“ஜனநாயக சக்திகளை ஒன்றுதிரட்டி பாசிசத்தை வீழ்த்துவோம்!” – மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முழக்கம்

மதுரை: “இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி, இணைந்து போராடி பாசிசத்தை வீழ்த்துவோம்” என மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு ஏப்.1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 3-வது நாளான இன்று ‘கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்னும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மதுரை மாநகர் … Read more

“மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லையா?” – அமித் ஷா விளக்கம்

புதுடெல்லி: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் கோரி மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா மக்களவையில் சட்டப்பூர்வ தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய அமித் ஷா, “இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை காரணமாக மணிப்பூர் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு காரணமாகவே மணிப்பூரில் இரு இனக் குழுக்களுக்கு இடையே மோதல் தொடங்கியது. இவை கலவரமோ அல்லது பயங்கரவாதமோ அல்ல. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் விளக்கத்தின் … Read more

தர்பூசணியை நம்பி சாப்பிடலாமா…? உணவு பாதுகாப்பு அதிகாரியே சொன்ன முக்கிய தகவல்!

Food Safety Officer Sathish Kumar About Watermelon : சென்னையில் எந்த இடத்திலும் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறங்களோ கலப்படமோ கண்டறியப்படவில்லை என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பேட்டியளித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட முடிவு

டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர். . தங்கள் முழு சொத்து விவரங்களையும் பொதுவெளியில் பகிர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உட்பட 30 நீதிபதிகள் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் முயற்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சொத்துக்களின் மதிப்பை வெளியிடுவது அவர்களின் சுய முடிவாக இருக்கும் என்றும், வெளியிடப்பட்ட அனைத்து தரவுகளும் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும் … Read more

இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை: மக்களவையில் நிதின் கட்கரி தகவல்

புது டெல்லி, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, ஓட்டுநர்களுக்கான பயிற்சி நிறுவனங்களை அமைப்பதற்காக மத்திய அரசு ரூ.4,500 கோடி மதிப்புள்ள திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது; உலக வங்கி அறிக்கையின்படி, இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறுகிறது. நாட்டில் சரியான ஓட்டுநர் பயிற்சி வசதிகள் இல்லாதது பல விபத்துகளுக்கும் இறப்புகளுக்கும் வழிவகுக்கிறது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நாடு முழுவதும் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. வெற்றி

பெங்களூரு, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்றுகள் முடிவில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், எப்.சி. கோவா, பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஒவ்வொரு அரையிறுதியும் இரண்டு ஆட்டங்கள் (உள்ளூர், வெளியூர்) கொண்டதாக நடத்தப்படுகிறது. இதில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அரையிறுதியின் முதலாவது சுற்றில் பெங்களூரு அணி, எப்.சி. கோவா அணியை எதிர் கொண்டது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு … Read more

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் R-Line பாதுகாப்பு மற்றும் முக்கிய வசதிகள் | Automobile Tamilan

ஏப்ரல் 14ல் இந்திய சந்தைக்கு வரவிருக்கும் புதிய டிகுவான் R-line எஸ்யூவி காரில் 9 ஏர்பேக்குகள், 21 விதமான பாதுகாப்பு சார்ந்த Level-2 ADAS உட்பட தானியங்கி முறையில் பார்க்கிங் வசதி என பலவற்றை கொண்டு EURO 5 நட்சத்திர கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டை பெற்றதாக விளங்குகின்றது. VW Tiguan R-line பாதுகாப்பு, பெர்ஃபாமென்ஸ் மட்டுமல்லாமல் பல்வேறு ஆடம்பரமான வசதிகளை கொண்டுள்ள VW டிகுவான் ஆர்-லைனில் 19 அங்குல கான்வென்ட்ரி டைமண்ட் அலாய் வீல் உடன் பக்கவாட்டில் … Read more

TVK : 'இந்திய அரசியலமைப்பின் மீதான களங்கம்!' – வக்ஃபு திருத்த மசோதாவுக்கு விஜய் எதிர்ப்பு!

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். Vijay ஜனநாயகத்திற்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்! இந்திய அரசியலமைப்பு மாண்பை உறுதிப்படுத்த வேண்டும்! எனக் கூறியிருக்கும் விஜய், மேற்கொண்டு, * ஒன்றிய பா.ஜ.க அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃபு சட்டத் திருத்த மசோதா, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் … Read more

“வக்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்…” – தவெக தலைவர் விஜய்

சென்னை: ஜனநாயகத்துக்கு எதிரான வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்பு மாண்பை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு, … Read more

“வக்பு சொத்துக்கான வலுவான சட்டத்தை லாலு அன்றே வலியுறுத்தினார்!” – மாநிலங்களவையில் அமித் ஷா விவரிப்பு

புதுடெல்லி: “வக்பு சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வலுவான சட்டம் வேண்டும் என்று 2013-ம் ஆண்டே கூறியவர் லாலு பிரசாத் யாதவ்” என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். வக்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இன்று மாநிலங்களவையில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மசோதாவை தாக்கல் செய்து விவாதத்தை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய கிரண் ரிஜிஜு வக்பு திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் குறித்து … Read more