CSK: தீபக் ஹூடா சிறப்பாக விளையாடினார்… ஹசி புகழாரம் – ஷாக்கில் ரசிகர்கள்

CSK vs PBKS: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (ஏப். 30) நடைபெறும் 49வது லீக் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் – ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சிஎஸ்கே அணியின் பிளே ஆப் கனவு ஏறத்தாழ தகர்ந்துவிட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற இன்னும் ஓரிரு போட்டிகள் தேவை எனலாம். CSK vs PBKS: ‘அனைத்து போட்டிகளையும் வெல்வதே இலக்கு’ இந்நிலையில் … Read more

 முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி நேற்று முப்படை தளபதிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். காஷ்மீரை குறிவைத்து, பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்ததால் மத்திய அரசு எடுத்த கடும் நடவடிக்கையால் காஷ்மீரில் சமீபகாலமாக பயங்கரவாத செயல்கள் ஒடுக்கப்பட்டு இருந்தது. ஆயினும் கடந்த 22-ந் தேதி யாரும் எதிர்பாராத நிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில்  ஈடுபட்டது தடை செய்யப்பட்ட … Read more

பிரதமர் மோடியுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் நேரில் சந்திப்பு

புதுடெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோரை பிரதமர் மோடி நேற்று (செவ்வாய் கிழமை) மாலை சந்தித்து பேசினார். இந்த உயர்மட்ட கூட்டத்தில் பல முக்கிய விசயங்கள் … Read more

மகளிர் கிரிக்கெட்; இந்திய அணிக்கு அபராதம் விதிப்பு – ஏன் தெரியுமா..?

கொழும்பு, இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தான் இதுவரை ஆடிய 2 ஆட்டங்களிலும் (இலங்கை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி கடந்த 27ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆட்டத்தில் 15 ரன் … Read more

சிரியாவில் இரு தரப்பினர் இடையே மோதல்: 13 பேர் பலி

டமாஸ்கஸ், சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்றார். அதேவேளை, முன்னாள் அதிபர் அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிரியா அரசுப்படைகள் மீதும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், சிரியாவின் டமாஸ்கஸ் மாகாணம் … Read more

கல்லூரி விடுதி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி: அமைச்சர் தகவல்

சென்னை: கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகள் தரப்படும் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பதிலளித்து 20 அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: இந்த துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் சேர்க்கை குறைவாக உள்ள 12 பள்ளி விடுதிகள் ரூ.4.15 கோடியில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும். வாடகை கட்டிடங்களில் இயங்கும் … Read more

தனியார் பள்ளி கட்டணத்தை ஒழுங்குபடுத்த சட்ட மசோதா: டெல்லி அமைச்சரவை ஒப்புதல்

தனியார் பள்ளிக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவுக்கு டெல்லி அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. டெல்லியில் கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக உயர்த்துவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து கட்டண நிர்ணயத்தை ஒழுங்குபடுத்தவும் அதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் புதிய சட்டம் கொண்டுவர டெல்லி அரசு முடிவு செய்தது. இது தொடர்பான சட்ட மசோதாவுக்கு முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், “டெல்லி அரசு … Read more

திபெத் புனித தலங்களை பார்வையிட இந்தியர்களுக்கு சீனா அழைப்பு

திபெத்தில் உள்ள புத்த மத மற்றும் இந்து மத புனித தலங்களை பார்வையிட இந்திய யாத்தீரிகர்கள் வரலாம் என சீன வெளியுறவுத்துறை அழைப்பு விடுத்துள்ளது. கரோனா தொற்று பரவியதாலும், எல்லையில் நடந்த மோதல் காரணமாக இந்தியா – சீனா இடையே உறவுகள் பாதித்ததாலும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்திய யாத்தீரிகள் சீன எல்லையை கடந்து திபெத்தில் உள்ள கைலாஷ் மலை மற்றும் மானசரோவர் ஏரி போன்ற புனித தலங்களுக்கு செல்ல முடியாமல் இருந்தது. இந்நிலையில் கடந்தாண்டு … Read more

Ajith: "அஜித் சார் விருது வாங்கினது பெருமை!" – நடிகை ஷாலினி பேட்டி

நடிகர் அஜித் நடிப்பு, ரேஸ் என கலக்கிக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம், ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதை பெற்றிருந்தார் நடிகர் அஜித். விருது பெறும் தருணத்தில் நடிகை ஷாலினி மற்றும் அஜித்தின் குழந்தைகள் நெகிழ்ச்சியுடன் கைதட்டிய காணொளியும் இணையத்தில் வைரலானது. நடிகர் அஜித் குமார் விருது பெற்றதும் சில மீடியாகளை சந்தித்துப் பேட்டியும் கொடுத்திருக்கிறார் அஜித். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரேஸ் வேளையில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார் அஜித். … Read more

சாரதா தேவி திருக்கோயில்,, ரேஸ் கோர்ஸ்,, கோயம்புத்தூர்.

சாரதா தேவி திருக்கோயில்,, ரேஸ் கோர்ஸ்,, கோயம்புத்தூர். தல சிறப்பு : சிருங்கேரி மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். பொது தகவல் : சாரதா தேவி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் சன்னதியின் தெற்குப் பக்கத்தில் பால கணபதி, வடக்குப் பக்கத்தில் பாலமுருகன் சன்னதி உள்ளன. விநாயகர் சன்னதியின் தெற்குப் பகுதியில் வடக்கு நோக்கி ஆதி சங்கரரின் சன்னதி அமைந்துள்ளது. தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. … Read more