'விரைவில் மாற்றம், சற்று பொறுத்திருங்கள்' – அண்ணாமலை சஸ்பென்ஸ்

கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “அமலாக்கத்துறை இயக்குநர், தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் நகராட்சி நிர்வாகம் நீர் வழங்கல் துறையில் அமைச்சர்  ரூ. 888 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதை கூறி ஆதாரத்துடன் வழக்குப்பதிவு செய்ய சொல்லியுள்ளனர். அண்ணாமலை டிஜிபி உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். அமைச்சர் சக்கரபாணியின் துறையில் ரூ.160 கோடிக்கும், அமைச்சர் நேருவின் துறையில் ரூ.888 கோடிக்கும் ஊழல் நடந்துள்ளது. முதலமைச்சர் அதைப் … Read more

தமிழக அரசின் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைமை சட்டம், எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் உயர்வு உட்பட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் கடந்த அக்.14 முதல் அக்.17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதில் தனியார் பல்கலைகள், சித்த மருத்துவ பல்கலை. உருவாக்கும் சட்டம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட … Read more

“இந்திய மதிப்புகளைப் பற்றி எப்போதும் அச்சமின்றிப் பேசும் அமைப்பே ஆரிய சமாஜம்” – பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்திய மதிப்புகளைப் பற்றி எப்போதும் அச்சமின்றி பேசும் அமைப்பு ஆரிய சமாஜம் என்றும், அதன் நிறுவனரான தயானந்த சரஸ்வதி பெண்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஆரிய சமாஜத்தின் 150-ம் ஆண்டை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஆரிய சமாஜம் நிறுவப்பட்ட 150 ஆண்டுகள் என்பது சமூகத்தின் ஒரு பிரிவினரோடு மட்டும் தொடர்புடையது அல்ல. மாறாக, அது முழு நாட்டின் வேத … Read more

வங்கக்கடலில் அடுத்த சம்பவம்.. உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வெளுக்குமா கனமழை?

Tamil Nadu Weather Update: சமீபத்தில் மோந்தா புயல் புரட்டி எடுத்த நிலையில், மீண்டும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

நவம்பர் இல் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்கள்.. பட்டியலை சரிப்பார்க்கவும்

நவம்பர் 2025 தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக இருக்கப் போகிறது, ஏனெனில் பல பெரிய நிறுவனங்கள் புதிய மற்றும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றன. OnePlus 15, Lava Agni 4, iQOO 15, மற்றும் Realme GT 8 Pro போன்ற ஸ்மார்ட்ஃபோன்கள் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளன. அவை சக்திவாய்ந்த செயலிகள், வலுவான பேட்டரிகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட காட்சிகள் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். சில ஸ்மார்ட்ஃபோன்கள் ஏற்கனவே உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, … Read more

எங்கள் உத்தரவுமீது நடவடிக்கை எடுக்காமல் தூங்குகிறார்கள்! தெருநாய்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்

‘டெல்லி: தெருநாய்கள் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து தலைமைச்செயலாளர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது  என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம்,  எங்கள் உத்தரவுமீது நடவடிக்கை எடுக்காமல் தலைமைச்செயலாளர்கள தூங்குகிறார்கள் என கடுமையாக சாடியதுடன், அவர்கள் நேரில் ஆஜராகியே தீர வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லி தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவது  தொடர்பான வழக்கில் கடந்த ஆக. 22 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.  பிறப்பித்தது, அதன்படி,  … Read more

“இனவெறி பாகுபாட்டின் உச்சம்'' – மோடியின் பீகார் பிரசார பேச்சுக்கு சீமான் கண்டனம்

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், மறுபக்கம் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாபந்தன் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், … Read more

ஸ்டாலின் மீது குறிவைத்து ‘ஆப்ரேஷன் எம்கேஎஸ்’ – மோடியின் ‘பிஹார்’ கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி எதிர்வினை

சென்னை: “பொறாமை பயத்தின் காரணமாகத்தான் முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து, ‘ஆப்ரேஷன் எம்கேஎஸ்’ என்ற அடிப்படையில் ஆரம்பித்துவிட்டார்கள்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியது: “மோடியின் பேச்சு, பிஹார் மாநில மக்களிடையே தமிழர்கள் மீது அவநம்பிக்கையையும், விரோத மனப்பான்மையையும் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. உத்தரப் பிரதேசம், பிஹார், ஒடிசா உள்ளிட்ட பல வட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டில் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொய் பிரச்சாரத்தின் மூலமாக வாக்குகளைப் … Read more

“எங்கள் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளது என்டிஏ” – தேஜஸ்வி விமர்சனம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்கள் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவை என தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், “அவர்கள் எல்லாவற்றையுமே காப்பி அடிக்கிறார்கள். அவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் எங்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவையே. சமீபத்தில் நாங்கள் … Read more

காதலுக்காக தாயை கொன்ற 16 வயது சிறுமி.. பெங்கரூரில் அதிர்ச்சி! என்ன நடந்தது?

பள்ளி வயதிலுள்ள ஒரு மாணவி, தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது.