தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்… அகவிலைப்படி, அரியர்தொகை வரப்போகுது..!

Tamil Nadu government : தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள், ஊழியர்களுகான அகவிலைப்படி உயர்வு, அரியர் தொகை இம்மாத சம்பளத்துடன் வரும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்தியா ஏ அணி அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், மே 30, 2025 அன்று தொடங்கவுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா ‘ஏ’ அணியை அறிவித்துள்ளது. இந்த அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல முக்கிய உள்நாட்டு மற்றும் சில சர்வதேச வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.  சமீப காலமாக இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக தனது திறமையை வெளிப்படுத்தி வரும் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார். இவர் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் போட்டிகள் நிறைவடைந்ததும் … Read more

Ajith: "நான் சரியான பாதையில் இருக்கிறேன் என பத்ம பூஷன் நம்பிக்கை கொடுத்திருக்கிறது!" – அஜித்

அஜித் தற்போது ரேஸ், சினிமா என இரண்டு பக்கமும் மிளிர்ந்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. Ajith Kumar Racing இதுமட்டுமன்றி, சமீபத்தில் ‘பத்ம பூஷன்’ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பெற்றிருந்தார். அந்த விருது கொடுத்திருக்கும் பொறுப்பு தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார் அஜித். அஜித் பேசுகையில், “விருது பெற்றது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஆனால், அத்துடன் எனக்கு … Read more

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி… உடனே இந்த அப்டேட்டை தெரிந்து கொள்ளவும்..!

Airtel Latest News tamil : ஏர்டெல் நிறுவனம் சைபர் மோசடி கண்டறிதல் செட்டிங்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள 38 கோடி ஏர்டெல் பயனர்களை சைபர் மோசடியிலிருந்து பாதுகாக்கும். இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஃபிஷிங், மோசடி அழைப்புகள் மற்றும் ஆபத்தான லிங்குகள் தொடர்பான மோசடி வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. இந்த அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ஏர்டெல்லின் இந்தப் புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

ஆபரேஷன் சிந்தூர்: முழு நாடும், ராணுவமும் மோடியின் காலில் வணங்குவதாக ம.பி. துணை முதல்வர் சர்ச்சை பேச்சு

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்ததற்காக, முழு நாடும், ராணுவமும், வீரர்களும் பிரதமர் நரேந்திர மோடியின் காலில் வணங்குவதாக மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவதா பேசியுள்ளளார். ஏற்கனவே, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை “பயங்கரவாதிகளின் சகோதரி” என்று குறிப்பிட்டு பாஜகவை அவமானப்படுத்திய நிலையில், அம்மாநில துணை முதல்வர், இந்திய ராணுவம் பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் வணங்குவதாகக் கூறி … Read more

ஐ.பி.எல்.2025: டெல்லி அணியிலிருந்து முன்னணி வீரர் விலகல்

சிட்னி, இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும் … Read more

2025 ஆக்சஸ் ஸ்கூட்டரில் ரைட் கனெக்ட் TFT எடிசன் வெளியானது | Automobile Tamilan

சமீபத்தில் வெளியான 2025 ஆம் ஆண்டிற்கான சுசூகி நிறுவன ஆக்சஸ் 125 ஸ்கூட்டரில் கூடுதல் மேம்பாடாக 4.2 அங்கல டி.எஃப்.டி கிளஸ்டர் கொண்ட ரைட் கனெக்ட் ஸ்பெஷல் எடிசன் மாடல் ஆனது விற்பனைக்கு ரூ.1,01,600 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான மாடலை ஓல அமைந்திருந்தாலும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பேர்ல் மேட் அக்வா சில்வர் நிறத்துடன் மெட்டாலிக் மேட் பிளாக் எண். 2, மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ, பேர்ல் கிரேஸ் ஒயிட் மற்றும் சாலிட் ஐஸ் … Read more

'என் தந்தை கொல்லப்பட வேண்டும் என்கிறார்' குற்றம்சாட்டும் ட்ரம்ப் மகன்; '86 47' எண்ணின் பின்னணி என்ன?

‘என் தந்தை (ட்ரம்ப்) கொல்லப்பட வேண்டும் என்று சொல்கிறார்’ என்று அமெரிக்க பெடரல் வங்கியின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் காமி மீது குற்றம்சாட்டியுள்ளார், ட்ரம்பின் மகன் ட்ரம்ப் ஜூனியர். மேலே கூறியிருப்பதுப்போல, ஜேம்ஸ் காமி பெடரல் வங்கியின் முன்னாள் இயக்குநர் ஆவார். ட்ரம்பின் 2017 டு 2021 அதிபர் ஆட்சியின் போது, ஜேம்ஸ் காமியை அந்தப் பதவியில் இருந்து நீக்கியிருந்தார். தற்போது மீண்டும் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றுள்ளார். ஜேம்ஸ் காமியின் பதிவு இந்த நிலையில், ஜேம்ஸ் காமி … Read more

மாதந்தோறும் மின் கட்டணம் முறை எப்போது? – அமைச்சர் சிவசங்கர் தகவல்

திருநெல்வேலி: “தமிழகத்தின் நிதிநிலை குறித்து அனைவருக்கும் தெரியும். எனவே, காலம் கனியும்போது மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும்” என்று மின்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். திருநெல்வேலியில் நேற்று மாலையில் சூறை காற்றுடன் பெய்த கோடை மழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. திருநெல்வேலி தச்சநல்லூரில் மின்தடையால் எரிவாயு தகனமேடையில் சடலங்களை எரியூட்டுவதற்கு மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. இது குறித்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இப்பகுதியில் இன்று (மே 16) ஆய்வு … Read more

பயங்கரவாதிகள், பாகிஸ்தான் மீது இன்னும் கடும் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்: சித்தராமையா

பெங்களூரு: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளை ஒழிக்கவும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் அவர்களுக்கு ஆதரவளிக்காமல் இருக்கவும் இந்தியா இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் கோப்பல் மாவட்டத்தில் உள்ள கினிகேரா விமானப்படை தளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, “காஷ்மீரில் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு உதவுவதும் அடைக்கலம் கொடுப்பதும் பாகிஸ்தான்தான். என்னைப் பொறுத்தவரை, நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அதைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக இன்னும் … Read more