தொகுதி மறுசீரமைப்பு: `தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்' – எதிர்ப்பு கிளப்புவது ஏன்?

எதிர்க்கும் தென் இந்தியாதொகுதி மறுசீரமைப்பு மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றது முதல் தொகுதி மறுசீரமைப்பு, `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறையை கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, “நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும். அதற்கு ஏற்ற வகையில்தான் புதிய நாடாளுமன்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார். அதன்படி புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 543 … Read more

சிறு வியாபாரிகளுக்கான தொழில் உரிம கட்டணம் குறைப்பு: தமிழக அரசுக்கு விக்கிரமராஜா நன்றி

சென்னை: சிறு வியாபாரிகளுக்கான தொழில் உரிம கட்டணத்தை தமிழக அரசு குறைத்திருப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் வி்க்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு திடீரென தொழில், வணிக உரிமக்கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியது, வணிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளித்து பல்முனை அழுத்தம் கொடுக்கப்பட்டது. அடித்தட்டு … Read more

பெங்களூருவில் நடந்த சம்பவம் போல் மனைவி சித்ரவதை தாங்காமல் மும்பை ஐ.டி. மேலாளர் தற்கொலை

ஆக்ரா: ஆக்ராவில் உள்ள டிபன்ஸ் காலனியில் வசிப்பவர் நரேந்திர சர்மா. விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் மானவ் சர்மா (25), மும்பையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். மானவ் சர்மாவுக்கும் நிகிதா சர்மா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் மும்பையில் குடியேறினர். இந்நிலையில், கடந்த 24-ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டு மானவ் சர்மா தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக … Read more

நிலம் அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Government : சொந்த நிலங்களை அளவீடு செய்ய மக்கள் இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிதுள்ளது.

இட்லி தயாரிக்க பிளாஸ்டிக்  தாள் பயன்பாடு : கர்நாடகாவில் தடை

பெங்களூரு கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள் பயன்படுத்துவதை  தடை செய்து உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி ஆட்சி செய்யும் கர்நாடகாவில் மாநிலம் முழுவதும் 251 இடங்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியபோது, ஏராளமான ஓட்டல்களில் இட்லியை வேக வைப்பதற்கு துணிகளுக்கு பதில், பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே உடனடியாக கர்நாடகாவில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து … Read more

USA -Ukraine: `சத்தமாக பேசுவதை நிறுத்துங்கள்' – வாக்குவாதத்தில் முடிந்த சந்திப்பு- என்ன நடந்தது?

ஒப்பந்தத்தில் கையெழுத்திட… உக்ரைன் போருக்கு அமெரிக்கா செலவு செய்வதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை. மேலும், உக்ரைன் அதிபர் போர் என்ற பெயரை காரணம் காட்டி ஆட்சியில் நீடிக்கிறார் என்றும், அவருக்கு ஏன் நாம் உதவ வேண்டும் என்றும் ட்ரம்ப் கருதுவதாக தெரிகிறது. ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிக ஒப்பந்தம் செய்யவும், நட்பு பாராட்டவும் நினைக்கிறார். இந்த நிலையில், உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ட்ரம்ப் … Read more

இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல – கனிமொழி திட்டவட்டம்

சென்னை: இந்தி திணிப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை திமுக எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல. சுயமரியாதை, உரிமைக்குதான் திமுக குரல் கொடுக்கிறது என்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் பாஜக இல்லை என்றும் அவர் கூறினார். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திமுக மகளிர் அணி சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. … Read more

தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை

ஹைதராபாத்: ‘‘புதிய தொழில்நுட்பங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும்’’ என மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுரை வழங்கினார். தேசிய அறிவியல் தினம், ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) அரங்கில் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் முக்கிய விருந்தினராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, மாணவர்களிடையே பேசியதாவது: நோபல் பரிசை வென்ற சர். சி.வி. ராமன் அவர்கள் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ‘ராமன் எஃபக்ட்’ எனும் … Read more

சீமானிடம் ஒரு மணி நேரம் காவல்துறை விசாரணை

சென்னை சீமானிடம் காவல்துறையினர் ஒரு மணி நேர்ம விசாரணை நடத்தி உள்ளனர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அவரிடம் வழக்கு தொடர்பாக … Read more

Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' – உணர்ச்சி வசப்பட்ட சீமான்!

நடிகை கொடுத்த பாலியல் புகாரில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விசாரணையை முடித்துவிட்டு நள்ளிரவில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியவை முழுமையாக இங்கே. Seeman சீமான் சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு! சீமான் பேசியதாவது, ‘விளக்கம் கேட்டார்கள். என்னுடைய பதிலை கொடுத்தேன். எதுவும் புதிதில்லை. தேவைப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அடுத்தடுத்த சம்மன்கள் கொடுப்பது அடக்குமுறை, அராஜகம். நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்க 3 மாத … Read more