நார்டன் எலெக்ட்ரா, காம்பேட் அறிமுகம் எப்பொழுது.? | Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக மற்றொரு நிறுவனமாக நார்டன் மோட்டார்சைக்கிள் பிராண்டின் கீழ் பைக்குகளை அறிமுகம் செய்ய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இங்கிலாந்தின் நார்டன் நிறுவனத்தை வாங்கியிருந்த நிலையில் தற்போது பல்வேறு புதிய பிராண்ட் பெயர்களாக காம்பேட், எலக்ட்ரா ஆகியவற்றை பதிவு செய்துள்ளது. அதே வேளையில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி ஆறு மோட்டார் சைக்கிள்களை அடுத்தடுத்து மூன்று ஆண்டுகளுக்குள் கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. … Read more

ஹைதராபாத் மேம்பாலத்தில் ஓட்டமெடுத்த ஒட்டகம்; சவாரியில் சிக்கிய இளைஞரை மீட்ட சம்பவம்.. வைரல் காட்சி!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான மேம்பாலத்தில், ஒருவர் ஒட்டகத்தின் மீது ஆபத்தான முறையில் சவாரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தின் பி.வி. நரசிம்மராவ் விரைவுச் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வைரலாகும் வீடியோவில் சவாரி செய்பவர் ஆபத்தான முறையில் முன்னும் பின்னுமாக நகர்கிறார். விலங்கு சாலையின் விளிம்பிற்கு அருகில் சென்றதும், ஒட்டகத்தின் மீது சவாரி செய்யும் நபர் நிதானத்தில் இல்லாததை அறிந்து கொண்டு பின்னால் காரில் வந்தவர் தடுக்க முயற்சி செய்துள்ளார். ஷா என்ற நபர் … Read more

கர்நாடகாவில் திறக்கப்பட்ட நீர் ஒகேனக்கல் வந்தடைந்தது: வெள்ளப்பெருக்கால் அருவியில் குளிக்க தடை

தருமபுரி: கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த 17-ம் தேதி விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 19-ம் தேதி இரவு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. அன்றிரவு 10 மணியளவில் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக பதிவானது. … Read more

வாரத்திற்கு 38 சர்வதேச விமானங்களை குறைக்க ஏர் இந்தியா முடிவு

புதுடெல்லி: வாரத்திற்கு 38 சர்வதேச விமானங்களை குறைக்க முடிவு செய்துள்ள ஏர் இந்தியா நிறுவனம் ஜூன் 21 முதல் ஜூலை 15 வரை 3 வெளிநாட்டு சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் தனது சேவையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அகலம் அதிகமாக உள்ள விமானங்களின் இயக்கத்தை தற்காலிகமாக 15% குறைப்பதாக ஏர் இந்தியா நேற்று அறிவித்தது. மேலும், கடந்த … Read more

ஈரான் – இஸ்ரேல் போர் தகவல் பரிமாற்றம்: புதின், ஜின்பிங் முடிவு 

மாஸ்கோ: ஈரான் – இஸ்ரேல் போர் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் புதின், ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு கொள்கை உதவியாளர் யூரி உஷாகாவ் நேற்று மாஸ்கோவில் கூறுகையில், “ஈரான் … Read more

ஆகாஷ் பாஸ்கரன் போட்ட மனு… அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த உயர் நீதிமன்றம்!

Madras High Court: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக ED மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இந்நாள் மற்றும் முன்னாள் தலைமை செயலாளர்கள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர்  அடுத்த மாதம் (ஜூலை 21லந்தேதி) சென்னை  உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக, நீதிபதி பட்டு தேவானந்த் உத்தர விட்டுள்ளார். அரசு பணியில் இருப்பவர்கள், பணிக்காலத்தில் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இதில், பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை கடந்த 2023ம் ஆண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பான … Read more

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம்: மத்திய அரசிடம் இன்று அறிக்கை தாக்கல்

பெங்களூரு, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 4-ந் தேதி ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இந்த விவகாரத்தில் பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த தயானந்த், கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த விகாஸ்குமார், துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய சேகர் ஆகிய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்திருந்தது. இதுபற்றி மத்திய அரசுக்கு, கர்நாடக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக … Read more

தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: தமிழக மகளிர் அணி தோல்வி

சென்னை, தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த மகளிர் பிரிவு ஆட்டம் ஒன்றில் பஞ்சாப் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் தமிழக அணி 4-8 என்ற கோல் கணக்கில் அரியானாவிடம் பணிந்தது. அரியானா அணியில் சிங்சுபாம் இபெம்ஹால், யாதவ் சோனிகா தலா 3 கோலும், சுமன் … Read more

வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் பணி.. மீண்டும் தொடங்கிய அமெரிக்கா

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, வெளிநாட்டினருக்கு எதிரான கொள்கைகளை பின்பற்றி வருகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு கட்டுப்பாடு விதித்தார். மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த மாதம் அமெரிக்க அரசு அறிவித்தது. விசா நேர்காணல்கள் நிறுத்தப்பட்டன. மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்து, அவர்களை பற்றிய பின்னணியை அறிய கால அவகாசம் தேவைப்படுவதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தது. இதனால், அமெரிக்காவில் படிக்க திட்டமிட்டு … Read more