கர்நாடகாவில்  பைக் டாக்ஸி சேவைக்கு உயர் நீதிமன்றம் தடை

பெங்களூரு: ரேபிடோ, ஓலா, உபேர் போன்ற தனி​யார் பைக் டாக்ஸி நிறு​வனங்​களின் கூட்​டமைப்பு, கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவையை அனு​ம​திக்கக்கோரி உயர்​ நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்தது. இந்த மனுவை நேற்று நீதிபதி ஷியாம் பிர​சாத் விசாரித்து, ‘‘பைக் டாக்ஸி சேவைக்கு விதி​முறை​களை உரு​வாக்​கு​மாறு கர்​நாடக அரசுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதற்​காக 3 மாதங்​கள் கால‌ அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது. அதுவரை பைக் டாக்ஸி சேவையை 6 வாரங்​களுக்கு கர்​நாட​கா​வில் நிறுத்த வேண்​டும். அதற்​குள் அரசு சட்ட திருத்​தத்தை மேற்​கொள்ள வேண்​டும்​’’என … Read more

தாய்லாந்தில் முகமது யூனுஸுடன் பிரதமர் மோடி நாளை பேச்சுவார்த்தை

பாங்காக்: தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உச்சிமாட்டின் இடையே வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். தாய்லாந்தில் நாளை நடைபெற உள்ள 6வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டுச் சென்றார். காலை 11 மணி அளவில் … Read more

விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ் விவகாரம்: செல்வமணி கொடுத்த பதிலடி

நடிகர் தனுஷுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நிலவி வரும் நிலையில், அண்மையில் Five Star Creations சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து தற்போது R.K.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கருப்பு பேட்ஜ் அணிந்த ஸ்டாலின்… 110இன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?

Tamil Nadu News: சட்டப்பேரவையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் இரண்டு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். 

விராட் கோலி பேட்டிங்… பந்துவீச வரும்போது எமோஷ்னல் ஆன முகமது சிராஜ் – வீடியோ வைரல்

Virat Kohli, Mohammad Siraj Video : ஐபிஎல் 2025 தொடரின் நேற்றைய போட்டியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி பேட்டிங் ஆடும்போது பந்துவீச வந்த முகமது சிராஜ், திடீரென எமோஷ்னல் ஆகி, பந்துவீசாமல் விலகிச் சென்றார். இப்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இந்தப் போட்டியில் விராட் கோலி அங்கம் வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. முகமது சிராஜ் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் … Read more

Redin Kingsley: “இளவரசி பிறந்திருக்கிறாள்'' – மகிழ்ச்சியில் ரெடின் கிங்ஸ்லி -சங்கீதா தம்பதி

நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் சீரியல் நடிகை சங்கீதாவுக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நடனத்தின் பக்கம் இருந்த ரெடின் கிங்ஸ்லியை இயக்குநர் நெல்சன் சினிமா பக்கம் அழைத்து வந்து `கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் நடிக்க வைத்தார். View this post on Instagram A post shared by Sangeetha.V (@sangeetha.v.official) அந்த கதபாத்திரம் மக்களிடையே சரியாக க்ளிக் ஆனதும் ரெடின் கிங்ஸ்லிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர தொடங்கியது. இதனை தொடர்ந்து `டாக்டர்’, `பீஸ்ட்’, `ஜெயிலர்’ … Read more

வளிமண்டல சுழற்சி: தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, மதுரை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும்(ஏப் 04) கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளி மண்டல சுழற்சி காரணமாக நேற்று இரவு முதல் தற்போதுவரை சென்னை உள்பட பல … Read more

மியான்மர் நிலநடுக்கம்: 5 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்கப்பட்ட இளைஞர்

நேபிடாவ் மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 2 ஆயிரத்து 886 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 521 பேர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 441 பேர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து, மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கட்டிட … Read more

கைலாக் அறிமுக விலை சலுகையை நீட்டித்த ஸ்கோடா | Automobile Tamilan

ஸ்கோடா ஆட்டோவின் புதிய கைலாக் காம்பேக்ட் எஸ்யூவி மாடலுக்கு அமோக ஆதரவினை பெற்றுள்ள நிலையில் 15,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை மே 2025 இறுதிக்குள் டெலிவரி வழங்க திட்டமிட்டுள்ளது. கைலாக் ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் வரையிலான அறிமுக சலுகை விலையை ஏப்ரல் 2025 வரை நீட்டித்துள்ளது. இதன் மூலம் மேலும் முன்பதிவு எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் வெற்றிகரமாக 25 ஆண்டுகளை கடந்துள்ள ஸ்கோடா வரலாற்றில் மார்ச் 2025 மாதந்திர விற்பனை எண்ணிக்கை முதன்முறையாக … Read more

50 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு; தாய்க்கு பதில் தேர்வு எழுதிய 28 வயது மகள் கைது!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழ் தேர்வு முடிந்த நிலையில் நேற்று ஆங்கில பாடத் தேர்வு நடைபெற்றது. இதே போல் நாகை மாவட்டத்தில் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர். இந்த நிலையில், நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன் தமயந்தி பள்ளியில் ஆங்கில பாடத்திற்கான தனித்தேர்வை பெண் ஒருவர் எழுதினார். தேர்வு அறை கண்காணிப்பாளர், வினா மற்றும் விடைத்தாளை கொடுத்த பிறகு பலரும் தேர்வு எழுதி கொண்டிருந்தனர். … Read more