கள்ள நோட்டல்ல, கலர் நோட்டு – தப்பிய விசிக கடலூர் மாவட்ட பொருளாளர்; சிக்கிய துப்பாக்கிகள் – பின்னணி?

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டப் பொருளாளராக பதவி வகித்து வந்தார். இவரும் ஆவட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் அதர்நத்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் நட்புடன் பழகி வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுடன் யார் பழகுவது என்பதில் செல்வம் மற்றும் சங்கருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு சங்கரின் வீட்டுக்குச் சென்ற செல்வம், … Read more

“அதிமுக, பாஜக மற்றும் தவெக இடையே இரண்டாம் இடத்துக்குத்தான் போட்டி” – திருமாவளவன்

சென்னை: “அண்மையில் நடந்த தவெக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், அதிமுக-பாஜக தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. தவெக-தான் இரண்டாவது பெரிய கட்சி என்று கூறியுள்ளார். எனவே, பாஜக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கிடையே தமிழகத்தில் இரண்டாவது கட்சி யார் என்பதில் தான் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்தச்சூழலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது”, என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் … Read more

உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவாலுக்கு இந்தியா தீர்வு வழங்குகிறது: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் புகழாரம்

புதுடெல்லி: கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 100 நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி உதவி செய்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் புகழாரம் சூட்டி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவில் அரசு முறை பயணம் செய்தார். அப்போது சசி தரூர் கூறும்போது, “பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமையும். நமது நாட்டுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்” என்று தெரிவித்தார். டெல்லியில் … Read more

ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜி.வி. பிரகாஷ் குமாரின் பரபர சஸ்பென்ஸ் த்ரில்லர், ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

FEFSI: `வேதனையான நாள்; நான் இன்றைக்குப் படம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால்..' – ஆர்.கே.செல்வமணி ஆதங்கம்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, “தயாரிப்பாளர்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லை. ஃபெஃப்சி அமைப்பை அழித்து புதிய அமைப்பை உருவாக்க நினைக்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கமாட்டோம்.” எனக் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து ஃபெஃப்சி சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசியிருந்தார். நடிகர் தனுஷ் `மேலிடத்து உத்தரவு’ என்று கூறியதை மறந்தீரோ? அதனை தொடர்ந்து நேற்றைய தினம் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் கலைசெல்வி, `தனுஷ், அவர்களின் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்துப் பெற்ற முன்பணத்திற்கு இன்று … Read more

இந்தியாவின் பொதுக் கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும்! மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா காந்தி

டெல்லி: இந்தியாவின் பொதுக் கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி,  மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா காந்தி அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், மதவாதமயமாக்கல் ஆகிய 3 கொள்கைகள் மூலம் மோடி அரசு இந்தியாவின் பொதுக் கல்வி முறையை படுகொலை செய்வது முடிவுக்கு வர வேண்டுமென  வலியுறுத்திய  சோனியா காந்தி  இந்த  மூன்று C க்களும் முடிவுக்கு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதாவது,  இந்த … Read more

யூத மத குரு சுவி கோகன் படுகொலை வழக்கு: அமீரகத்தில் 3 பேருக்கு மரண தண்டனை

துபாய், இஸ்ரேல் குடியுரிமை பெற்ற மால்டோவா நாட்டை சேர்ந்தவர் சுவி கோகன் (வயது 28). இவர் நியூயார்க் நகரை தளமாகக் கொண்டு செயல்படும் யூத மதத்தின் முக்கிய கிளையான சாபாத் லுபாவிச் இயக்கத்தின் தூதராக செயல்பட்டு வந்தார். அமெரிக்க குடியுரிமை பெற்றவரான அவரது மனைவி ரிவ்கி கடந்த 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மத குரு கவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க்கின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவி கோகன் துபாயில் உள்ள அல் வாசல் சாலை பகுதியில் … Read more

`கிரேட் எஸ்கேப்’ – யானை வந்தது கூட தெரியாமல் நடைபாதையில் உறங்கிய நபர்கள், உயிர் தப்பிய அதிர்ஷ்டம்!

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக இருந்தது வருகிறது முதுமலை புலிகள் காப்பகம். அடர் வனத்தில் இருந்து அவ்வப்போது வெளியே வரும் சில யானைகள், அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருகின்றன. ரேஷன் கடைக்கு வந்த யானை அரிசி சுவைக்கு பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் சில, ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி அரிசி பருப்பு போன்றவற்றை உட்கொண்டு வருகின்றன. இதனைத் தவிர்க்கும் வகையில் மசினகுடி போன்ற பகுதிகளில் ரேஷன் கடைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு … Read more

சொத்து மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: “தமிழக அரசு சொத்து மதிப்பை அதிகப்படுத்தாமல் பதிவு கட்டணத்தை உயர்தினால் கூட தமிழக அரசுக்கு வருமானம் வரும், மக்களும் பயனடைவார்கள். ஆனால் சொத்து மதிப்பை மீண்டும், மீண்டும் அதிகப்படுத்துவதால் பொதுமக்களுக்கு வருமான வரி சுமை கூடுகிறது, பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் அடைவதில்லை. ஆகவே தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

கடப்பாவில் ஏழுமலையானை வழிபட்ட முஸ்லிம்கள்

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஏழுமலையான் கோயிலில் முஸ்லிம்கள் உகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நேற்று முன்தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இதுபோல் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள தேவுண்ணி கடப்பா ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலிலும் திரளான பக்தர்கள் வழிபட்டனர். … Read more