ஒரு கி.மீ. நடந்து வந்து குடிநீர் எடுக்கிறோம்: எடப்பாடியிடம் புகார் தெரிவித்த கிராம பெண்கள் 

கோவில்பட்டி: மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டியில் இன்று மாலை 6 மணியளவில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு எட்டயபுரம், எப்போதும்வென்றான், குறுக்குச்சாலை வழியாக ஓட்டப்பிடாரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இரவு 7 மணியளவில் குறுக்குச்சாலையை கடந்து வேலாயுதபுரம் கிராமம் அருகே அவரது வாகனம் வந்து கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் பெண்கள் கூட்டமாக நின்று தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த பெண்கள் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை பார்த்தவுடன் கைகளை உயர்த்தி காண்பித்தனர். இதையடுத்து … Read more

ஜார்க்கண்டில் வீட்டுக்குள் நுழைந்த புலியை பாதுகாப்பாக மீட்க உதவிய தந்தை, மகளுக்கு விருது!

ராஞ்சி: தங்கள் வீட்டுக்குள் நுழைந்த புலியை பாதுகாப்பாக மீட்க வனத்துறைக்கு உதவிய நபர் மற்றும் அவரது மகளை ஜார்க்கண்ட் வனத்துறை பரிசுத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது. முரி காவல் நிலையப் பகுதியில் உள்ள மர்து கிராமத்தில் உள்ள புரந்தர் மஹ்தோ என்பவரின் வீட்டுக்குள் கடந்த ஜூன் 25 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் ஒரு ஆண் புலி நுழைந்தது. இதனை அறிந்த மஹ்தோவின் மகள் சோனிகா குமாரி மற்றும் மற்றொரு பெண் தந்திரமாக வீட்டை விட்டு வெளியேறினர். … Read more

71st National Film Awards: 12th fail, M S பாஸ்கர், ஊர்வசி, GV, ஷாரூக்; தேசிய விருதுகள் அறிவிப்பு!

71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 71வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கின்றது. இதில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது. சிறந்த திரைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றிருக்கிறார். ‘வாத்தி’ பட பாலுக்காக சிறந்த இசையப்பாளர் விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார். சிறந்த படமாக ’12th Fail’ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. சிறந்த … Read more

ரூ.3000 கோடி கடன் மோசடி: தொழிலதிபர் அனில் அம்பானி வரும் 5ந்தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லி: ரூ.3,000 கோடி கடன் மோசடி தொடர்பாக பிரபல தொழிலதிபர்களில் ஒருவரானவரும், இந்தியாவின் டாப் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சகோதரருமான  தொழிலதிபர் அனில் அம்பானி வரும் 5ந்தேதி  அமலாக்கத்துறை  அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அனில் அம்பானி நிறுவனம்,  யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூ.3,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்மீதான  பண மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. முன்னதாக, கடந்த 2017 முதல் … Read more

"இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது" – ட்ரம்ப் கருத்தை ஏற்ற ராகுல் காந்தி; முரண்பட்டாரா சசி தரூர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை “இறந்த பொருளாதரம்” என விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார், அது எல்லோருக்குமே தெரிந்ததுதானே. பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் மட்டுமே இது தெரியாது…” எனப் பேசியிருந்தார். Trump இந்தியா மீது 25% வரி விதித்த ட்ரம்ப், இந்தியாவும் ரஷ்யாவும் “தங்கள் இறந்த பொருளாதாரங்களை ஒன்றாக வீழ்த்த முடியும்” எனப் பேசியிருந்தார். மோடி அதைக் கொன்றுவிட்டார்! ராகுல் காந்தி … Read more

‘சமச்சீரான கல்வி கிடைக்க இறுதி மூச்சு வரை போராடியவர் வசந்தி தேவி’ – தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை: கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட மூத்த கல்வியாளரும், முன்னாள் துணை வேந்தருமான வே.வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: “மூத்த கல்வியாளரான பேராசிரியர் வசந்தி தேவி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மாநில மகளிர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளில் மிகச் சிறந்த பங்களிப்பினை ஆற்றியதோடு, சமூகத்தின் மீதும் பெரும் … Read more

“நாகரிகமில்லாத பொறுப்பற்றவர் ட்ரம்ப்!” – இந்திய பொருளாதாரம் குறித்த கருத்துக்கு தேவகவுடா காட்டம்

பெங்களூரு: வேகமாக வளர்ந்து வரும் உலகின் 5-வது பெரிய பொருளாதாரமான இந்திய பொருளாதாரத்தை மடிந்துவிட்டது என்று டொனால்டு ட்ரம்ப் கூறுகிறார் என்றால், ஒன்று அவர் பார்வையற்றவராக இருக்க வேண்டும் அல்லது தகவல் அறியாதவராக இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தேவகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய பொருளாதாரம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதாரமற்ற, ஆத்திரமான கருத்துகளை அறிந்தபோது மற்ற அனைவரையும் போலவே நானும் ஆச்சரியப்பட்டேன். அவரைப் போன்ற உறுதியற்ற, … Read more

ட்ரம்ப்பின் ‘போர் நிறுத்த’ விழைவுகளும், ‘அமைதி’ நோபல் பரிசு தாகமும்! – ஒரு பார்வை

‘விருது’ என்பது ஒருவரின் சாதனை, திறமை அல்லது சேவையைப் பாராட்டி அவரை கவுரவிக்க வழங்கப்படும் அடையாளம். அந்த வகையில் உலகின் உயரிய விருதுகளில் ஒன்று நோபல் பரிசு. ஸுவீடன் அரசு இந்த மிகப் பெரிய அங்கீகாரத்தை அறிவியல், மருத்துவம், கலை, இலக்கியம், அமைதி எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்குகிறது. இவற்றில், அமைதிக்கான நோபல் பரிசுதான் இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் குறி. இப்போது என்றால் இப்போது அல்ல, அவர் முதன்முறை அதிபராக இருந்தபோதிருந்தே இந்த நோபல் … Read more

இந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டில், இந்திக்காரர்களைத் திணிக்கும் பாஜகவின் சூழ்ச்சி – சீமான் தாக்கு!

Seeman: ‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இனி அவ்வளவுதான்.. முடிவுக்கு வந்த ரஹானே, புஜாரா கரியர்! பிசிசிஐ அதிரடி

Ajinkya Rahane And Pujara: இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களில் அஜின்கியா ரஹானே மற்றும் சத்தீஸ்வர் புஜாரா உள்ளனர். இவர்கள் ஒருநாள், டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிகம் விளையாடவிட்டாலும், இவர்கள் டெஸ்ட் அணியின் முக்கிய துணாக இருக்கின்றனர். குறிப்பாக புஜாரா, ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத டெஸ்ட் வீரராக இருந்தார். அவர் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் கடந்த சில காலமாகவே இந்த இரண்டு வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய … Read more