விண்வெளியில் இருந்து தாக்கினாலும் பாதுகாப்பு… கோல்டன் டோம் அமைக்க டிரம்ப் தீவிர ஆர்வம்

வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவில் ஏவுகணை தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளும் வலிமையான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அலாஸ்காவில், இடைமறித்து தாக்கும் அமைப்புகள் உள்ளன. இதுதவிர, வான் பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன. அவற்றுடன் மற்றொரு புதிய பாதுகாப்பு அமைப்பாக கோல்டன் டோம் ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, குடியரசு கட்சி உறுப்பினரான அமெரிக்காவின் 40-வது ஜனாதிபதி ரொனால்டு ரீகன் இதனை … Read more

இம்முறை பொசொன் நிகழ்விற்கு முழு அரச அனுசரணை

2023 ஆம் ஆண்டுக்கு பின்னர் முழு அரச அனுசரனையுடன் பொசொன் தினத்தை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தை பாராட்டுகிறேன். மிஹிந்தலை ராஜமஹா விகாராதிபதி வண வலவாஹெங்குனுவெவே தம்மரத்தன தேரர்

ஆசிரியர்களின் பணியில் ஆட்சியர்களின் தலையீடு அதிகம்: முதுகலை பட்டாதாரி ஆசிரியர் கழகம்

விருதுநகர்: ஆசிரியர்களின் பணிகளில் மாவட்ட ஆட்சியர்களின் தலையீடு அதிகமாக உள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்தது. தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழுக் கூட்டம் விருதுநகரில் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், முதல் நிலை ஆசிரியர்களுக்கு மே மாத விடுமுறையை உறுதி செய்தல், அரசுப் … Read more

‘கொலைகாரரோ, தீவிரவாதியோ இல்லை’ – யுபிஎஸ்சி மோசடி வழக்கில் பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன்

புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பூஜா கேத்கருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், பூஜா விசாரணையில் துளியும் ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவருக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த டெல்லி போலீஸாரையும் உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது. “பூஜா கொலைகாரரோ, தீவிரவாதியோ இல்லை. நீங்கள்தான் விசாரணையை முடித்திருக்க வேண்டும். அதற்காக உங்களிடம் ஒரு வழிமுறை இருந்திருக்கும். அவர் இப்போது அனைத்தையும் இழந்துவிட்டார். அவரால் எங்கேயும் வேலை பெற முடியாது. … Read more

இந்தியா உடனான மோதல் எதிரொலி: சீனாவுடன் வர்த்தக ரீதியாக நெருங்கும் பாகிஸ்தான்!

சீனாவும், பாகிஸ்தானும் வர்த்தக தொடர்புகள், முதலீட்டு விவகாரங்களில் ஆழமான நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இதன்மூலம் சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை விரிவாக்கம் செய்ய வியூகம் வகுத்திருப்பதாகவும் தெரிகிறது. கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீரின் … Read more

அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது ஏன்? எதிர்ப்புக்கு தமிழக அரசின் பதில் இதுதான்!

Anakaputhur Encroachment: அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு அரசு அளித்த விரிவான விளக்கத்தை இங்கு காணலாம்.

ஐபிஎல் தொடர் முடிஞ்சதும் ரோஹித் சர்மாவுக்கு ஆபரேஷன்… ஏன்…? என்னாச்சு…?

Rohit Sharma Operation: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தற்போது மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. ஏற்கெனவே டி20 அரங்கில் இளம் தலைமுறையினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணி மாற்றத்தை எதிர்கொள்ள உள்ளது. Team India: மூத்த வீரர்கள் ஓய்வு  ரவிசந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் வருங்காலம் எப்படி இருக்கும் … Read more

கூகுளுடன் ஜோடி போட்ட ஏர்டெல்… வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சர்பிரைஸ்

Airtel latest News : பாரதி ஏர்டெல்லும் கூகிளும் ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளன. இது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான கூகிள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் சந்தா சேவையை வழங்குகிறது. இது சாதன சேமிப்பகத்தின் குறைந்த அளவு சேமிப்புத் திறனால் உருவாகும் சவாலை எதிர்கொள்ள உதவுகிறது. அனைத்து போஸ்ட்பெய்டு மற்றும் வைஃபை வாடிக்கையாளர்களும் கூடுதல் செலவில்லாமல் ஆறு மாதங்களுக்கு 100 ஜிபி கூகிள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜைப் பெற முடியும். இந்த சேமிப்பகத்தை அவர்கள் கூடுதலாக ஐந்து … Read more

தாய்லாந்து சுற்றுலா செல்பவர்கள் கவனத்திற்கு… சுற்றுலா மோசடிகளுக்கு தலைசிறந்த நகரமாக பாங்காக் உள்ளதாக மாஸ்டர்கார்டு அறிக்கை

சுற்றுலா மோசடி நடைபெறும் நகரங்களின் பட்டியலில் பாங்காக் முதலிடத்தில் உள்ளதாக மாஸ்டர்கார்டு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. CNBC-யில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த அறிக்கையில் சுற்றுலாத் துறையே மோசடி நடவடிக்கைகளுக்கு முன்னிலை வகிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பாங்காக் மற்றும் பிற பிரபலமான தாய்லாந்து சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் பயணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. உச்ச பயண பருவங்களில் மோசடிகளில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாகவும் கோடை காலங்களில் 18 சதவீதமும் குளிர்காலங்களில் 28 சதவீதமும் … Read more