IND vs ENG: முதல் டெஸ்டை விடுங்க! 2வது டெஸ்டில் இந்திய அணிக்கு இருக்கும் பேராபத்து!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்தை ஐசிசி அதிகாரப்பூர்வமாக கண்டித்து உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் அம்பையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய போது 61-வது ஓவரில் பந்து சேதமடைந்து விட்டதாகவும், வேறு பந்தை மாற்றித் தர வேண்டியும் ரிஷப் பந்த் அம்பையரிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் பந்து நன்றாக தான் உள்ளது, இதனை மாற்றித் தர முடியாது என்று அம்பயர் கூறியதால் கோபம் … Read more

Srikanth: "சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்று இல்லை…" – விஜய் ஆண்டனி சொல்வது என்ன?

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர்  நடிப்பில், ஜூன் 27 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘மார்கன்’. இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் ஸ்ரீகாந்த் அந்த வகையில் நேற்று (ஜூன் 24) மதுரையில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி. அப்போது அவரிடம் நடிகர் ஶ்ரீகாந்த்தின் போதைப்பொருள் வழக்கு தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சினிமாவில் … Read more

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம்…! விஞ்ஞானிகள் மகிழ்ச்சி….

வாஷிங்டன்: ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ்,  இந்தியா அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பான  ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4  திட்டத்தின் கீழ், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உடன் மேலும் 3 வீரர்கள் என மொத்தம் 4 விண்வெளி வீரர்கள்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில்  இன்று   விண்வெளிக்கு பயணமாகி உள்ளனர்.  இதற்கு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான … Read more

சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனுக்காக மனைவியை விற்ற நபர்.. பலமுறை பலாத்காரம் செய்த நண்பர்

போபால், மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், தனது நண்பருக்கு ரூ.50,000 கடனை அடைக்க, கணவர் தனது மனைவியை “விற்றதாக” கூறப்படுகிறது. பின்னர், அவரது மனைவியை நண்பர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். முன்னதாக தார் மாவட்டம் கன்வான் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் சூதாட்டத்துக்கு அடிமையானவர். சூதாட்டத்தால் அவருக்கு ரூ.50 ஆயிரம் வரை கடன் ஏற்பட்டது. இந்த கடனை அவர் தனது நண்பர்கள் சிலரிடம் வாங்கி … Read more

ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

பிரிட்ஜ்டவுன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் இந்திய நேரப்படி இன்று (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்குதொடங்குகிறது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் இரு அணிக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமீபத்தில் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்திய 285 பேர் கைது

ஜகார்த்தா, தென்கிழக்கு ஆசியாவின் போதைப்பொருள் கடத்தல் கூடாரமாக இந்தோனேசியா உள்ளது. எனவே அங்கு கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களும் அதிகளவில் அரங்கேறுகின்றன. இதனால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்குபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகிறது. எனினும் இது தொடர் கதையாக உள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையை அரசாங்கம் முடுக்கிவிட்டது. அதன்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் கடந்த 2 மாதங்களில் 29 பெண்கள் உள்பட 285 பேரை … Read more

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 2025ல் வெளியிடும் ஏதெர் எனர்ஜி | Automobile Tamilan

இந்தியாவின் மிக சிறப்பான ஸ்டார்ட்அப் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு Community தினத்தின் கருப்பொருள் “மந்திரம் போல செயல்படும் தொழில்நுட்பம்” (Technology that works like magic)  என்பதாகும், மேலும் ஏதெரின் புதிய ஸ்கூட்டர் EL பிளாட்ஃபாரம் உட்பட மற்ற கான்செப்ட் வாகனங்களை சமூக தினம் 2025ல் காட்சிப்படுத்த உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. ஏதெர் முன்பே குறிப்பிட்டபடி “Zenith” என்ற பெயரிலான மோட்டார்சைக்கிள் பிளாட்ஃபாரத்தையும், EL என்ற பெயரில் உருவாக்கப்படுகின்ற புதிய ஸ்கூட்டர் … Read more

ஆஹா… விண்வெளிக்கு புறப்பட்ட பின்னர் சுபான்ஷு சுக்லா பேசிய முதல் வார்த்தைகள் என்ன?

Shubhanshu Shukla: Falcon-9 ராக்கெட்டில் இந்தியர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பாயந்தது, SpaceX Crew டிராகன் விண்கலம். விண்ணில் பாய்ந்த பின்னர் சுபான்ஷு சுக்லா முதலில் பேசியவற்றை இங்கு காணலாம். 

பாமக: 'நாங்கள் அமைக்கப் போகும் கூட்டணி நல்ல கூட்டணி; வெற்றி பெறக்கூடிய கூட்டணி '- நிறுவனர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே  ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 25) பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் பாமக இணைபொதுச் செயலாளராக எம்எல்ஏ அருளுக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது.  சேலம் பாமக எம்.எல்.ஏ அருள் இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராமதாஸ், … Read more

ரயிலில் சாதாரண வகுப்பு பெட்டிகளை குறைப்பது, கட்டணங்களை உயர்த்துவது வேண்டாம்: ஸ்டாலின்

சென்னை: “குளிர்சாதன (AC) பெட்டிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.” என பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரயில் கட்டணங்கள் வரும் ஜூலை மாதம் முதல் உயர்த்தப்படவுள்ளதாக ஊடகச் செய்திகள் வெளியாகிவரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய ரயில்வே என்பது … Read more