விடியல் எங்கே? திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்.. லிஸ்ட் போட்ட அன்புமணி!

திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். 

ரோகித் சர்மா, விராட் கோலி விரைவில் ஓய்வு.. எப்போது தெரியுமா? இருவரும் நீடிக்க மாட்டார்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இவர்கள் இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருபவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடும் எண்ணத்தில் இருப்பதாக கூறப்பட்டாலும், அப்போது 39, 40 வயதில் இருவராலும் நல்ல ஃபிட்னெஸ் மற்றும் சிறந்த ஃபார்மில் இருக்க முடியுமா என்பது சந்தேகமாகும். Add Zee News as a Preferred Source இதையொட்டி, 2027 உலகக் கோப்பையில் … Read more

காதலி போன் எடுக்காததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வெளியான வீடியோ… உண்மையென்ன…

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது காதலியின் போன் பிஸியாக இருந்ததை அடுத்து காதலியின் ஊருக்குச் செல்லும் மின்சார ஒயரை துண்டித்ததாக காணொளியுடன் ஒரு செய்தி வெளியானது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரபல ஊடகங்களும் கடந்த ஒரு வாரமாக இதை வெளியிட்டு வந்தது. ஆனால் இந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பார்த்தவர்கள் இந்த தகவலில் உண்மையிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கையில் மின்சார ஊழியர்கள் வைத்திருக்கும் உபகரணங்கள் வைத்திருந்ததாகக் காரணங்களைப் பதிவிட்டனர். தவிர, … Read more

உயிர் போகும் நிலையில் இருந்த மாணவி; மெட்டாவின் அலெர்ட்டால் உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்

லக்னோ , உத்தர பிரதேசத்தில் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி, மெட்டா நிறுவனத்தின் அலர்ட்டால் காப்பாற்றப்பட்டுள்ளார் . உத்தர பிரதேசம் மாநிலம் பரேலியை சேர்ந்த கல்லூரி மாணவி, இளைஞர் ஒருவரை இன்ஸ்டாகிராமில் காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த இளைஞர் திடீரென தொடர்பைத் துண்டித்துள்ளார், இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி பூச்சிக் கொல்லி மருந்தையும், தற்கொலை குறிப்பையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். மாணவியின் தற்கொலை குறிப்பு குறித்து உள்ளூர் காவல் நிலையத்துக்கு மெட்டா நிறுவனம் அலர்ட் செய்துள்ளது . … Read more

இந்திய அணிக்கு ஸ்பான்சர்: நிறுவனங்களுக்கு கிரிக்கெட் வாரியம் அழைப்பு

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக (டைட்டில்) ஆன்லைன் விளையாட்டு தளமான டிரீம்11 இருந்து வந்தது. மத்திய அரசு சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, டிரீம்11 ஒப்பந்தம் காலம் முடிவதற்கு முன்பாகவே விலக நேரிட்டது. இதனால் வருகிற 9-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சீருடையில் டைட்டில் ஸ்பான்சர் பெயர் இல்லாமல் விளையாட உள்ளனர். இந்த நிலையில் இந்திய அணிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்புக்கு தகுதியான நிறுவனங்கள் … Read more

பலுசிஸ்தானில் அரசியல் பேரணியில் தற்கொலைப்படை தாக்குதல் 25 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை முன்னிட்டு, பேரணி ஒன்று நடந்தது. பேரணியில் பங்கேற்ற மக்கள் அனைவரும் வீடு திரும்ப தயாரான போது திடீரென தற்கொலை படை தாக்குதல் நடந்தது. மக்கள் கூடியிருந்த பகுதியில் குண்டு வெடித்ததில், 25 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் மகன், அக்தர் மெங்கல், பாதுகாப்பாக தப்பினார். மேலும் 30 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் … Read more

"நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும்…" – இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடும் புவனேஷ்வர்

இந்திய அணியில் ரெட் பால், ஒயிட் பால் என இரண்டிலும் சிறந்த ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார். கடைசியாக 2022 நவம்பரில் நியூசிலாந்துக்கெதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் ஆடியிருந்தார். கடந்த ஐ.பி.எல் சீசனில் ஆர்.சி.பி அணியில் 17 விக்கெட்டுகள் வீழ்த்திய புவனேஷ்வர் குமார், 18 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஆர்.சி.பி கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றினார். புவனேஷ்வர் குமார் தற்போது, உத்தரப்பிரதேச டி20 … Read more

சுற்றுலா திட்டம் செயல்படுத்தவே கச்சத்தீவில் ஆய்வு: இலங்கை அரசு தகவல்

ராமேசுவரம்: கச்சத்தீவுக்கு விரைவில் சுற்றுலா திட்டம் கொண்டு வருவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது, என இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் புதியதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசா நாயக்க அன்று மாலை கச்சதீவில் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, அதிபரின் கச்சத்தீவு … Read more

“யாருடைய தாயையும் அவதூறாக பேசக் கூடாது; ஆனால், பிரதமர் மோடி…” – தேஜஸ்வி யாதவ் கருத்து

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், யாருடைய தாயையும் அவதூறாகப் பேசக் கூடாது என்றும், அதை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் தாய் குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து பிஹாரில் நாளை (செப்.4) முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ளது. இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் விரக்தி காரணமாக அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வருவதாக மத்திய அமைச்சர் … Read more

பற்றி எரியும் இந்தோனேசியா… ‘பிங்க்’ உடையில் போராட்டக் களத்தில் குதித்த பெண்கள் – பின்னணி என்ன?

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றுதான் இந்தோனேசியா. உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடு என்ற அடையாளம் கொண்டது. பூகோள ரீதியாக நிலநடுக்கங்கள், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதி. பசிஃபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் பூகம்ப பாதிப்புப் பகுதியில் அமைந்திருப்பதால், அந்த நாட்டுக்கு நிலநடுக்க அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. 2004 டிசம்பரில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் ஆசிய நாடுகள் பலவற்றில் சுனாமி பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை மறந்திருக்க முடியாது. இயற்கைச் … Read more