ஜெய்ஸ்வாலால் அணியை விட்டு விலகும் சஞ்சு சாம்சன்? சிஎஸ்கேவில் இணைகிறாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த சீசன் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. 14 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருந்தனர். அதே போலவே கேப்டன் சஞ்சு சாம்சனுக்கும் இந்த சீசன் சரியாக அமையவில்லை. சில போட்டிகளில் காயம் காரணமாக வெளியேறியதால் அணியை சரியான முறையில் வழிநடத்த முடியமால் போனது. சஞ்சு சாம்சன் இல்லாத சமயத்தில் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும் அவராலும் எந்த ஒரு மாற்றத்தையும் அணிக்குள் … Read more

"முத்த மழை பாட்டுக்கு மூணு வெர்ஷன் எழுதினேன்; ஆனா, கடைசியில..!" – பாடலாசிரியர் சிவ ஆனந்த்

ஆர்ப்பரிப்பு…பேரானந்தம்… பெருங்கொண்டாட்டம் என உலக தமிழ் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது ‘முத்த மழை’ பாடல். சின்மயி – `தீ’யின் தித்திக்கும் குரலில் தேன் மழையாய் பொழிந்து இதயத்தை இனிக்கவைத்த, அந்தப் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாடலாசிரியர் சிவ ஆனந்த். ‘முத்த மழை’ பாடல் மட்டுமல்லாமல் ‘சுகர் பேபி’, ‘எங்கேயோ’ என ‘தக் லைஃப்’ படத்தில் மூன்று பாடல்களை எழுதி பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கிறார். த்ரிஷாவின் பர்சனல் ஃபேவரைட்! ஒரு பாடலில் பொதுவாக ஒரு சில … Read more

சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு! அரசு பதில் அளிக்க உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளன. தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான பல்வேறு சமூகப் பிரிவுகள் உள்ளன. அவற்றில் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள், சீர்மரபினர், முற்பட்ட சாதிகள் என பல நூறு சாதிகள் உள்ளன. இந்த சாதிகளை வைத்துதான் தமிழ்நாடு அரசியல் நடைபெற்று வருகிறது. சாதி சமயமற்ற  சமுத்துவ சமுதாயத்தை … Read more

`ஹனிமூன் கொலை முதல் ட்ரம்மில் கணவன் உடல் சமாதி வரை' – இந்தியாவை அதிரச் செய்த கொலை வழக்குகள்

திருமணத்துக்குப் பிறகு விரும்பியவருடன் வாழ முடியவில்லை என்ற கவலையால் தற்கொலையும், ஆத்திரத்தில் கொலையும் நடக்கிறது. அப்படி சமீபமாக இந்தியாவில் நடக்கும் கொலைகள் அதிர்ச்சியளிக்கிறது. தற்போது இந்திய அளவில் விவாதமாகியிருப்பது மத்தியப்பிரேதசத்தின் சோனம் வழக்கு. இது போன்று மேலும் சில வழக்குகளும் சமீபத்தில் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியது. திருமணம் சோனம் வழக்கு: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷிக்கும் (30) சோனம் (27) என்பவருக்கும் மே 11-ம் தேதி திருமணம் நடந்தது. மே 20-ம் தேதி … Read more

நோயாளி​ எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க கோரி அரசு மருத்துவர்கள் பாதயாத்திரை

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் இன்று (ஜூன் 11) சேலம் மேட்டூரிலிருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: கரோனா பேரிடரின்போது, அசாதாரண சூழ்நிலையில் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவர்களுமே என்பது அனைவருக்கும் தெரியும். கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த … Read more

இந்தியர் சுபான்ஷு சுக்லாவை விண்வெளிக்கு அனுப்பும் ஆக்சியம்-4 ஏவுதல் மீண்டும் தள்ளிவைப்பு – காரணம் என்ன?

புளோரிடா: இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபன்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லும் ஆக்சியம்-4 பயணத்தின் ஏவுதல் இன்று ஐந்தாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது என்று ஸ்பேஸ்-எக்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்பேஸ்-எக்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜூன் 11 புதன்கிழமை, புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A (LC-39A)-லிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு … Read more

“அவர் எனக்கு மகனைப்போல; நான் அவருக்கு சித்தப்பா..'' – நடிகர் சிவராஜ்குமாரை வாழ்த்திய கமல்

 ‘தக் லைஃப்’  இசை வெளியீட்டு விழாவில் எதிரில் அமர்ந்திருந்த கன்னட நடிகர் சிவராஜ்குமாரை நோக்கி பேசிய கமல்ஹாசன், ‘‘உங்கள் மொழி கன்னடம், தமிழிலிருந்து பிறந்தது’’ என்று சொன்னார். இதற்கு கர்நாடகாவில் கிளம்பிய கடும் எதிர்ப்பு, கமலின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை அந்த மாநிலத்தில் திரையிட முடியாத அளவுக்கு சிக்கல்கள் உருவானதுனது. இந்த விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த சிலர் சர்ச்சைகளைக் கிளப்பினர். இருப்பினும் கமல் தான் கூறியது சரி என்று மன்னிப்புக் … Read more

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு,  தமிழகம் முழுவதும் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் … Read more

டி.என்.பி.எல் – ஜெகதீசன் கவுசிக் போராட்டம் வீண்…திருச்சியை வீழ்த்தி சேலம் திரில் வெற்றி

கோவை, 9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஸ்டேடியத்தில் 5-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி சேலம் ஸ்பார்டன்ஸ் அணிசார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் கேப்டன் … Read more

பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.