பாரிஸ் டயமண்ட் லீக் ஈட்டி எறிதல்: பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா

பாரிஸ் [பிரான்ஸ்], இந்தியாவின் நீரஜ் சோப்ரா நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு (உள்ளூர் நேரப்படி) பாரிஸ் டயமண்ட் லீக் பட்டத்தை வென்றதன் மூலம் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தார். முன்னதாக நேற்று நடைப்பெற்ற போட்டியின் முதல் சுற்றிலேயே 88.16 மீட்டர் தூரம் எறிந்தார். நடு சுற்றுகளில் மூன்று புள்ளிகள் இல்லாத போதிலும், அவரது தொடக்க முயற்சியே போட்டி முழுவதும் அவரை முதலிடத்தில் வைத்திருக்க போதுமானதாக இருந்தது. நீரஜ் சோப்ரா ஆரம்பத்தில் தனது தொனியை அமைத்து, தனது … Read more

கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்

ஒட்டாவா டெல்லியை சேர்ந்தவர் தன்யா தியாகி. இவர் உயர் படிப்புக்காக கனடா சென்றார். அங்குள்ள கால்கரி பல்கலைக்கழகத்தில் அவர் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென இறந்து விட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் அவரது மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் உள்ளது. மாணவி தன்யா தியாகி இறந்தது தொடர்பாக வான்கூரில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் டெல்லியில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு … Read more

இந்தியாவில் MY2025 ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் விலை பட்டியல் வெளியானது

ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் MY2025 ஆம் ஆண்டிற்கான மாடல்களின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2.40 லட்சம் முதல் ரூ.42.30 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. MY2025 Harley-Davidson motorcycle range Price list: Bike Name Ex-Showroom Price H-D X440 ரூ. 2.40 லட்சம் H-D Nightster ரூ. 13.51 லட்சம் H-D Nightster Special ரூ. 14.29 லட்சம் H-D SportsterS ரூ. 16.70 லட்சம் H-D Pan America Special ரூ. … Read more

திண்டுக்கல்: இந்து முன்னணிக்கு போலீஸ் ஆதரவு? சிபிஎம் போராட்டம்; பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக மத்திய மாநில அரசுகள் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தி பிரசாரம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சரத்குமார் மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாடு குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அவர் பேசிய விஷயம் குறித்துத் தெரிந்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகி வினோத் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் … Read more

ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்கு பதிய வேண்டும்: லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு

மதுரை: பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்குப் பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்குப் பதிய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. தமிழகத்தில் 8,790 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு 5 விதமான பதிவேடுகள் கொள்முதல் செய்ததில், கடந்த 2019-ல் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கை குழு அரசுக்கு அறிக்கை அளித்தது. இதுகுறித்து விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், … Read more

கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடக்கம்

காங்டாக்: 5 ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்கிம் மாநிலகத்திலுள்ள நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கியுள்ளது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் கடந்த 2020-ல் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை நாதுலா கணவாய் வழியாகச் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த யாத்திரை ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது … Read more

3-ம் உலகப் போர் மூளும் அபாயம்: அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை

வாஷிங்டன்: இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சக்திவாய்ந்த அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது 87 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருப்பதாகவும் இதை 90 சதவீதம் செறிவூட்டினால் அணு குண்டுகளை தயாரிக்க முடியும் … Read more

ரேஷன் அட்டையே இல்லையா… இந்த திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது!

Ration Card: ரேஷன் அட்டை உங்களிடம் இல்லையென்றால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் இந்த திட்டங்களில் உங்களால் பயன்பெற முடியாது.

வரதராஜபெருமாள் திருக்கோயில், அதங்குடி ,  நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்

வரதராஜபெருமாள் திருக்கோயில், அதங்குடி ,  நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம் தல சிறப்பு : வலது பக்கம் சீதாபிராட்டி, சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ அஞ்சநேயர் இருகை பொத்தி, வரு கையை கீழே வைத்து கட்டளையிடுங்கள் என செய்தி கேட்பது போன்று உள்ளார். பொது தகவல்: தெற்கு பக்கம் நுழைவு வழி, தெற்கு பக்கம் பார்த்த வகையில் ராமர், லட்சுமணர் மற்றும் சீதா பிராட்டியாரும் அவரை பார்த்த வகையில் பக்த ஆஞ்சநேயரும்(பட்டாபிஷேக கோலத்தில்), ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜபெருமாள் கிழக்குப்பக்கம் பார்த்த வகையிலும், தனி … Read more

இன்று சர்வதேச யோகா தினம்: 3 லட்சம் பேர் பங்கேற்கும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி: பிரதமர் மோடி பங்கேற்பு

விசாகப்பட்டினம், பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் உடல் நலன் குறித்து பேசி வருகிறார். அப்படி, 2014ம் ஆண்டு ஐ.நா சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறி அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என பரிந்துரைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவு அளத்த நிலையில், 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21 ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ. நா சபை அறிவித்தது. சுமார் 200 நாடுகளில் யோகா பயிற்சியை … Read more