பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ! புகைப்படம் வெளியீடு…

ஸ்ரீநகர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி 28 பேரை சுற்றுக்கொன்றவர்களில் ஒருவரான பயங்கரவாதி ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும்,  ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் ஏராளமானோர் குழுமியிருந்து இயற்கையை ரசித்து வந்த நேரத்தில், அங்கு இந்திய ராணுவ உடையுடன் வந்த பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் கடந்த (ஏப்ரல்) 22-ம் தேதி சுற்றுலா பயணிகள், குறிப்பாக இந்து பயணிகளை சுட்டுக் கொன்றனர்.  இந்த நிகழ்வில் … Read more

இலையில் மதுபாட்டிலுடன் விருந்து; "போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக கூட்டமே சாட்சி" – இபிஎஸ்

கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைத்தளங்களில் விருந்துடன் இலையில் மதுபாட்டிலும் வைத்து விருந்து நடந்த காணொலி வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் நடந்ததாக அ.தி.மு.க-வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி! பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி! … Read more

பத்ம விருதுகள்: நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு அன்புமணி வாழ்த்து

சென்னை: பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார், பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோருக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன். விளையாட்டுத் … Read more

19 ஆண்டுகளாக ஆந்திராவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண்: நாட்டை விட்டு வெளியேற போலீஸார் வலியுறுத்தல்

பாகிஸ்தானில் பிறந்து, 7 வயதில் இந்தியா வந்த ஒரு பெண், 19 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் புட்டபர்த்திலேயே வசித்து வருகிறார். தற்போது பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லுமாறு ஆந்திர போலீஸார் அவரை வலியுறுத்தி உள்ளனர். கர்நாடக மாநிலம், பெல்லாரியை சேர்ந்த மகபூப் பீரான், நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார். அங்கேயே திருமணம் செய்து கொண்டு, 2 மகன்கள் மற்றும் 2 மகளுக்கு தந்தையானார். தனது இளைய மகள் ஜீனத் பீரானை ஆந்திர மாநிலம், தர்மாவரம் பகுதியில் … Read more

மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கை முறையையும் மேம்படுத்தும் பதஞ்சலி, எப்படி?

இன்றைய நவீன மருத்துவ முறையில், மருந்துகள் கொடுப்பதன் மூலம் நோய்கள் பெரும்பாலும் குணமாகிறது. ஆனால் பதஞ்சலி ஆயுர்வேதம் உடல் மற்றும் மனம் என ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது. 

தனித்தனியே நிச்சயமாகும் திருமணம்.. வெற்றி, துளசி ஒன்று சேரப்போவது எப்படி? – கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today’s Episode Update: நேற்றைய எபிசோடில் வெற்றி தியாவை மீட்டுக் கொடுக்க துளசி அவளுக்கு நன்றி சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்றது குறித்து பார்க்கலாம் வாங்க. 

காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கம்… ஸ்டாலின் அதிரடி – என்ன காரணம்?

MK Stalin News: காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Ajith: “இன்னும் பல வெற்றிகளைப் பெறணும்'' – பத்ம பூஷண் விருது பெற்ற அஜித்தை வாழ்த்திய பவன் கல்யாண்

மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2025) விருதுகளைக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேர் இடம்பெற்றுள்ளனர். நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின், செஃப் தாமு உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. 2025 பத்ம விருதுகள் இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 28) நடிகர் … Read more

கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா

மதுரை:  மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக  தொடங்கியது. இந்த விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு சொக்கநாதர் மீனாட்சி அருள்பெற்றனர். உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி   மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.  இன்று காலை சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ப்ரியாவிடையுடன் எழுந்தருளினார். பூஜைகளுக்கு பின்னர் மங்கள … Read more

Travel Contest : இந்தியாவில் இருப்பது போல் தோன்றியது! – நெதர்லாந்து நினைவலைகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் பயணங்கள் எப்போதுமே சுவையானவை . உற்சாகம் தரக்கூடியவை. தினசரி அலுவல் அட்டவணையில் இருந்து விடுபட்டு இயற்கையின் அரவணைப்பில்  விருப்பம் போல் உலவும் சந்தர்ப்பங்களைத் தருபவை. உலகின் பல பகுதிகளிலும்  சுற்றுலா சென்றிருப்பவர்களும் கூட மகிழ்ச்சியாக குறிப்பிடக்கூடிய ஒரு நாடு உள்ளதென்றால் அது  நெதர்லாந்துதான். கடல் … Read more