What to watch on Theatres: `தக் லைஃப்', `மெட்ராஸ் மேட்னி' – இந்த வார படங்கள் லிஸ்ட்!

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படங்களின் பட்டியல். தக் லைஃப் (தமிழ்): மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. ‘நாயகன்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனும் இயக்குநர் மணிரத்னமும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியானது. Thug Life பேரன்பும் பெருங்கோபமும் (தமிழ்): சிவப்பிரகாஷ் இயக்கத்தில் நடிகர்கள் விஜித் … Read more

சாக்லேட் திருட்டுக்கு நிர்வாண ஊர்வலம்…

சாக்லேட் திருட்டுக்கு நிர்வாண ஊர்வலம்… மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களின் கையில் சாக்லேட். அதை பார்த்ததும் தன் கடையிலிருந்து சிறுவர்கள் திருடிவிட்டதாக கொந்தளித்துப் போனார். எட்டு வயது முதல் 13 வயது வரையிலான அந்த சிறுவர்களுக்கு திருட்டுப் பட்டம் கட்டிக் கடைக்காரர் ஊரைக் கூட்ட, அப்புறம் என்ன நடந்தது? ஐந்து சிறுவர்களும் ஆடை களைய வைக்கப்பட்டனர். அவர்கள் முகத்தில் சுண்ணாம்பு பூசப்பட்டது. செருப்பு மாலை போடப்பட்டு கடைசியில் திருடர்கள் ஊர்வலம் என பெயர் குறிப்பிடப்பட்டு அவமானம் … Read more

Elon Musk:“நண்பராக இருந்து எதிரியாக மாறியவர்'' – எலான் மஸ்க் குறித்து ட்ரம்ப் பேச காரணம் என்ன?

நேற்று முன்தினம் முதல் உலகம் முழுக்க உள்ள ஹாட் டாப்பிக், ‘ட்ரம்ப் – எலான் மஸ்க் நட்பு விரிசல்’. இருவரும் சமூக வலைதளத்தில் மாறி மாறி கருத்துகள் மூலம் மோதிக்கொண்டனர். பின்பு, எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்குவது வரை சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்பிடன் எலான் மஸ்கிடம் ஏற்பட்டுள்ள நட்பு விரிசல் குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, ‘நண்பராக இருந்து எதிரியாக மாறியவர்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘எலான் மஸ்க் உடன் மீண்டும் சமாதானம் ஏற்படுமா?’ என்று … Read more

ரயில்வே கேட்களை கடக்கும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்: ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தல்

சென்னை: ரயில்வே கேட்டுகளை கடக்கும்போது, செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என, சர்வதேச லெவல் கிராஸிங் தினத்தை முன்னிட்டு, சென்னையில் பல்லாவரம் – தாம்பரம் மார்க்கத்தில் ரயில்வே கேட் முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தினர். ரயில் பாதை அருகே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட்டை கடந்து செல்லும் போது, சிலர் பாதுகாப்பு விதிமுறை பின்பற்றுவதில்லை. இதனால், ரயில்களில் மோதி உயிரிழக்கின்றனர். எனவே, ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி, ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் சர்வதேச … Read more

வக்பு வாரிய சொத்து பதிவு செய்ய புதிய இணையதளம்: மத்திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு அறிமுகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளைப் பதிவு செய்வதற்கான ‘உமீத்’ வலைதளத்தை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து வக்பு சொத்துகளை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றுவதற்காக புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இணையதளம் தொடங்குவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார். இதனிடையே புதிய … Read more

மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் : சீனியர் சிட்டிசன் செயலியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Tamil Nadu Senior Citizen App: மூத்த குடிமக்கள் நலன்களை பாதுகாப்பதில் மத்திய மாநில அரசுகள் முனைப்புடன் செயல்படுகின்றன. அவர்களுக்காக பல்வேறு திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கூட மத்திய அரசு 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அனைவருக்கும் இலவச காப்பீடு திட்டத்தை அறிவித்தது. 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மூத்த குடிமக்களின் நலன்களை பாதுகாக்கவும், அவர்களுக்கான திட்டங்கள் எளிமையாக … Read more

10 மணி நேரம் கட்டாயம் வேலை…

ஆந்திர பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களின் ஊழியர்கள் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தவும் இரவு நேரப் பணியில் மகளிரை ஈடுபடுத்தவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசின் இந்த முடிவுக்கு அங்கு தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் சந்திரபாபு நாயுடு அரசோ, அந்நிய முதலீடுகளை மேலும் மேலும் அதிகமாக ஈர்ப்பதற்கும் மாநிலத்தின் உற்பத்தியை பெருக்குவதற்கு இது மிகவும் அவசியம் என்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புதான், … Read more

நார்வே செஸ் போட்டி: 7-வது முறையாக பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்

ஸ்டாவஞ்சர், 2025-ம் ஆண்டுக்கான நார்வே செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதில், அதிக புள்ளிகளை பெற்று முதல் இடம் பிடிக்கும் வீரர் வெற்றியாளராக கொள்ளப்படுவார். இந்நிலையில், 10-ம் சுற்று போட்டியில் கார்ல்சன் சிறப்பாக விளையாடி … Read more

Doctor Vikatan: கருஞ்சீரகம் மரணத்தை தவிர எல்லா நோய்களுக்கும் மருந்தாகுமா?

Doctor Vikatan: கருஞ்சீரகம் என்பது மரணத்தைத் தவிர எல்லா நோய்களையும் தீர்க்கும் மூலிகை என்றும், அதை எல்லோரும் தினமும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் நிறைய செய்திகள், வீடியோக்கள் பார்க்கிறோம். உண்மையிலேயே கருஞ்சீரகத்தை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா,எப்படிச் சாப்பிட வேண்டும். எந்தப் பிரச்னைக்கு எடுத்துக்கொள்ளலாம். யார் தவிர்க்க வேண்டும். சமையலில் சேர்க்கலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி என்னதான் மருத்துவத்தன்மை கொண்டதாக இருந்தாலும் கருஞ்சீரகத்தை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளக்கூடாது. உடல் சூடு அதிகமுள்ளோர், … Read more