மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்! தொழில்துறை அமைச்சர் தகவல்…

சென்னை: மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழ்நாடு அரசு  தொழில்துறை அமைச்ச டி.ஆர்.பி.ராஜா  தெரிவித்து உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 30) மின்னணு உதிரிபாகங்கள் (electronic components) உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை (Tamil Nadu Electronics Components Manufacturing Scheme) வெளியிட்டார். இதன்மூலம் சுமார் 60ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த … Read more

DC vs KKR: “போட்டியின் திருப்புமுனையே அவர் வீசிய அந்த 2 ஓவர்தான்'' – வெற்றி குறித்து ரஹானே

ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டியில் நேற்று டெல்லியை எதிர்கொண்டது கொல்கத்தா. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, பவர்பிளேயில் நன்றாக வேகமெடுத்து, பின்னர் மிடில் ஓவர்களில் ஸ்லோடவுன் ஆகி ஒரு வழியாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அடுத்து களமிறங்கிய டெல்லி, ஓப்பனிங் தடுமாறினாலும் நடுவில் அக்சர் – டு பிளெஸ்ஸிஸ் 13 ஓவர்கள் வரை ஆட்டத்தைத் தங்கள் பக்கம் வைத்திருந்தது. அந்த நேரத்தில் … Read more

முன்னாள் படை வீரர்களுக்கான புற்றுநோய் நிவாரண நிதி ரூ.10 ஆயிரமாக உயர்வு: அமைச்சர் கயல்விழி அறிவிப்பு

சென்னை: ‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வரும் மாதாந்திர புற்றுநோய் நிவாரண நிதி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்’’ என, சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார். தமிழக சட்டப் பேரவையில், பொதுத் துறை மானியக் கோரிக்கையில் முன்னாள் படை வீரர் நலன் தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது: தமிழகத்தில் … Read more

காஷ்மீர் எல்லையில் பதற்றம்: பாகிஸ்தான் 6-வது நாளாக மீறல் – இந்திய ராணுவம் பதிலடி!

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரம் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்லையில் பாகிஸ்தான் 6-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவ தரப்பில் இருந்து பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஜம்மு – காஷ்மீரின் உரி, நவு​கம், ராம்​பூர், கெரன், குப்​வா​ரா, பூஞ்ச் உள்​ளிட்ட எல்​லைப் பகு​தி​களில் கடந்த 6 நாட்​களாக இந்​திய, பாகிஸ்​தான் ராணுவ வீரர்​களுக்கு இடையே கடும் துப்​பாக்​கிச் … Read more

ஹாசினியை கொன்ற கொடூரன்… தாயை கொன்ற வழக்கில் விடுதலை – திடுக் பின்னணி!

Daswant Released: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக உள்ள தஷ்வந்த் அவரின் தாயை கொன்ற வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியை இங்கு காணலாம்.

குடும்ப கட்சியானது தேமுதிக: விஜயபிரபாகர் இளைஞர் அணி செயலாளராக நியமனம்…

சென்னை: தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.  இதன்மூலம் திமுக, பாமக, மதிமுக வரிசையும் தேமுதிகவும் குடும்ப கட்சியாக மாறி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், கட்சியை தொடங்கும்போது, தனது குடும்ப உறுப்பினர்கள் கட்சியில் சேர மாட்டார்கள் என கூறி கட்சியை தொடங்கி மக்களின் ஆதரவை பெறுகின்றனர். பின்னர், தங்களது பொண்டாட்டி, பிள்ளை, உறவினர்களை கட்சிக்குள் கொண்டு வந்து முக்கிய  பதவிகளில் உட்கார வைத்து, கட்சியை … Read more

முஸ்லிம் நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: ஜீவனாம்ச வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: காஜி , காஜியத் மற்றும் ஷரியா போன்ற முஸ்லிம் நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை எனவும், அவை பிறப்பிக்கும் உத்தரவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது’’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முஸ்லிம் பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கணவர் மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.50,000 வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். எதுவும் கிடைக்காததால் காஜியாத் நீதிமன்றம் மூலம் தலாக் பெற்றுள்ளார். அதன்பின் விவகாரத்து பெற்ற பெண், ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருவருக்கும் … Read more

ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசம் – விசாகப்பட்டினத்தின் சிம்மாசலம் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் கோயில். இங்கு சந்தனோத்சவம் திருவிழாவையொட்டி புதன்கிழமை அதிகாலையில் இருந்தே தரிசனதுக்காக பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது, ரூ.300 கட்டண வரிசையில் பக்தர்கள் நின்றிருந்தபோது, அருகில் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்டு 20 நாட்களே ஆன அந்த 20 அடி சுவர் இடிந்து விழுந்ததில், … Read more

'முப்படைகளுக்கு முழு சுதந்திரம்' பிரதமர் மோடி – பயங்கரவாதிகளுக்கு பதிலடி உறுதி!

Pahalgam News: பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.