ஜார்கண்ட்: என்ஜினீயரிங் கல்லூரியில் ராகிங் கொடுமை; 6 மாணவர்கள் கைது

ராம்கார், ஜார்கண்டின் ராம்கார் மாவட்டத்தில் முருபண்டா கிராமத்தில் ராம்கார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், பொகாரோ மாவட்டத்தின் புஸ்ரோ பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர், பி.டெக் கணினி பிரிவில் சேர்ந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அவரை மூத்த மாணவர்கள் சிலர் ராகிங் செய்தும், அடித்தும், கொடுமைப்படுத்தி உள்ளனர். இதுபற்றி அக்கல்லூரியின் துணை முதல்வர் நஜ்மல் இஸ்லாம் கூறும்போது, அந்த மாணவன் ஆன்லைன் வழியே தேசிய ராகிங் ஒழிப்பு பிரிவில் புகார் அளித்து இருக்கிறார். … Read more

2-வது ஒருநாள் போட்டி: பென் கர்ரன், ராசா அரைசதம்.. இலங்கை வெற்றி பெற 278 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

ஹராரே, இலங்கை – ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரையன் பென்னட் – பென் கர்ரன் களமிறங்கினர். இதில் பென்னட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரண்டன் டெய்லர் மற்றும் சீன் வில்லியம்ஸ் தலா 20 ரன்களில் … Read more

இந்தியா மீது டிரம்ப் வரி விதிக்க இதுவும் ஒரு காரணமா? வெளியான பரபரப்பு தகவல்

வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து டிரம்புக்கு பதில் அளித்தது. ஆனால் டிரம்ப் தொடர்ந்து அந்த கருத்தை தெரிவித்து வருகிறார். அதன்பின் இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தார். மோடியை தனது நண்பர் என்றும் இந்தியா தங்களது நெருங்கிய கூட்டாளி என்றும் கூறி வந்த டிரம்ப் திடீரென்று அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறினார். இந்தியாவை தொடர்ந்து விமர்சித்து … Read more

சசிகாந்த் செந்தில்: "மருத்துவமனையில் உண்ணாவிரதம் தொடர்கிறது" – காங்கிரஸ் எம்.பி வெளியிட்ட வீடியோ!

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய எஸ்.எஸ்.ஏ கல்வி நிதியைக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. இரண்டாவது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையில் இரத்த அழுத்தம் அதிகரிப்பால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் இருந்தும் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளார். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவித்த வியாசைத் தோழர் அமைப்பினர். மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 31) உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலிருந்து சென்னை … Read more

சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு – முழு கொள்ளளவை நெருங்கும் புழல் ஏரி

திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இம்மழை, செங்குன்றம், தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் கனமழையாகவும், கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, சோழவரம், பொன்னேரி, பூந்தமல்லி, திருவாலங்காடு, திருவள்ளூர், ஆவடி ஆகிய இடங்களில் மிதமான மழையாகவும், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பூண்டி, ஜமீன் கொரட்டூர் ஆகிய இடங்களில் … Read more

அனைத்து போர்க்கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு தேவையான அனைத்து போர்க்கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: உலகளவில் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள் சவால்கள் நிறைந்தவைகளாக உள்ளன. இந்நேரத்தில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் நாம் தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். இந்திய கடற்படையில் சில நாட்களுக்கு முன் இணைந்த ஐஎன்எஸ் ஹிம்கிரி மற்றும் … Read more

உதவிப் பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து காசா புறப்பட்ட படகுகள்: பயணத்தில் இணைந்த கிரெட்டா தன்பெர்க்

பார்சிலோனா: பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று பல்வேறு படகுகள் புறப்பட்டன. இந்த பயணத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் இணைந்துள்ளார். இஸ்ரேல் கடற்படையின் தடையை தகர்த்து காசா மக்களுக்கு உதவுவது இந்த பயணத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. இந்த பயணம் பார்சிலோனாவில் தொடங்கிய போது ஆயிர கணக்கான மக்கள் திரண்டு, காசா புறப்பட்ட படகுகளை வழியனுப்பி வைத்தனர். அப்போது பாலஸ்தீன கொடிகளை கையில் ஏந்தியிருந்த அவர்கள், … Read more

பாலா கொலிவுட்டில் கண்டெண்ட் டிரிவன் ஸ்டார் ஆகிறார்: இயக்குநர் பாலாஜி சக்திவேல்

செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் காந்தி கண்ணாடி திரைப்படத்தின் விளம்பர காட்சிகளிலேயே சினிமா ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளார்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவ, மாணவிகளுக்கான முக்கிய அறிவிப்பு

10th Public Exam 2025-26: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : 2025-2026 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பீகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அட்டை – தேர்தல் ஆணையம் திட்டம்

புதுடெல்லி, பீகாரில் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை செய்தது. இதில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆட்சேபம் தெரிவிக்கவோ, திருத்தம் மேற்கொள்வோ செப்டம்பர் 1-ந் தேதி வரை (அதாவது நாளை வரை) கால அவகாசத்தையும் தேர்தல் கமிஷன் தெரிவித்து இருந்தது. இதனிடையே இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் … Read more