சென்னையின் 2 குப்பை கிடங்குகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்

சென்னை: சென்னையின் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் இதுவரை 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. 426 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் வசித்தும், … Read more

“இதுதான் புதிய இயல்பா?” – பிரதமர் மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து காங்கிரஸ் கேள்வி!

புதுடெல்லி: ‘புதிய இயல்பு’ என்பது சீன ஆக்கிரமிப்பு மற்றும் நமது அரசாங்கத்தின் கோழைத்தனத்தால் வரையறுக்கப்பட வேண்டுமா? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதில் கூறப்பட்டிருப்பதாவது: “பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான இன்றைய சந்திப்பை பின்வரும் சூழல்களில் மதிப்பிட வேண்டும்: 2020 ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பு காரணமாக, நமது 20 துணிச்சலான வீரர்கள் … Read more

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான பாரபட்சமான தடைகளை ரஷ்யாவும் சீனாவும் எதிர்க்கின்றன: புதின்

தியான்ஜின்: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் சமூகப் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் “பாரபட்சமான தடைகளுக்கு” எதிராக ரஷ்யாவும் சீனாவும் பொதுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு 10% வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்திய நிலையில், புதின் இக்கருத்தை கூறியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள தியான்ஜினுக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின், சீன அரசின் சின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ … Read more

கடலே இல்லாத ஹைதராபாத்தில்… வருகிறது பெரிய கடற்கரை – அது எப்படி?

Hyderabad: கடலே இல்லாத ஹைதராபாத் நகரில் தற்போது அரசு கடற்கரையை கொண்டுவரப் போகிறது. இது எப்படி சாத்தியம் என்று தானே கேட்கிறீர்கள்… அதை இங்கு விரிவாக காணலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடம் : குட் நியூஸ் வெளியாகுமா? தேர்வர்களின் எதிர்பார்ப்புகள்

TNPSC Group 4 Latest Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடம் அதிகரிக்குமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பது என்ன? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

புதுடெல்லி, டெல்லி விமான நிலையத்தில் இருந்து இந்தூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது பக்கம் உள்ள என்ஜினில் தீ பற்றும் அறிகுறிகள் தென்பட்டதால், விமானி அறையில் அலாரம் ஒலித்தது. இதையடுத்து டெல்லி விமான நிலையத்திற்கு விமானி தகவல் கொடுத்தார். அதிகாரிகள் விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுத்ததும், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். பயணிகளுக்கு தங்குமிடம் … Read more

முதல் டி20 போட்டி: நெதர்லாந்தை எளிதில் வீழ்த்திய வங்காளதேசம்

சில்ஹெட், நெதர்லாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக தேஜா நிடமனுரு 26 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய … Read more

உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… கோல்ப் விளையாடிய டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதாரம் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், தற்போது 79 வயதாகும் டிரம்ப்பின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் தான் முழு உடல்நலத்துடன் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். முன்னதாக டிரம்ப்பின் கைகளில் சிராய்ப்பு காயங்கள் இருப்பதை காட்டும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இது குறித்து கடந்த ஜூலை … Read more

தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி

தமிழகத்தின் இயற்கை வளமான ஆறுகள் ஒருபுறம் கொள்ளை போகிறதென்றால் மறுபுறம் மலைகளைக் குடைந்து கற்களை வெட்டிக் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனியில் மலைகளை வெட்டும் சம்பவம் ஜரூராக நடந்து வருகிறது. தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அருகே உள்ள சங்கிலி கரடு பகுதியில், மகளிர் சுயஉதவிக் குழுவின் பெயரில் கல்குவாரி அரசின் அனுமதியுடன் செயல்பட்டு வந்தது. பெயர்தான் மகளிர் சுயஉதவிக் குழு. ஆனால் வெட்டி எடுத்ததோ ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி அனைத்து அரசியல் … Read more

தமிழகத்தில் நாளை முதல் செப்.6 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்.6-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (செப்.1) லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சூறாவளி காற்று மணிக்கு 30 முதல் … Read more