதல் வசதிகள் மற்றும் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்கள், டிசைன், எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை. க்ரெட்டா EX (O) 1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கின்ற EX (O) வேரியண்டில் பனேரோமிக் சன்ரூஃப், எல்இடி ரீடிங் … Read more

'எனக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது' – மருமகனை கட்சியிலிருந்து நீக்கிய மாயாவதி – காரணம் என்ன?!

நேற்று நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் உயர் மட்ட கூட்டத்தில் தனது சகோதரர் மகனான ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்து முக்கிய பொறுப்புகளில் இருந்தும், நீக்கினார் அக்கட்சியின் தலைவர் மாயாவதி. இந்த நிலையில் இன்று ஆகாஷ் ஆனந்தை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார் மாயாவதி. இது குறித்து மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில், “நேற்று நடந்த அனைத்து இந்திய பகுஜன் சமாஜ் கட்சி கூட்டத்தில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து ஆகாஷ் ஆனந்த் நீக்கப்பட்டார். … Read more

அண்ணாமலை Vs தங்கம் தென்னரசு: அரசின் கடன்களும், ‘கமிஷன்’ சாடல்களும்!

சென்னை: “மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது. நீங்கள் வாங்கிய கடன் எதற்காக? உங்கள் கட்சித் தலைவர், அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம். வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு? அல்லது, கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்குகிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்துங்கள்” என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கும் கடன்: பாஜக … Read more

“மன்மோகன் ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியா, பாக். நெருங்கின, ஆனால்…” – உமர் அப்துல்லா

ஜம்மு: “மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் நெருக்கமாக வந்தன. ஆனால், அந்த நிலைமைக்கு என் வாழ்நாளில் நாம் மீண்டும் திரும்புவோம் என நான் கருதவில்லை” என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோருக்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் அமைச்சர் சையத் … Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 முதல் அரையிறுதி: இந்தியா vs ஆஸ்திரேலியா நேருக்கு நேர் வெற்றி நிலவரம்

India vs Australia Head to Head Records: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை (மார்ச் 4, செவ்வாய்க்கிழமை) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதியில் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபுறம் அதேபோல நாளை மறுநாள் (மார்ச் 5,புதன்கிழமை) பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ளும். அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும். சாம்பியன்ஸ் … Read more

என்னை விமர்சிக்க தி.க., திமுகவிற்கு தகுதி இல்லை – நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பில்லை! சீமான்

மதுரை: என்னை விமர்சிக்க தி.க., திமுகவிற்கு தகுதி இல்லை  என்றும், என்மீது பாலியல் புகார் கொடுத்த  நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பில்லை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார். சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை விஜயலட்சுமி மீதான வழக்குக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்,   என்மீதான பாயில் வழக்கில்,   “நாம் தடை கேட்டு இருந்தோம்.  அது கிடைத்துள்ளது.  அதன் … Read more

புதினை பற்றிய கவலையை விடுங்கள்: சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் கவனம் செலுத்துங்கள் – டிரம்ப்

வாஷிங்டன், ரஷியா-உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஒரு சமரச திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபருக்கு, அமெரிக்கா அழைப்பு விடுத்தது. இதையடுத்து வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இரு தலைவர்களும் நேருக்கு நேர் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இதனால் பேச்சுவார்த்தையில் இருந்து பாதியில் ஜெலன்ஸ்கி வெளியேறினார். இதையடுத்து இங்கிலாந்து … Read more

ஏப்ரல் 20 முதல் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் எக்ஸ்ட்ரீம் 250R முன்பதிவு துவங்குகின்றது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பீரிமியம் மாடல்களான வெளியான அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் ஸ்போர்ட்டிவ் ஸ்டீரிட் ஃபைட்டர் எக்ஸ்ட்ரீம் 250R என இரு மாடல்களின் விலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்பதிவு ஏப்ரல் 20, 2025 முதல் ஹீரோ பிரீமியா டீலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஹீரோவின் ரூ.1.76 லட்சத்தில் வெளியான புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் 210cc லிக்யூடூ கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு 24.6PS மற்றும் 20.7Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக மேனுவல் … Read more

`உக்ரைன் அதிபர் பதவியிலிருந்து விலகுங்கள்' – அமெரிக்க செனட்டர் பேச்சுக்கு ஜெலன்ஸ்கி-யின் பதில் என்ன?

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே நடந்த காரசார விவாதத்தினால் உலகமே பரபரத்தது. மூன்று ஆண்டுகள் கடந்தும் ரஷ்யா – உக்ரைன் போர் இன்னமும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்கா – உக்ரைன் இடையில் கனிம வள ஒப்பந்தத்தை கையெழுத்திட அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார் ஜெலன்ஸ்கி. அங்கே அவருக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. ஜெலன்ஸ்கி இந்த நிலையில், அமெரிக்காவின் … Read more

ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை அதிகாரிகளாக திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி நியமனம்

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கின், புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக திருச்சி டிஐஜி மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி. ஆகியோரை கூடுதலாக சிறப்பு புலனாய்வு குழுவில் இணைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு திருச்சியில் நடைபயிற்சி மேற்கொண்டபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி … Read more