விஜய் சேதுபதி-அட்டக்கத்தி தினேஷ் நடித்த சீரியல்! 2 பேரும் எப்படியிருக்காங்க பாருங்க..

Attakathi Dinesh Vijay Sethupathi In Tamil Serial : சினிமாவில் கடின உழைப்பை போட்டு மேலே வந்த நடிகர்கள், விஜய் சேதுபதி மற்றும் அட்டக்கத்தி தினேஷ். இவர்கள் நடித்த சீரியலின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

அசிங்கத்தை போக்க CSK இதை செய்யணும்… பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

IPL 2025 CSK vs RR: ஐபிஎல் 2025 தொடர் தற்போது ரீ-ஸ்டார்ட் ஆகி இரண்டு நாள்கள்தான் ஆகிறது. இன்னும் 10 லீக் போட்டிகள் மிச்சம் இருக்கிறது. மே 27ஆம் தேதியோடு லீக் சுற்று நிறைவடைகிறது. CSK vs RR: தகுதிப்பெறும் அணிகள் எவை? அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட மூன்று அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. குஜராஜ் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் … Read more

Soori: 'வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை; அப்படி வந்தால்…' – நடிகர் சூரி சொல்வது என்ன?

‘விலங்கு’ வெப்சீரிஸ் இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘மாமன்’. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருக்கிறார். தவிர ராஜ்கிரண், ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாமன் மே 16 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. படத்தின் வரவேற்பு குறித்து தொடர்ந்து சூரி செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “படத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பம், குடும்பமாக வந்துப் … Read more

பாதி விலையில் விற்பனையாகும் ஏசி.. இன்றே தள்ளுபடியில் வாங்கிப் போடுங்கள்

AC Price At Huge Discount: பெரும்பாலான வீடுகளில் ஏசி அதாவது ஏர் கண்டிஷனர் பயன்படுத்தப்படுகிறது. இது மக்களுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. ஆனால், அதன் விலை அதிகமாக இருப்பதால், அனைவராலும் இதனை வாங்க முடியாமல் போகலாம். இத்தகைய சூழ்நிலையில், மக்கள் இந்த ஏசியில் மிகப்பெரிய தள்ளுபடிக்காக காத்திருக்கிறார்கள். மலிவான விலையில் ஏசி வாங்குவதற்காக பலர் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்காக காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில், ஏசி-யில் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன. மலிவு விலையில் ஏசியை எங்கிருந்து … Read more

மின் கட்டண உயர்வுக்கு சி பிஐ எதிர்ப்பு

சென்னை தமிழக அரசு மின் கட்டணத்தை  உயர்த்தியதற்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவ்த்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், “தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளன. அஇஅதிமுக ஆட்சியில் ஜெ.ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்பில் இருந்த வரை மத்திய அரசின் உதய் மின் திட்டத்தை ஏற்கவில்லை. கடுமையாக எதிர்த்து வந்தார். அவரது மறைவுக்கு பின்னர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் 2017 ஆம் … Read more

திருப்பதி கோவில் காத்திருப்பு மண்டபத்தில் பெண் பக்தர்கள் இடையே மோதல்

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காலை முதலே திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் இலவச தரிசனத்திற்காக மிக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், ஏழுமலையானை வழிபட சுமார் 24 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டும் என்ற நிலை நிலவுகிறது. பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ள காரணத்தால் திருப்பதி மலையில் தங்கும் … Read more

பாகிஸ்தானுக்கு புதிதாக 11 நிபந்தனைகள் விதித்த சர்வதேச நாணய நிதியம்

இஸ்லாமாபாத், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துக்கும் (ஐ.எம்.எப்.), பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தானுக்கு முதல் தவணையாக 110 கோடி டாலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் 2-வது தவணையாக 102 கோடி டாலரை (ரூ.8 ஆயிரத்து 670 கோடி) சர்வதேச நாணயம் நிதியம் விடுவித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இந்த … Read more

ஜூன் 3ல் ஆல்-வீல் டிரைவ் டாடா ஹாரியர் இவி அறிமுகமாகிறது.! | Automobile Tamilan

QWD என டாடா மோட்டார்ஸ் அழைக்கின்ற ஆல் வீல் டிரைவ் வசதியை பெற்ற டாடாவின் ஹாரியர் இவி மாடல் ஜூன் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் பல்வேறு முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். முன்பே டீசர் உட்பட தொடர்ந்து பல்வேறு சாகசங்கள் சார்ந்த நிகழ்வுகளில் ஹாரியர் இவி மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியுள்ள நிலையில், வரவுள்ள காரில் பெரிய பேட்டரி ஆப்ஷன் அதிகபட்சமாக நிகழ் நேரத்தில் 500 கிமீ வெளிப்படுத்தலாம் என உறுதி … Read more

சிறந்த செயல்திறனுக்காக `சன்சத் ரத்னா விருது' – திமுக எம்.பி. உள்பட 17 பேர் தேர்வு! – முழு விவரம்!

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறந்த செயல்திறனை மதிப்பளிக்கும் விதமாக சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 2010-ம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பரிந்துரையின்படி, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட Prime Point Foundation அமைப்பால் நிறுவப்பட்டது. அப்துல் கலாம் இந்த விருதுக்கு தகுதியானவர்கள் நாடாளுமன்றத்தில் விவாதங்களில் பங்கேற்பது, மசோதா தாக்கல், கேள்விகள் எழுப்புதல் போன்ற செயல்திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த விருதுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய, தேசிய பிற்படுத்தப்பட்ட … Read more

கடலூரில் தொடர் கனமழை: குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் விளைநிலங்கள் சேதம்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததில் குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, வேப்பூர், பண்ருட்டி, அண்ணாமலைநகர், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை … Read more