கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கே.ஆர்.எஸ். அணையை இன்று திறந்து வைத்தார்

கர்நாடக மாநிலத்தில் பருவமழை முன்கூட்டிய தொடங்கியுள்ள நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூரில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை ஜூன் மாதமே அதன் முழு கொள்ளளவை எட்டியது. தொடர் மழை காரணமாக அணையில் இருந்து உபரி நீர் கடந்த சில தினங்களாக திறக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டின் மேட்டூர் அணையும் நிரம்பியது. இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், கே.ஆர்.எஸ். அணையை விவசாய பாசனத்திற்காக கர்நாடக … Read more

JEE: தேர்வறையில் பல்லி, தொழில்நுட்ப கோளாறு; வழக்கு தொடர்ந்த மாணவர் – அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

தேர்வறையில் பல்லியைக் காண நேரிட்டதால் தேர்வில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை எனவும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தேர்வு எழுத இயலாமல் தவித்ததாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவரொருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என ஐஐடி கான்பூர், தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்ட் கடந்த மாதம் நடைபெற்ற ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்ட் தேர்வில் பங்கேற்ற மாணவரொருவர், … Read more

செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜூன் 30) நடந்தது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 593 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் … Read more

நுகர்வு கலாசாரம் கற்பனை செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்: திரவுபதி முர்மு பேச்சு

பரேலி: கோவிட் பெருந்தொற்றுநோயானது நுகர்வு அடிப்படையிலான கலாசாரம் மனிதகுலத்திற்கு மட்டுமின்றி, பிற உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கற்பனை செய்து பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடியது என எச்சரிக்கை விடுத்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் இன்று (ஜூன் 30, 2025) நடைபெற்ற இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடிரயசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “’ஈஷாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற வாழ்க்கை தத்துவத்தை … Read more

சிவகங்கையில் அடுத்த அதிர்ச்சி.. இரண்டாம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு!

சிவகங்கையில் லாக்கப் டெத்தை தொடர்ந்து இரண்டாம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி துவங்குவதை அடுத்து முன்பதிவு மற்றும் டோக்கன் விநியோகம் தொடங்கியது

புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு மற்றும் டோக்கன் விநியோகம் ஜம்முவில் உள்ள சரஸ்வதி தாம்மில் இன்று தொடங்கியது. 3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலான அமர்நாத் க்ஷேத்திரத்திற்கு 38 நாள் யாத்திரை ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும். யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள நுன்வான்-பஹல்காம் இடையே 48 கிமீ பாதை மற்றும் காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டலுக்கு 18 கிமீ பாதை ஆகிய இரண்டு வழிகளில் அனுமதிக்கப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய … Read more

சிறு வணிகர்களுக்கான மின் கட்டண சலுகைகள் என்னென்ன? – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அனைத்து வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. இதன்மூலம் 2.83 கோடி மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள். மேலும், தற்போது உள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த அரசின் செய்திக் குறிப்பு: … Read more

பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: எத்தனை கி.மீ.-க்கு எவ்வளவு அதிகரிப்பு?

புதுடெல்லி: நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் பயணிகள் ரயில் சேவை அடிப்படை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்: ரயில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயணிகளின் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம் பயணிகள் ரயில் சேவைகளின் அடிப்படை கட்டணத்தை சீராய்வு செய்து திருத்தியுள்ளது. இது 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. கட்டண சீரமைப்பின் முக்கிய அம்சங்கள்: > புறநகர் ரயில் பயணக் கட்டணங்கள் மற்றும் … Read more

லாக்கப் மரணங்கள்… யார் கடமை தவறினாலும் கடும் நடவடிக்கை – சொல்லாமல் சொல்லிய முதல்வர் ஸ்டாலின்!

MK Stalin News: போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என சட்டம் ஒழுங்கு நிலை குறித்து நடந்த ஆய்வு கூட்டம் வலியுறுத்தியதாக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.