புனே பாலியல் வழக்கு: சிக்க வைத்த ஒரு கிளாஸ் தண்ணீர்; களமிறங்கிய கிராமம்; குற்றவாளி சிக்கியது எப்படி?

புனேயில் கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலையில் பேருந்திற்கு டெப்போவில் காத்து நின்ற மருத்துவமனை பெண் ஊழியர் பேருந்திற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்பெண்ணிடம் தத்தாத்ரேயா ராமதாஸ் என்பவர் அப்பெண் செல்ல வேண்டிய பஸ் வேறு இடத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதாகக் கூறி, பேருந்திற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இருட்டுக்குள் தப்பிச் சென்றுவிட்டார். தத்தாத்ரேயாவின் புகைப்படம் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று … Read more

‘தொகுதி மறுவரையறை மீது ஆதாரமற்ற அச்சம்’ – அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக பாஜக அறிவிப்பு

சென்னை: “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் என்ற தகவலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள் என்ற தகவலை, பொதுமக்களுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டீர்கள். இது முழுக்க முழுக்க நீங்கள் பரப்பும் கற்பனையான மற்றும் ஆதாரமற்ற அச்சம் என்பதால், மார்ச் 5-ம் தேதி அன்று கூட்டப்படவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக பாஜக முடிவு செய்துள்ளது. மும்மொழிக் கொள்கையை ஆதரித்து அன்றைய தினம் பாஜக கையெழுத்து பிரச்சாரத்தைத் தொடங்கும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, … Read more

புனே பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு பின்பு உண்மை தெரியும்: துணை முதல்வர் அஜித் பவார் 

மும்பை: மகாராஷ்டிராவின் புனே பேருந்து நிலையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதியை நிலைநாட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின்பு உண்மை தெரியவரும் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில், “நேற்று முன்தினம் வரை மக்கள் புனே பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய நபர் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினர். குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு கரும்பு காட்டில் ஒளிந்திருந்தார். அவரைப் பிடிக்க அரசு ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ளது. … Read more

ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி காரசார விவாதம்: உலக நாடுகளின் எதிர்வினை  

பாரீஸ்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு காரசார விவாதத்துடன் முடிந்து, பேச்சுவார்த்தையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் அதிபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சிகள் குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பில் ட்ரம்ப் பொறுமையிழந்தவராக காரசார விவாதத்தில் ஈடுபட்டார். … Read more

இந்தியா – நியூசிலாந்து போட்டி.. ரோகித்தின் நிலை என்ன? முக்கிய பவுலர் நீக்கம்?

IND vs NZ: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் லீக் சுற்றுகள் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி லீக் போட்டி நாளை (மார்ச் 02) நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11ல் சில மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.  முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, இந்திய … Read more

Dhanush : டெல்லியில் பாலிவுட் படப்பிடிப்பு; வெளிநாட்டில் இட்லி கடை பாடல்! – தனுஷ் | Exclusive Update

Dhanush Exclusive பாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் ‘தேரே இஷ்க் மெய்க்’ படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடைபெற்று வருகிறது. ‘இட்லி கடை’ படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குநர்கள் ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, அருண் மாதேஸ்வரன், தமிழரசன் பச்சமுத்து இவர்களில் யாராவது ஒருவரின் படமாக இருக்ககூடும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அவர் இந்தியில் நடித்து வருகிறார். டெல்லி படப்பிடிப்பில் ‘இட்லி கடை’ நடிப்பு, இயக்கம் என தனுஷ் இரவு பகல் பாராமல், … Read more

கடந்த மாதம் சென்னை மெட்ரோவில் 86.65  லட்சம் பேர் பயணம்

சென்னை சென்னைமெட்ரோ ரயில்களில் சென்ற மாதம் 86.65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ”சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் … Read more

லைவில் சண்டை போட்ட டிரம்ப்-ஜெலன்ஸ்கி! இவங்களுக்கு என்ன பிரச்சனை?

Donald Trump Volodymyr Zelenskyy Fighting On Live : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சமீபத்தி சந்தித்துக்கொண்டனர். அப்போது, லைவ் வீடியோவில் இருவரும் காரசாரமாக விவாதித்துக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Ooty: ஆங்கிலக் கவிஞர்களின் மனங்கவர்ந்த மஞ்சள் நிற டஃபோடில்ஸ்! – முதன் முறையாக ஊட்டியில் அறிமுகம்

நூற்றாண்டு பழைமை வாய்ந்த தாவரவியல் பூங்காவான ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் ஹாலந்து நாட்டு துலிப் மலர்கள் முதல் ‘குயின் ஆஃப் சைனா’ என வர்ணிக்கப்படும் பவுலேனிய பூக்கள் வரை நூற்றுக்கணக்கான மலர் ரகங்களைப் பராமரித்து வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கப்பல்களின் மூலம் மலர் நாற்றுகளைத் தருவித்து, இங்கு அறிமுகம் செய்தனர். இன்றளவும் புதிய, புதிய மலர் ரகங்களை அறிமுகம் செய்யத் தோட்டக்கலைத் துறையும் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த … Read more

‘ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து அன்னைத் தமிழைக் காப்பேன்’ – முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: ‘ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன்’ என முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய்மொழியைக் காப்பதற்கான பாதை. ஆதிக்க மொழிகளை அடையாளம் கண்டு, அவற்றின் வலையில் வீழாமல் தடுத்துப் பயணிக்கும் பாதை என்பதை பஞ்சாப், தெலங்கானா மாநில அரசுகளின் அறிவிப்பு உறுதி செய்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தை ஆள்கின்ற ‘ஆம் ஆத்மி’ கட்சி … Read more