விருதுநகர்: நடைபெறாத செப்டம்பர் மாதத்திற்கான நகராட்சி கூட்டம்; அடிப்படை வசதிகளுக்குச் சிக்கல்

விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சம் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குப்பை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இதேபோல் குழாய்கள் பழுது நீக்கும் பணிகளும் தனியார் மூலம் சீர் செய்யப்படுகின்றன. மேலும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அதிலும் பல வார்டுகளுக்கு முழுமையாக தாமிரபரணி குடிநீர் கிடைக்கவில்லை. கழிவு நீர் வடிகால் கட்டும் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. மேலும், … Read more

கரூர் சம்பவம்: தவெக நிர்வாகிகளுக்கு அக்.14 வரை நீதிமன்றக் காவல்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் விபி மதியழகன் மற்றும் தவெக தொண்டர் பவுன்ராஜ் ஆகியோரை அக்டோபர் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 பிரிவுகளின் கீழ் வழக்கு: கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு … Read more

அக்.1-ல் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: தலைமை விருந்தினராக பங்கேற்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அக்டோபர் 1-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1-ம் தேதி புதுடெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு … Read more

பெண்களை தொட்டு தொட்டு பேசும் புகழ்..அவர் மனைவி கொடுத்த நச் பதில்! என்ன தெரியுமா?

Pugazh Wife Benzi Reply On CWC 6 : பிரபல நகைச்சுவை கலைஞரும் நடிகருமான புகழ், பெண்களை தொட்டு பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அதற்கு அவரது மனைவி கொடுத்திருக்கும்  பதில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கரூருக்கு திரும்ப போகாதது ஏன்? மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விஜய்!

TVK Vijay Response To Karur Stampede Issue : கரூரில் 41 பேர் உயிரை காவு வாங்கிய தவெக தேர்தல் பரப்புரை பிரச்சனையில், விஜய் முதன்முறையாக வாய்திறந்துள்ளார்.

Flipkart Big Billion Days Sale 2025: பிராண்டட் முதல் பட்ஜெட் போன் வரை.. அதிரடி தள்ளுபடிகள்

Flipkart Big Billion Days Sale 2025: ஒவ்வொரு ஆண்டும், ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்காக வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஆண்டும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் அமோகமாக நடந்துகொண்டிருக்கின்றது. பல வித பொருட்களில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டாலும், ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் தள்ளுபடிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. Add Zee News as a Preferred Source பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 ஃப்ளாக்ஷிப், மிட்-ரேஞ்ச், பட்ஜெட் போன்கள் என … Read more

பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம்! த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்…

சென்னை: வரும் வாரங்களில் விஜயின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம்: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதுடன், அவரது நிகழ்ச்சிகளுக்கான இடங்களை கொடுப்பதிலும் சிக்கல்கள் தொடர்கிறது. இதன் காரணமாக, திருச்சி அருகே கரூரில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயரிழந்த சோகம் அரங்கேறி உள்ளது. இதில், திமுக அரசு மீது ஒரு தரப்பும், தவெக … Read more

கரூரில் 41 பேர் பலியான சம்பவம்: தவெக விஜய் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் கரூரில் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசாரக் கூட்டத்தின்போது நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனால், “விஜய்யைக் கைது செய்து தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். உயர் நீதிமன்றம் மதுரை கிளை அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் பேரணிகள், … Read more

“காவல்துறையிடம் இருந்தே பெண்களை காப்பாற்ற வேண்டிய நிலை” – இபிஎஸ் வேதனை

சென்னை: மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த … Read more

‘கோயில்முன் இந்து அல்லாதோர் பிரசாதம் விற்றால் தாக்கலாம்’ – பிரக்யா தாக்கூர் பேச்சால் சர்ச்சை!

புதுடெல்லி: “கோயில்கள் முன்பாக இந்து அல்லாதோர் பிரசாதப் பொருட்கள் விற்றால் அவர்களை உதைக்கலாம்” என முன்னாள் பாஜக எம்.பி.யும், பெண் துறவியுமான பிரக்யா தாக்கூர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ம.பி.யின் தலைநகரான போபாலின் முன்னாள் பாஜக எம்.பி.யாக இருந்தவர் துறவி பிரக்யா சிங் தாக்கூர். இவர், நேற்று முன்தினம் போபாலின் ஒரு நவராத்ரி விழாவில் கலந்துகொண்டு பேசினார். இது, பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்டது. இதில் முக்கிய விருந்தினரான பெண் … Read more