விஜய் திருச்சி பிரச்சாரம்.. தவெக-விற்கு 23 கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி!

திருச்சியில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு 23 கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஏ அணியில் ரோகித், கோலி.. பிசிசிஐ அதிரடி!

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதும் தங்களது டி20 ஓய்வை அறிவித்தனர். பின்னர் இந்தாண்டு மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தனர். இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட திட்டமிட்டிருக்கின்றனர். அவர்கள் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை நீடிக்க விருப்புகின்றனர். ஆனால் அப்போது அவர்களுக்கு 39, 40 வயதாகிவிடும் என்பதால் அவர்களை பிசிசிஐ அணியில் வைத்திருக்குமா? என்பது … Read more

Sivakarthikeyan: "ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க" – மதராஸி படத்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி, திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் மதராஸி. இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தியதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். Murugadoss – Madharasi Sivakarthikeyan ட்வீட் இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், “மதராஸி படத்துக்காக என் முன்னுதாரணமான, என் தலைவர் ரஜினிகாந்த் சாரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றேன்” எனக் கூறியுள்ளார் சிவா. மேலும் ரஜினிகாந்த் தெரிவித்த வார்த்தைகளையும் பதிவில் குறிப்பிட்டுள்ளார். “ஓ … Read more

ஒசூர் மாநாடு – கிருஷ்ணகிரி மக்கள் நலத்திட்டங்கள்! இரண்டு நாள் பயணமாக நாளை கிருஷ்ணகிரி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஒசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நாளை கலந்துகொள்ளவும், நாளை மறுநாள்,  கிருஷ்ணகிரியில்  மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும்,  இரண்டு நாள் பயணமாக நாளை காலை  கிருஷ்ணகிரி புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக  நாளை (வியாழக்கிழமை) கிருஷ்ணகரி மாவட்டத்திற்கு செல்கிறார். காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓசூர்  தனேஜா விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் சிறப்பான … Read more

Jeep Price GST cut list – ஜிஎஸ்டி 2.0., ரூ.4.84 லட்சம் வரை குறையும் ஜீப் எஸ்யூவிகள்.!

ஜீப் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்ற காம்பஸ், மெரிடியன், ரேங்கலர் மற்றும் கிராண்ட் செரோக்கீ உள்ளிட்ட மாடல்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ரூ.2,16,000 லட்சம் முதல் ரூ.4,84,000 வரை குறைய உள்ளது. இந்நிறுவனம் முந்தைய ஜிஎஸ்டி வரி வதிப்பின் கீழ் 28% GST+ 17 % முதல் 22% வரியை பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் என மாறுபட்ட விகிதங்களை கொண்டிருந்த நிலையில், தற்பொழுது 40 % ஆக மாறியுள்ளது. Jeep GST Price … Read more

மயிலாடுதுறை: சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி; குடிநீருக்கு அல்லாடும் மக்கள்.. நிலை மாறுமா?

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்குடி கிராமத்தில் 30 ஆண்டுகள் பழைமையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. பூங்குடியைச் சுற்றியுள்ள பெரியத்தெரு, காலனித்தெரு, பள்ளிக்கூடத்தெரு, நடுத்தெரு, புதுத்தெரு பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சேர்ந்த மக்கள், இதன்மூலம் குடிநீர் பெற்று பயனடைகின்றனர். இந்த நிலையில், இந்த நீர்த்தேக்கத் தொட்டியானது சிதிலமடைந்து, விரிசல்கள் ஏற்பட்டு, அபாயகரமாக இருப்பது, மக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தொட்டியை ஒட்டியே அங்கன்வாடி மையமும் அமைந்திருப்பதால், அங்கு … Read more

“இயலாமையால் பொறாமை…” – செங்கோட்டையன், தினகரன் மீது ஆர்.பி.உதயகுமார் தாக்கு

மதுரை: “வயிற்று எரிச்சல் மனிதர்களுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும்” என்று டிடிவி தினகரன், செங்கோட்டையன் விமர்சனங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய: “எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக 52 ஆண்டுகள் கடந்து வெற்றி வரலாறு படைத்து வருகிறது. தற்போது மீண்டும் அதிமுக ஆட்சி மலர, பழனிசாமி இரவு, பகலாக உழைத்து வருகிறார். அதிமுக – பாஜக கூட்டணியில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த முடியுமா என்று முதல்வர் ஸ்டாலின் பார்க்கிறார். அதிமுகவில் குட்டையை … Read more

அரசியலமைப்பை பாதுகாக்க ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதலை மறுக்க முடியும்: மத்திய அரசு வாதம்

புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கான ஒப்புதலை ஆளுநர் மறுக்க முடியும் என்றும், அரசியலைப்பை பாதுகாக்கும் நோக்கில் அவர் இவ்வாறு செயல்பட முடியும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதத்தில் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் மற்றம் குடியரசு தலைவர் ஆகியோருக்கு கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதில் கோரி … Read more

பிரான்ஸில் தொடங்கிய 'அனைத்தையும் தடுப்போம்' போராட்டம் – 200 பேர் கைது

பாரிஸ்: பிரான்ஸ் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், ‘அனைத்தையும் தடுப்போம்’ என்ற பிரச்சாரத்தை செயல்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பேய்ரு தலைமையிலான அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதையடுத்து பிரான்சுவா பேய்ரு பதவியை ராஜினமா செய்தார். புதிய பிரதமராக செபஸ்டியன் லெகோர்னுவை அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘அனைத்தையும் தடுப்போம்’ என்ற பிரச்சாரம் சமூக ஊடகங்கள் … Read more

காந்தி கண்ணாடி படம் பல ஊர்ல ரிலீஸ் ஆகல! பாலா பேச்சு..

Gandhi Kannadi KPY Bala : பிரபல நடிகர் பாலா, சமீபத்தில் காந்தி கண்ணாடி எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சில ஊர்களில் ரிலீஸாகவில்லை என்று மக்கள் கூறியதாக பாலா ஒரு வீடியோவை வெளியிட்டார்.