இந்தியாவில் சுகாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பதஞ்சலி.. எவ்வாறு?

பதஞ்சலி மருத்துவத்தில் மட்டுமல்லாமல், பண்டைய ஆயுர்வேத புத்தகங்களைப் பாதுகாப்பதிலும் அவற்றை வெளியிடுவதிலும் கவனம் செலுத்துகிறது. 

தனுஷ்-சிவகார்த்திகேயனுக்குள் என்ன சண்டை? ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்! பிரபலம் சொன்ன உண்மை..

Fight Between Dhanush And Sivakarthikeyan : கோலிவுட்டின் டாப் நடிகர்களாக விளங்கும் தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஏதோ சண்டை வந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து ஒரு பிரபலம் மனம் திறந்துள்ளார்.  

காங்கிரஸ் கொடிக்கம்பங்களை பொது இடத்தில் இருந்து அகற்ற செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை’ தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பொது இடங்களில் இருந்து காங்கிரஸ் கொடிக்கம்பங்களை அகற்ற வலியுறுத்தி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ”தமிழகத்தில் பரவலாக அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அரசு மற்றும் பொது இடங்களில், நடைபாதைகளில், நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக அமைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் நாள் அனைத்து கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையில் … Read more

கார்கேவுக்கு எதிரான வக்பு நில ஆக்கிரமிப்பு பேச்சு; நாடாளுமன்றத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்த நிலையில், பா.ஜ.க. தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. 12 மணி நேரம் விவாதத்திற்கு பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் மசோதா … Read more

ஐபிஎல் 2025: பெங்களூரு அணிக்கு முதல் தோல்வி, குஜராத் அசத்தல் வெற்றி

பெங்களூரு, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் … Read more

20 ஆண்டுகளில் 60 லட்சம் அப்பாச்சி பைக்குகளை விற்பனை செய்த டிவிஎஸ் மோட்டார் | Automobile Tamilan

கடந்த 2005 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி 150 துவங்கி தற்பொழுது அப்பாச்சி RTR 160 முதல் அப்பாச்சி RTR 310 வரை தற்பொழுது 4 மாடல்களாக 60க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 43 வருட ரேசிங் பாரம்பரியத்தின் உந்துதலில் தயாரிக்கப்பட்ட அப்பாச்சி மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றதாக அமைந்து, முதன்முறையாக பல்வேறு நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் டிவிஎஸ் முன்னோடியாக உள்ளது. 2005 ஆம் ஆண்டு டிவிஎஸ் … Read more

புதுச்சேரி: `போக்சோ, வழிப்பறி ரௌடிகளுக்காக போராட்டம் நடத்துகிறார் நாராயணசாமி’ – சபாநாயகர் அதிரடி

புதுச்சேரி பஞ்சாயத்ராஜ் அமைப்பின் தலைவரை அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் தாக்கியதாக குற்றம் சுமத்திய காங்கிரஸ் கட்சியினர், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று முன்தினம் தவளக்குப்பத்தில் போராட்டம் நடத்தினர். காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் புதுச்சேரி – கடலூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன்பிறகு போலீஸார் அவர்களை கைது செய்த பிறகே, நிலைமை சீரானது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், “தேசிய நெடுஞ்சாலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக முன்னாள் … Read more

டாஸ்மாக் வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு – காரணம் என்ன?

சென்னை: அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் … Read more

'அடிபணியும் கலாச்சாரம்' – சீன எல்லை பிரச்சினை, அமெரிக்க வரி விவகாரத்தில் மத்திய அரசை சாடிய ராகுல்

புதுடெல்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, அமெரிக்காவின் கூடுதல் வரி தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சீனா 4,000 சதுர கி.மீ. இந்திய எல்லையை ஆக்கிரமித்துள்ளதாகவும், அமெரிக்க வரி இந்திய பொருளாதாரத்தை முழுவதும் சீரழித்துவிடும் என்றும் தெரிவித்தார். மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: நமது நாட்டு எல்லையில் 4000 சதுர கிலோ மீட்டரை சீனா ஆக்கிரமித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு நமது வெளியுறவு … Read more

கட்டிலை கார்-ஆக மாற்றிய இளைஞர்! படுத்துக்கொண்டே பயணிக்கலாமோ? வைரல் வீடியோ..

Viral Video Of Man Riding A Car Made Of Bed : சமூக வலைதளத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒருவர் தனது கட்டிலை காராக மாற்றி ஓட்டிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.