ஏர்டெல் நிறுவனத்தின் மிகப்பெரிய அறிவிப்பு… எல்லா ஓடிடியும் ஒரே ரீச்சார்ஜில் பார்க்கலாம்..!!

ஏர்டெல் : ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் மிகப்பெரிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ 5, மற்றும் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் உட்பட 25 பிளஸ் முன்னணி OTT-களை இனி ஒரே ரீச்சார்ஜில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பார்த்து ரசிக்க முடியும். இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”) மே 27 ஆம் தேதி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குப் புதிய இணையற்ற பொழுதுபோக்குப் பேக்குகளை அறிவித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் … Read more

சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பது தொடர்பாக ஆன்லைனில் உரிமம் பெற டிஜிட்டல் நடைமுறை!

சென்னை: சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு உரிமம் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  அதில் கூறப்பட்டுள்ளதாவது, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்போர் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து … Read more

2025 இறுதியில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் யமஹா இந்தியா | Automobile Tamilan

இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2025 ஆம் ஆண்டில் இறுதி மாதங்களில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது. இந்நிலையில் சோதனை ஓட்ட படங்கள் முதன்முறையாக வெளியாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தில் இந்நிறுவனம் முதலீட்டை மேற்கொண்டு இருந்த நிலையில் அந்த முதலீட்டின் அடிப்படையில் தான் தற்பொழுது புதிய ஸ்கூட்டர் ஆனது அந்நிறுவனத்தின் ஸ்கூட்டரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ரிவர் நிறுவன இண்டி மின்சார ஸ்கூட்டரின் அடிப்படையிலான … Read more

Spirit படத்தில் நடிக்க ரூ.20 கோடி? தீபிகா படுகோனேவுக்குப் பதில் டிம்ரியை ஒப்பந்தம் செய்த சந்தீப்

தனது ஸ்பிரிட் படத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுடன் தெலுங்கு பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதில் நடிக்கவும் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். அதேசமயம் தீபிகா படுகோனே கர்ப்பமாக இருந்தார். இதனால் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டிருந்தது. குழந்தை பெற்றுப் படப்பிடிப்புகளில் பங்கேற்க தீபிகா படுகோனே தயாரானபோது வேறு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்படத்தில் நடிக்கத் தனது ரூ.20 கோடி கட்டணம் வேண்டும் என்றும், படத்தில் கிடைக்கும் லாபத்தில் தனக்குப் பங்கு வேண்டும் என்றும், … Read more

மநீம மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு: செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: வரும் ஜுன் மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின், நிர்வாகக்குழு செயற்குழு கூட்டம் இன்று (மே 28) நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள … Read more

5-ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

புதுடெல்லி: இந்தியாவில் ரேடாரில் சிக்காத 5-ம் தலைமுறை போர் விமானங்கள் தாயரிக்கும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானுக்கு இத்தகைய போர் விமானங்களை வழங்கும் திட்டத்தை சீனா விரைவுபடுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் ராஜ்நாத் சிங் இதற்கான ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள அதிக சக்திவாய்ந்த போர் விமானமாக ரபேல் உள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல், நான்காம் தலைமுறை போர் விமானம் ஆகும். உலகில் அமெரிக்கா, … Read more

சிஎஸ்கேவில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? யூடியூப் சேனலில் சொன்ன பதில்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அனைத்து போட்டிகளும் முடிவடைந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது யூடியூப் பக்கத்தில் ரசிகர்களின் கமெண்ட் மற்றும் கருத்துக்களுக்கு பதில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் 9.75 கோடிக்கு எடுத்தது. இவர் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த சீசன் முழுவதும் அஸ்வின் 7 மட்டுமே எடுத்துள்ளார். அதேபோல பேட்டிங்கிலும், டாப் ஆர்டரில் இறங்கிய பொழுது ரன்கள் அடிக்கவில்லை. … Read more

Swarail App: டிக்கெட் புக்கிங் முதல் உணவு ஆர்டர் வரை… உங்கள் ஹை-டெக் ரயில் ஸ்நேகிதன்

SwaRail Super App: பிப்ரவரி 2025 இல், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), ரயில்வே தகவல் அமைப்புகள் மையம் (CRIS) உருவாக்கிய ‘SwaRail’ எனப்படும் அதன் ஆல்-இன்-ஒன் ரயில்வே சேவைகள் செயலியின் பீட்டா பதிப்பை (வெளியீட்டுக்கு முந்தைய பதிப்பு) அறிமுகப்படுத்தியது. இந்த செயலி இப்போது கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் இரண்டிலும் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. IRCTC: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் அறிமுகம் செய்த … Read more

1 சதுர அடி 1 லட்ச ரூபாய்க்கு வாங்கி வெள்ளத்தில் கார் மிதப்பதை பார்க்கலாம்… மும்பை வெள்ளம் குறித்து விவேக் அக்னிஹோத்ரி கேலி

மும்பையில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளது. பருவமழை துவங்கும் போதே அதிகனமழையுடன் துவங்கியுள்ள நிலையில், ரயில் மற்றும் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் பெய்துவரும் கனமழை காரணமாக நகரின் பல இடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதுகுறித்து, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளருமான விவேக் அக்னிஹோத்ரி “இந்தியாவில் நகரமயமாக்கல் பரிதாபகரமான நிலையில் உள்ளதாக” விமர்சித்துள்ளார். மும்பையின் … Read more

​வெலிகம சேனாநாயக்க விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திக்கு 72 இலட்சம் மதிப்புள்ள திட்டம்

வெலிகம பிரதேச செயலாளர் பிரிவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான, வெலிகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (27) வெலிகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.