களத்தில் மோதல் விவகாரம்: திக்வேஷ் ரதி, நிதிஷ் ராணாவுக்கு அபராதம்

புதுடெல்லி, டெல்லி பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லிமினேட்டர் ஆட்டத்தில் மேற்கு டெல்லி லயன்ஸ் – தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இதில் மேற்கு டெல்லி லயன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மேற்கு டெல்லி பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா, தெற்கு டெல்லி பவுலர் திக்வேஷ் ரதி இடையே மோதல் வெடித்தது. நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி கொண்டிருந்தபோது 8-வது ஓவரை திக்வேஷ் ரதி … Read more

ஜெர்மனியில் தமிழ் குடும்பத்தினரை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெர்லின், தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்படி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று(ஆகஸ்ட் 31) ஜெர்மனி சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழர்கள் வரவேற்ற புகைப்படத்தை … Read more

ஆனந்த விகடன் & கிங் மேக்கர் அகாடமி இணைந்து நடத்திய UPSC / TNPSC தேர்வுகளுக்கான பயிற்சி முகாம்!

IAS, IPS போன்ற அரசு வேலைகள் இங்கே பலரின் கனவு வேலையாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு அது வெறும் கனவாகவே இருக்கிறது. அந்தக் கனவை நினைவாக்குவதற்கு ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர் அகாடமி இணைந்து 31/08/2025 இன்று சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் அரசு குடிமையியல் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக “யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி-யில் வெல்வது எப்படி?” எனும் தலைப்பில் இலவச பயிற்சி முகாம் நடத்தியது. இந்த பயிற்சி தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு ஒரு … Read more

மத்தியில் இழுபறி ஆட்சி அமைத்ததே நிதியமைச்சர் கூறிய மாற்றம்: அமைச்சர் சேகர்பாபு பதிலடி

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று சொன்னதை இந்தியா கூட்டணி முறியடித்து இழுபறி நிலையில் ஆட்சி அமைத்ததே பெரிய மாற்றமாகும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “தமிழக முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (31.08.2025) சென்னை கொளத்தூர், பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் … Read more

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கில் போலி வாக்காளர்களா? – தேர்தல் ஆணையம் மறுப்பு

பாட்னா: பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் பெருமளவில் போலி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிஹார் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல. அவை வெளிப்படையாக பொதுமக்களின் பார்வைக்காகவும், வாக்காளர்கள், அரசியல் கட்சிகளிடமிருந்து கருத்து மற்றும் ஆட்சேபனைகளை பெறுவதற்காகவும் வெளியிடப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவற்றை வைத்து, அவை ‘இறுதியானது’ அல்லது ‘சட்டவிரோத சேர்க்கை’ என்று … Read more

செந்தில் நடிக்கும் புதிய வெப் சீரிஸ் போலீஸ் போலீஸ்; ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியீடு

ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக உருவாகி இருக்கும் ‘போலீஸ் போலீஸ்’ ஜியோஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.  

பழைய ஓய்வூதிய திட்டம் : மத்திய, மாநில அரசுகளுக்கு முக்கிய கோரிக்கை

Old Pension Scheme: தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு ஓய்வூதியதாரர்கள் மத்திய, மாநில அரசுகள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி கோவில்பட்டி மற்றும் புதுக்கோட்டையில் நடத்த கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றனர்.

வேலை தருகிறோம் என கூறி… 5 பேர் கும்பலால் இளம்பெண் பலாத்காரம்; காரில் இருந்து தூக்கி வீச்சு

கட்டாக், ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பாங்கிர்போசி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணிடம், நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை இருக்கிறது. அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். அதற்காக ஓரிடத்திற்கு வர வேண்டும் என கூறி 2 பேர் நேற்று முன்தினம் மாலை அந்த பெண்ணை அழைத்தனர். அவர்களை நம்பி அந்த பெண்ணும் அவர்களுடன் காரில் சென்றுள்ளார். ஆனால், வேலை பற்றி எதுவும் பேசாமல் இருந்துள்ளனர். வீட்டில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் உடாலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட … Read more

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வெண்கல பதக்கம் வென்ற சாத்விக்-சிராக் ஜோடி

பாரீஸ், 29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை, சீனாவின் லியூ யி – சென் போ ஜோடியுடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை சீன ஜோடி கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லியு யி – சென் போ … Read more

டிரம்ப்பின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி … Read more