இன்றுடன் நிறைவடைகிறது சட்டப் பேரவைக் பட்ஜெட் கூட்டத்தொடர்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாள் அமர்வான இன்று  பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப் பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி அன்று தொடங்கியது. அன்றைய தினம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,  2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை காலை  9.30 மணியளவில் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் இடம்பெற்றன. இதையடுத்து மார்ச் … Read more

நள்ளிரவு 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

2025 பிஓய்டி சீல் எலக்ட்ரிக் விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

உலகயளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிஓய்டி நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான சீல் (Seal) எலக்ட்ரிக் செடானின் விலை ரூ.41 லட்சம் முதல் ரூ.53.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லித்தியம் ஐயன் பாஸ்பேட் (LFP- Lithium Iron Phosphate) குறைந்த மின்னழுத்த பேட்டரி (LVB – low voltage battery) மிக சிறப்பான நண்மைகளுடன் மின்னழுத்த பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது ஆறு மடங்கு குறைவான எடை, ஐந்து மடங்கு சிறந்த செல்ஃப் டிஸ்சார்ஜ் … Read more

NCERT: 7ம் வகுப்பு பாடத்தில் முகலாயர், டெல்லி சுல்தான்கள் நீக்கம்; பாடத்திட்ட மாற்றங்கள் ஒரு பார்வை

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), 2025-26 கல்வியாண்டிற்கான 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை திருத்தியமைத்து, டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர்கள் பற்றிய அத்தியாயங்களை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக, மௌரியர்கள், சுங்கர்கள் மற்றும் சாதவாகனர்கள் போன்ற பண்டைய இந்திய வம்சாவழிகள், மத மரபுகள், கலாச்சார மரபுகள் மற்றும் புனித தலங்கள் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முந்தைய பாடதிட்டங்கள், இடைக்கால இந்தியாவின் வரலாற்றை இஸ்லாமிய மன்னர்கள் மற்றும் முகலாய … Read more

தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டம் விவகாரம்: பேரவையில் முதல்வர் – எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்

தமிழகத்தில் போதைப்பொருள், கஞ்சா விற்பனை விவாகாரம் தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும் காரசார விவாதம் நடந்தது. சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: பொதுக்கூட்டம், மக்கள் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுக்கிறது. காவல்துறைக்கு தெரியாமல் போதைப்பொருள், கஞ்சா விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை. சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க … Read more

திருமணத்தின் மூலம் இந்தியாவுக்கு வந்த 5 லட்சம் பாகிஸ்தான் பெண்கள்: தீவிரவாதத்தின் புதுமுகம் என பாஜக எம்.பி. விமர்சனம்

புதுடெல்லி: ‘‘​பாகிஸ்​தானை சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள், திரு​மணத்​தின் மூலம் இந்​தி​யா​வுக்​குள் வந்​துள்​ளனர். இது​போன்ற தீவிர​வாதத்​தின் புது​முகத்தை எதிர்த்து எப்​படி போராட போகிறோம்​?’’ என்று பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே விமர்​சித்​துள்​ளார். காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இதையடுத்​து, பாகிஸ்​தானியர்​களின் அனைத்து வித​மான விசாக்​களை​யும் மத்​திய அரசு ரத்து செய்​தது. அத்​துடன் இந்​தி​யாவை விட்டு வெளி​யேற உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில், தீவிர​வாதத்​தின் புது​முக​மாக திரு​மணம் இருக்​கிறது … Read more

உக்ரைனுடன் போர் நிறுத்தம் அறிவித்தார் புதின்

மாஸ்கோ: உக்ரைன் உடன் 3 நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில்” மனிதாபிமான காரணங்களுக்கான அடிப்படையில் அதிபர் புதின் மே 8 முதல் 10 வரை போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இதனை உக்ரைனும் பின்பற்ற வேண்டும். ஆனால், இதனை மீறி உக்ரைன் தாக்குதல் நடத்தும்பட்சத்தில் ரஷ்யா அதற்கான தகுந்த பதிலடியை கொடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் தனது சமூக வலைதளத்தில் … Read more

இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்து தான் – ஹெச் ராஜா

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் உள்நாட்டில் இருந்து கொண்டு நாட்டிற்கு எதிராக பேசும் திருமாவளவன், சீமான், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்ராமையா உள்ளிட்டோர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேட்டி.

இந்த 4 அணிகளுக்கு 90 சதவீதம் பிளே ஆப் உறுதி! இனி தோற்றாலும் கவலையில்லை!

ஐபிஎல் 2025 தொடர் ஆரம்பிக்கும்போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது பாதிக்கட்டத்தை எட்டி உள்ள இந்த தொடரில் நான்கு அணிகள் தங்களது பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர். ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பிறகு கடந்த சீசனில் மிகவும் மோசமாக விளையாடிய அணிகள், இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் போன்ற அணிகள் அதிக வெற்றிகளை பதிவு செய்தனர். மாறாக … Read more

இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது/ இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ”குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மே 5ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் … Read more