சுரங்க முறைகேடு: பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை – எம்எல்ஏ பதவியும் கோவிந்தா! இது கர்நாடகா சம்பவம்…

பெங்களூரு: சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கில் பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில  முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான  கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால், அவரது எம்எல்ஏ பதவி பறிபோயுள்ளது. பல ஆண்டுகள் பா.ஜ.க.வில் இருந்த ஜனார்த்தன ரெட்டி, 2008-ல் எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். அவர் கனிம சுரங்க முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டபின் பா.ஜ.க.வுடனான தொடர்பில் இருந்து … Read more

updated Yamaha Aerox 155 – யமஹாவின் 2025 ஏரோக்ஸ் 155cc ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் மேக்ஸி ஸ்டைல் பெற்ற ஸ்கூட்டர் வரிசையில் பிரசத்தி பெற்ற யமஹா நிறுவன ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் புதிதாக நிறங்கள் சேர்க்கப்பட்டு OBD-2B மேம்பாட்டினை கொண்ட எஞ்சினுடன் ரூ.1,50,689 முதல் ரூ.1,54,169 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. OBD-2B ஆதரவினை பெற்ற இந்த ஸ்கூட்டர் மாடலில் 155cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 15bhp பவர் வெளிப்படுத்த 8000rpm-லும் மற்றும் 13.9Nm டார்க் 6,500rpm-ல் வெளிப்படுத்துகிற நிலையில் CVT கியர்பாக்ஸுடன் வருகின்றது. புதிதாக வந்துள்ள 2025 … Read more

செய்தி வாசிப்புக்கு முன்னும் பின்னும்; இவ்ளோ செய்துள்ளாரா பாத்திமா பாபு? |இப்ப என்ன பண்றாங்க பகுதி 8

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்ட வங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இப்ப என்ன பண்றாங்க?’ என இவர்களைத் தேடிப் பிடித்தோம். விகடன் டாட்.காமில் (vikatan.com) இனி ஒவ்வொரு வாரமும் நீங்கள் இவர்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்  பாத்திமா பாபு அறிமுகப்படுத்தியது சென்னை டி.டி இல்லீங்க! பாத்திமா பாபு. இந்தப் பெயரைக் கேட்டதும் பலருக்கும் தூர்தர்ஷனில் இவர் செய்தி வாசித்ததுதான் நினைவில் … Read more

“கொங்கு பகுதியில் தோட்டத்து வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை…” – நயினார் நாகேந்திரன்

கோவை: “கொங்கு பகுதியில் தோட்டத்து வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என சிவகிரி சம்பவத்தை முன்வைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (மே 6) நடந்தது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பட்டுக்கோட்டையில் பாஜக முன்னாள் பெண் நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது … Read more

“ஐ.நா பாதுகாப்புக் குழு கூட்டத்தால் பாகிஸ்தானுக்கு சாதகம் இல்லை” – சசி தரூர் முன்வைக்கும் காரணம்

திருவனந்தபுரம்: “பாகிஸ்தான் தனக்கு சாதகமான சூழல் இருப்பதாக கருதி இருக்கும். ஆனால், ஐ.நா பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் பலரும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட கடினமான கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது” என்று திங்கள்கிழமை இரவு நடந்த ஐ.நா பாதுகாப்புக் குழு கூட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி சசிதரூர் விளக்கியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் திங்கள்கிழமை இரவு கூடிய நிலையில், காங்கிரஸின் … Read more

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாவில் பள்ளிக்குச் செல்லாத 37% குழந்தைகள்

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 37% குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என்ற விவரத்தை அம்மாகாண கல்வித் துறை தெரிவித்துள்ளது. கைபர் பக்துன்வா மாகாண கல்வித் துறை, அம்மாகாணத்தின் பள்ளிக் கல்வியின் நிலை குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், அம்மாகாணத்தின் அடிப்படைக் கல்வியின் நிலை குறித்த பல்வேறு தரவுகள் வெளியாகி உள்ளன. அந்த அறிக்கையில், “கைபர் பக்துன்வாவில் 49.20 லட்சம் குழந்தைகள் அதாவது, 37% குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். காஷ்மீரை ஒட்டிய கோலாய்-பலாஸ் கோஹிஸ்தான் … Read more

பகல்காம் சம்பவம்: 'மோடிக்கு 3 நாட்கள் முன் தகவல் வந்ததா?' – கார்கே பகீர் கேள்விகள்!

India Pakistan Conflict: பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததால்தான் பிரதமர் தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்திருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார்.

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை-ஸ்கூல் பட இயக்குனர் பேட்டி!

Actor Yogi Babu Is Not Money Minded : யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை என ” ஸ்கூல் ” பட இயக்குனர் பேட்டியளித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

2 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. வேலூரில் அதிர்ச்சி!

வேலூரில் இரண்டு மாத கர்ப்பிணி பெண் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

CSK ஓபனிங்கில் பெரிய மாற்றம்…? கேகேஆர் நாக்அவுட் செய்ய சூப்பர் வாய்ப்பு!

Chennai Super Kings, IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்பு 18வது சீசன் மிகவும் அதிர்ஷ்டமில்லாத சீசனாகிவிட்டது. சேப்பாக்கம் முதல்கொண்டு எங்கு சென்றாலும் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது சிஎஸ்கே.  11 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 2 வெற்றிகளையே பெற்றிருக்கிறது. கடைசி இடத்தில் தவித்துக்கொண்டிருக்கும் சிஎஸ்கேவுக்கு இன்னும் 3 லீக் போட்டிகளே உள்ளன. கேகேஆர், ராஜஸ்தான், குஜராத் என மூன்று அணிகளுடன் மோத இருக்கின்றன. இதுவரை சிஎஸ்கே (CSK) ஒரு சீசனில் புள்ளிப்பட்டியலின் … Read more