ரயில் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படுகிறதா? – எப்போது, எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் ‘பாக்கெட் ஃபிரெண்ட்லி’ டிராவல் ஆப்ஷன் என்றால், அது ‘ரயில்’ தான். சாதாரண மக்கள் முதல் பணக்காரர்கள் வரை யார் வேண்டுமானாலும், அவர்களது பட்ஜெட்டிற்கு ஏற்ப எளிதாகவும், வசதியாகவும் ரயிலில் பயணம் செய்யலாம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ரயில் டிக்கெட்டுகளின் விலை ஏற்றப்படலாம். அதற்கான அறிவிப்பு ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தியன் ரயில்வே ரயில்வே துறையின் வருமானத்தை அதிகரிப்பதே இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம். மேலும், இந்த அறிவிப்பு மக்களுக்கு சுமையாகவும் … Read more

தமிழக அரசு சார்பில் கண்ணதாசன் 99-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழக அரசு சார்பில் கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது படத்துக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்தநாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலை தமிழக அரசு சார்பில் நேற்று மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு அடியில் அவரது உருவ படத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் மலர் தூவி … Read more

வீடு ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருந்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார்: கர்நாடக அமைச்சர் ஜமீர் திட்டவட்டம்

பெங்களூரு: கர்​நாடக அரசின் வீட்டு வசதித்​துறை சார்​பில் வீடற்ற ஏழை மக்​களுக்கு வீடு, வீட்டு மனை, வீடு கட்​டு​வதற்கு மானியம் ஆகியவை வழங்​கப்​படு​கிறது. இதில் முறை​கேடு நடை​பெறு​வ​தாக புகார் எழுந்​தது. இந்​நிலை​யில் ஆலந்த் தொகு​தி​யின் காங்கிரஸ் எம்​எல்ஏ பி.ஆர்​.​பாட்​டீல் பேசிய ஆடியோவில், ‘‘ராஜீவ் காந்தி வீட்​டு​ வசதி ஆணை​யத்​தில் ஊழல் தலை​விரித்​தாடு​கிறது. அதி​காரி​கள் அத்​தனை பேரும் பணம் வாங்கி கொண்டே வேலை பார்க்​கிறார்​கள். ஏழை மக்​களிடம் லட்​சக்​கணக்​கில் பணம் வாங்கிக் கொண்டே வீட்டு மனையை ஒதுக்​கு​கிறார்​கள். எனது … Read more

ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை: யு-டர்ன் அடித்த ட்ரம்ப்

வாஷிங்டன்: “ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை. அனைத்தும் முடிந்த வரை விரைவாக அமைதியாவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், இவ்வளவு குழப்பங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார். முன்னதாக, தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், … Read more

புதிதாக சொத்து வாங்க போறீங்களா? இனி இந்த பிரச்சனை இருக்காது!

தமிழகத்தி்ல் சென்னைக்கு அடுத்தபடியாக அசுர வளர்ச்சியை நோக்கி செல்லும் கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. 

தோல்விக்கு யார் காரணம்? கவுதம் கம்பீர் கைகாட்டிய அந்த ஒரு வீரர்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து உள்ளது. கடைசியாக விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஒரு வெற்றியை மட்டுமே இந்திய அணி பெற்றுள்ளது. இது கவுதம் கம்பீரின் தலைமையை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இந்தியா பக்கம் இருந்த இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து சிறப்பாக பேட்டிங் செய்து வென்றது. இந்நிலையில் போட்டி முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கவுதம் கம்பீர், இந்த தோல்விக்கு எந்த … Read more

சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை இடையே சனி, ஞாயிறுகளில் 21 மின்சார ரெயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே

சென்னை:  ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை மற்றும் சூலூர் பேட்டை செல்லும் ரயில்கள் சனி, ஞாயிறுகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதுகுறித்து  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பில்,   சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால்  28, 29 ஆகிய தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதிகாலை 5.40, காலை … Read more

'ரீல்ஸ்' வீடியோவுக்கு காதலன் எதிர்ப்பு… கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஒசஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சவுபாக்யா. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சைதன்யா (வயது 22). இவர் துமகூருவில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். அழகு கலை நிபுணராகவும் இருந்து வந்தார். இதனால் அடிக்கடி வித்தியாசமாக ‘ரீல்ஸ்’ வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இந்தநிலையில் சைதன்யாவுக்கும், ராமேனஹள்ளியை சேர்ந்த விஜய் (25) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் … Read more

உக்ரைனுக்கு ரூ.1,750 கோடி ராணுவ உதவி வழங்கும் நெதர்லாந்து

தி ஹேக், உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவி வழங்குகின்றன. இதனால் உக்ரைன் இன்னும் இந்த போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. அந்தவகையில் உக்ரைனுக்கு சுமார் ரூ.1,750 கோடி ராணுவ உதவி வழங்க நெதர்லாந்து முடிவு செய்துள்ளது. இதில் 100 டிரோன் கண்டறியும் ரேடார்கள், வான்பாதுகாப்பு அமைப்புகள் போன்றவை அடங்கும். முன்னதாக 6 லட்சம் டிரோன்களை … Read more

குறைந்த விலை டாடா ஏஸ் புரோ மினி டிரக்கின் முக்கிய சிறப்பம்சங்கள் | Automobile Tamilan

750 கிலோ பேலோடு பெற்ற ரூ.3.99 லட்சம் ஆரம்ப விலையில் துவங்குகின்ற பெட்ரோல் டாடா ஏஸ் புரோ தவிர சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் என மூன்று விதமான ஆப்ஷனிலும் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. இந்தியாவின் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்ற நான்கு சக்கர மினி டிரக் மாடலாக விளங்கும் ஏஸ் புரோ மாடலில் AIS096 ஆதரவுக்கு ஏற்ற வலுவான பாடி கொண்டிருக்கின்ற 1985x1425X275 கார்கோ அளவை பெற்று ஹாப் டெக் அல்லது பிளாட்பெட் போன்ற கார்கோ ஆப்ஷனில் … Read more